ஞாயிறு, 31 ஜனவரி, 2021

டெல்லி விவசாயிகள் போராட்டம் . போலீசின் அடக்குமுறையை எதிர்த்து களமாடும் சீக்கியர்கள்

தீக்கதிர் : சிங்கமாய் கர்ஜிக்கும் இந்த ஜாக்சீர் சிங் யார் ? இந்திய கார்ப்பரேட் ஊடகங்கள் முழுவதும் நேற்று வன்முறையாளர் போன்று சித்தரித்து திரும்ப திரும்ப காட்டிய காட்சி... இந்த ஜாக்சீர் சிங்கை போலீசும், சங்பரிவார் கும்பலும் இணைந்து கொலை வெறி தாக்குதல் நடத்திய காட்சிதான்.. இந்த ஜாக்சீர் சிங் ஏதோ கையில் வாலை கொண்டு வெறி கொண்டு பல தலைகளை சீவ செல்கிறார். அதனால் அவரை காவல்துறையினர் தடுத்து பல தலைகள் உருள்வதை காப்பாற்றினர் என்பது போன்ற தோற்றத்தையே திரும்ப திரும்ப ஊடகங்கள் உருவாக்கின. ஆனால் ஒரு போதும் ஊடகங்கள் முழு உண்மையையும் சொல்லவில்லை.
உண்மையில் நடந்தது என்ன ?
பஞ்சாப் மாநிலம் பந்தர் என்ற பர்னாலா கிராமத்தை சேர்ந்தவர் ஜாக்சீர் சிங். இவரை அந்த கிராமத்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அன்பாக ஜாகிபாபா என்றே அழைத்து வருகின்றனர். 
காரணம் எந்த பொது நல காரியமாக இருந்தாலும் தன்னலம் கருதாமல் ஓடோடி எந்த பணியையும் செய்யக்கூடியவர். அதனாலேயே இவர் மீது அந்த கிராமத்து மக்களுக்கு அவ்வளவு அன்பு. மோடியின் புதிய வேளாண் சட்டங்களால் ஒட்டு மொத்த விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகுமே என்ற நிலையில், கிராமத்தினருடன் இணைந்த போராட்ட கலத்தில் ஆரம்பம் முதல் இருந்து வருபவர். குறிப்பாக தில்லி சலோ போராட்டம் துவங்கி தில்லியை அடைந்த நவம்பர் 26 முதல் தில்லியில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர். தில்லிக்கு வரும் போதே திரும்பினால் வெற்றியுடனே திரும்புவேன் என்று உறுதி மிக்க போராட்டத்தை முன்னெடுத்து செல்வதில் எப்போதும் முன்னிலையில் நின்றவர்தான் இந்த ஜாக்சீர்சிங். குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு தினமும் உணவு வழங்கும் சமூக இலவச சமையலறை கூடத்தில் (communal free kitchen ) உணவு சமைத்து பரிவோடு பரிமாறி வருபவர்.No photo description available.
வழக்கம் போல் நேற்று காலையில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த பகுதியில் காவல்துறையின் ஆதரவோடு புகுந்த ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் கும்பல் விவசாயிகள் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்தியது. கூடாரங்களை பிரித்து வன்முறையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் ஜாக்சீர் சிங் உள்ளிட்ட குறைந்தளவு விவசாயிகளை இருந்தனர். இதனால் தன் விவசாயிகளை சங்கி கும்பலின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வாலை எடுத்துக் கொண்டு சென்றார். உடனே காவல்துறையினர் தீவிரவாதியை பிடிப்பது போன்று சுற்றி வளைத்து தாக்கியது. அப்போது ஜாக்சீர் சிங் நினைத்திருந்தால் காவலர்களை தாக்கியிருக்க முடியும்.
ஆனால் தாக்கவில்லை காரணம் காவலர்கள் விவசாயிகளுக்கு எதிரியல்ல. தங்களை தாக்க வருபவர்களை சங்கி கும்பலை தடுத்து தற்காப்பு பணியில் ஈடுபடுவதே அவரது வேலை.. ஆனால் அவரின் நோக்கத்தை தெரிந்தே காவல்துறையினர் சுற்றி வளைத்து கொடிய மிருகத்தை அடிப்பது போன்று அடித்து நொறுக்கினர். காவல்துறையினரோடு சேர்ந்து சங்பரிவார் குண்டர்களும் இணைந்து தாக்கினர்.
ஆனாலும், உடையை கலைந்தும், மண்டையை உடைத்தும், எலும்புகள் முறியுமளவிற்கு தாக்கினர். ஆனாலும் ஜாக்சீர் சிங் அசர வில்லை. மண்டை உடைந்து முகம் வழியாக சாரை சாரையாக வழியும் ரத்தத்தையும் பொருட்படுத்தாமல் வெறிபிடித்தவர்களின் பிடியிலிருந்து மீண்டு எழுந்து சிங்கம் போன்று கர்ஜித்து, சிறு புன்னகையோடு விவசாயிகளின் பந்தலுக்கு சென்றார்.
அதனை பார்த்த மத்திய காவல் படையினர் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றனர்.
பயம் என்பது அவரது அகராதியிலேயே இருந்தது இல்லை என்பது அப்போது அந்த ஆர்எஸ்எஸ் கும்பல் உணர்ந்திருக்கும். ''விவசாயிகள் ஒன்றும் கூலிக்கு மாறடிக்கும் சங்கி கூட்டமல்ல. தங்களின் உரிமைக்காக உயிரையும் கொடுத்து தேசத்தை காத்து வரும் உண்மையான தேச பக்தர்கள் நாங்கள். இந்த சங்பரிவார் பதர்களை கண்டு ஒரு போதும் நாங்கள் அஞ்சப்போவதில்லை வெற்றியுடனே திரும்புவோம்'' என்று கூறியபடி ஜாக்சீர் சிங் வழக்கம் போல் போராட்ட களத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு உணவு சமைத்து பரிமாறும் வேலையில் அதே புன்னகையோடு வளம் வருகிறார்.
நன்றி:தீக்கதிர்

 

கருத்துகள் இல்லை: