திங்கள், 16 நவம்பர், 2020

லெஸ்லியாவின் தந்தை முன்னாள் ஈழப்போராளி தோழர் மரியநேசன் காலமானார்

Image may contain: 2 people
தோழர் மரியநேசன் 1983 தொடங்கி ஆயுத போராளியாக தமிழகம் மற்றும் கஸ்மீர் உத்தரபிரதேசம் பகுதிகளிள் ஆயுத போர் பயிற்சிகள் எடுத்து ஒரு முக்கியமான முகாமிற்கு தளபதியாக1986+ 1987 வரை இருந்து .தன்னைப்போன்று இரட்டை சகோதரனாக இருந்த தனது சொந்த சகோதரனை இந்தியன் ஆமி காலத்தில் புலிகளுக்கு பலி கொடுத்து.
அமைப்புக்களிள் இருந்து பிரிந்து நிப்பது என்பது இயல்பாக நடந்த காலம் அது. 
 
எல்லோர் போலவும் தனது வாழ்கையை ஈழ போராளியாக வழர்ந்த குற்றத்திற்காக எதையும் எக்கட்டத்திலும் காட்டிக்கொள்ளாமல் வடக்கு கிழக்கு தெற்கு எங்கும் தனது குடும்ப வாகனத்தில் ஓடி ஓடி உழைத்து வாழ்ந்து தனது சொந்த உழைப்பில் திருமணம் வாழ்கை பிள்ளைகள் கனடா வரை சென்று .பெண் பிள்ளைகள் என்பதால் கடும் பாசத்தில் ஊறி கிடந்து தனது உடல் நலனை சிறிதும் அக்கறை கொள்ளாது பிள்ளைகளுக்காக என்று நினைத்து தனது குடும்ப போராளியாக மாற்றி வாழ்ந்த போராளி தோழர் .மரியநேசன்.மறைந்த செய்தி மிகவும் என்னை துயரில் ஆழ்த்தியது .நான் அவனுடன் தொலை பேசியில் பேசும் போதும் தனது குடும்ப அக்கறை பற்றியே பேசுவன். கடினமான காலங்களிள் ஒன்றாக வாழ்ந்தோம் என்பதை மனம் விட்டு பேசுவோம்.
ஈழ தேசிய ஐனநாயக முன்னனி endlf என்ற ஈழப்போராட்ட அமைப்பில் தன்னை மாசுபடாத போராளியாக நிலை நிறுத்திக்கொண்ட போராளியாக செயள்பட்டவன்.
ஈழத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தத்த காலத்தின் பின் தமிழ் ஆயுத அமைப்புக்களின் உள் முறண்பாட்டு உச்ச கட்டம்.ஈழப் போராட்டம் சாத்தியமற்றது என்பதை நன்கு தெரிந்து கொண்டு ஆயிரக்கணக்கான போராளிகள் இயக்க முறன்பாடுகள் எதுகும் இல்லாமல் சுதந்திரமாக வெளியேறி சென்ற காலம் அது .தேடித் தேடி ஆயுத அமைப்புக்கள் இளைஞர்களை சுட்டு தள்ளிய காலமும் அதுவே. அதில்தான் தனது மிகவும் பாசமான சகோதரனையும் இளந்தான்.
எனது சக தோழனாக நமது நாடு எமது கிராமம் செட்டிகுளம் இப்படி விடுதலை இல்லாமல் போன கடந்த கால நினைவுகளை பற்றி பேசும் போது எம்மை ஈழம் பயன் படுத்தவில்லை அது எங்கள் மன்னின் தலை விதி அன்னிய நாட்டில் குப்பை கொட்ட வேண்டும் என்பதும் எமது விதி. இந்த விதி அத்தனை ஆயுத அமைப்புக்களும் விட்ட ஆயுத முரண்பாடு மோதல்கள் என்பதை தனது வெளிப்படை தன்மையுடன் தனக்குள் இருக்கும் உள்ளக்குமறலுடன் பனிவாக பேசுவான்.அவனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள் .
வீரர்கள் மடிவதில்லை என்பது பொய் ஆகாது . பல்லாயிரம் ஈழப் போராளிகள் தோழர்கள் எது வித அடையாளங்களும் இல்லாமல் உலகம் பூராக மடிகின்றார்கள் அந்த வகையில் தந்தையின் லட்சிய பயணத்தில் பிள்ளைகளின் பங்கு என்பது பிள்ளைகளின் உணர்வை பொறுத்தது .அந்த வகையில் தோழர் . மரியநேசன்  நாட்டு பற்று நினைவுகள் என்றும் சாத்தியப்பட கூடியவையாக இருக்க கூடியவை அந்த நிலை வரும் காலம் மாறும் என்பதை உறுதிப்பட கூறி .துன்பத்தில் தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொள்ள என்னிடம் வார்த்தை இல்லை. நாமும் மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியவர்கள் என்பதை தவிர. ப.வரதன்(காஸ்ரோ) 

கருத்துகள் இல்லை: