மோடி அரசின் அறிவிப்பை இந்துத்துவத்தின் மரண அறிவிப்பாக மாற்றுவோம்!
மாட்டுக்கறி தடைக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டச் செய்திகளை இங்கே நேரலையாக தருகிறோம்.
தீயைத் தீயால் அணைக்கும் உத்தியைப் போல, தனது மூன்றாண்டு ஆட்சியின் படுதோல்விப் பட்டியலை மறைக்க புதிய பிரச்சினை ஒன்றைக் கிளப்பிவிடும் வகையிலும், பார்ப்பனப் பண்பாட்டை திணிக்கும் விதத்திலும், மோடி அரசு கால்நடைச் சந்தைகளை “முறைப்படுத்தும்” புதிய விதிகளை வெளியிட்டிருக்கிறது. “கால்நடைகளைப் பாதுகாப்பது, இறைச்சி உண்போருக்கு தரமான இறைச்சி கிடைக்கச்செய்வது” என்ற நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகத்தான் இந்த புதிய விதிகளை கொண்டு வந்திருப்பதாக மோடி அரசு கூறிக்கொள்கிறது.
இது கடைந்தெடுத்த பொய். இந்த அறிவிக்கையின் நோக்கம், மாட்டிறைச்சி தொழிலையும், தோல் தொழிலையும், கால்நடை வைத்திருக்கும் சிறு விவசாயிகளையும் சிறிய பால் வியாபாரிகளையும் முற்றாக அழிப்பதேயாகும். இவர்களுடைய வாழ்வுரிமையைப் பறிப்பது மட்டுமின்றி, ஏழைகளின் புரத உணவான மாட்டிறைச்சி என்பதையே சந்தையிலிருந்து முற்றுமுழுதாக ஒழித்துக்கட்டுவதுதான் இந்த அறிவிக்கையின் நோக்கம்.
மோடி அரசின் இந்த அறிவிக்கையை வேறொரு கோணத்திலும் நாம் புரிந்து கொள்ளலாம். பசுப் பாதுகாப்பு, மாட்டிறைச்சி தடை என்ற ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கொள்கையை இந்து மதத்தைச் சார்ந்த ஆகப்பெரும்பான்மையான மக்கள், நிராகரித்து விட்டார்கள் என்பதற்கு சான்றுதான், அதனை மறைமுகமாகத் திணிக்கின்ற இந்த புதிய விதிகள்.
பசுக்கொலையாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு, அக்லக், பெஹ்லு கான் போன்ற எண்ணற்ற முஸ்லிம்களும், துலினா, ஊனா போன்ற பல இடங்களில் தலித் மக்களும் இந்துத்துவ வெறியர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள், கொல்லப்பட்டிருக்கிறார்கள். இருந்த போதிலும் பசு சென்டிமென்டைக் கிளறிவிட்டு, சாதி இந்துக்களைத் தன் பக்கம் ஈர்க்க சங்க பரிவாரத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
“இந்து” விவசாயிகள் தங்களிடமுள்ள பயன்படாத மாடுகளை வெட்டுக்கு விற்பதை ஆர்.எஸ்.எஸ் கும்பலால் தடுக்க முடியவில்லை. அதிக விலை கொடுத்து ஆட்டுக்கறி மற்றும் கோழிக்கறி வாங்க முடியாத இந்துக்கள், மாட்டுக்கறி உண்ணும் பழக்கத்துக்கு மாறிக்கொண்டு வருவதையும், பார்ப்பன பனியா கும்பலால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அக்லக்கை கொன்றது போல, மாட்டை விற்கும் விவசாயிகள் மற்றும் பால்மாடு வளர்ப்பவர்களையும், மாட்டிறைச்சி தின்னும் இந்துக்களையும் தனித்தனியே வெட்டிக் கொல்வது சாத்தியமில்லை என்பதால், ஒரே வெட்டில் அனைவரையும் கொல்லும் விதமாக இந்த புதிய விதிகளை வெளியிட்டிருக்கிறது மோடி அரசு. இந்த விதிகளை, இசுலாமியர்கள், கிறித்தவர்கள் மற்றும் தலித் மக்களுக்கு மட்டுமே எதிரானது என்று புரிந்து கொள்வது தவறு. இது பார்ப்பனப் பண்பாட்டை நிராகரிக்கின்ற, பெரும்பான்மை இந்து சமூகத்தினருக்கும் சேர்த்து மோடி அரசு வழங்கியுள்ள மரண தண்டனை.
நாடு முழுவதும் மாட்டுக்கறியைத் தடை செய்ய வேண்டும் என்ற தமது நோக்கத்தை, பாஜக வினரால் பல மாநிலங்களில் நேரடியாக நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. பாஜக அல்லாத மற்ற மாநில அரசுகளின் அதிகாரத்தின் வழியாகவும் தனது நோக்கத்தை ஆர்.எஸ்.எஸ் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. எனவேதான் கொல்லைப்புறமாக மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மோடி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
மோடி அரசின் அறிவிப்பை இந்துத்துவத்தின் மரண அறிவிப்பாக மாற்றுவோம்!
மாட்டுக்கறி தடைக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டச் செய்திகளை இங்கே நேரலையாக தருகிறோம். vinavu

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக