சந்திப்புகள் நிகழும். ஒன்றினைவார்கள். ஏனென்றால் அடிமைகளின் சுபாவம் ஒன்று தான். சுயலாபத்திற்காக சுயமரியாதை இழந்து மண்டிபோடுவது.. அது இவர்களுக்கு ஆரம்பம் முதலே கைதேர்ந்த கலை.
உடனே அந்த பக்கமிருந்து மாலன்களும், சுமந்த்களும் கூடவே முருகன்களும் இணைப்புக்கு பின்னர் அதிமுக வீழ்த்த முடியாத கட்சியாக உருவெடுத்துள்ளது என்று வாசிப்பார்கள். பத்திரிக்கை துறையினரும் நடுநிலையாளர்களும் அதிமுகவின் இணைப்பு ராஜதந்திரம் என்றெல்லாம் பேசி தேர்தலில் திமுகவின் வெற்றி கடினமானது என்ற தோற்றத்தை ஊதுகுழலாகி விவாதம் நடத்துவார்கள்.
பிகு: தயவுசெய்து அதிமுக போன்ற கட்சிகள் அழிவது, தமிழகத்திற்கு நல்லதல்ல என்று உருட்டுவோர் இத்தனை வருடங்களாக ஆளும் பாஜக அரசை அதிமுக எத்தனை முறை கண்டித்துள்ளது எந்த மாநில உரிமையை காத்துள்ளது என்பதை தெரிவிக்கவும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக