திங்கள், 20 ஜூலை, 2020

அசாம் வெள்ளம்: 108 விலங்குகள் பலி! அசாம் வெள்ளம்: 108 விலங்குகள் உயிரிழப்பு


அசாம் வெள்ளம்: 108 விலங்குகள் பலி!மின்னம்பலம் : அசாமில் பெய்த கனமழையால் காசிரங்கா வன உயிரியல் பூங்கா வெள்ளத்தில் மிதக்கிறது.
கனமழையால் நாகோன் மாவட்டத்தில் உள்ள காசிரங்கா தேசிய உயிரியல் பூங்காவில் 90 சதவிகிதம் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 430 சதுர கிமீ பரப்பளவு உள்ள இந்த பூங்காவை, உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ஒற்றைக்கொம்பு உடைய காண்டாமிருகங்கள் இங்கு அதிகளவு வசிக்கின்றன.
வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விலங்குகள் வெளியேற முடியாமல் தத்தளிக்கின்றன. இந்த வெள்ளத்தில் சிக்கி 9 காண்டாமிருகங்கள் உள்பட 108 விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், காடுகளில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி ஊருக்குள் புகுந்துள்ளன. யானைகளும், காண்டாமிருகங்களும் சாலைகளில் ஆங்காங்கு கூட்டமாக நின்று தவிக்கின்றன.

இது குறித்து காசிரங்கா பூங்காவின் இயக்குநர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காசிரங்கா பூங்காவின் 90 சதவிகிதப் பகுதி இன்னும் வெள்ளத்தில் மூழ்கியே காணப்படுகிறது, வெளியேறி சென்ற காண்டாமிருகங்கள் மீண்டு விட்டன.
இறப்பு எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 9 காண்டாமிருகங்கள் 108 உட்பட விலங்குகள் பலியாகியுள்ளன. நாங்கள் 136 விலங்குகளைக் காப்பாற்றியுள்ளோம். வெள்ளம் வடியத் துவங்கியிருப்பதால் இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என்று நினைக்கிறோம். சரியான பலி எண்ணிக்கைக்காக எல்லாப் பகுதிகளிலும் கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறோம்” என்கிறார்.
ராஜ்</

கருத்துகள் இல்லை: