வியாழன், 23 ஏப்ரல், 2015

பழைய Hindi பாடல்களை புதிய படங்களில் பயன்படுத்த பணம் கொடுக்கவேண்டும்! எல்லாரும் MSV மாதிரி நல்லவங்களா?


கோலிவுட் படங்களில் 60களில் நிகழும் சம்பவங்களை மையமாக கொண்ட கதைகள் உருவாக்கப்பட்டால் அதில் விஸ்வநாதன் ராமமூர்த்தி கே வி மகாதேவன் பாடல்கள் பின்னணியில் இடம்பெறுகிறது. தவிர புதிய படங்களிலும் அவரது பாடல்கள் அவ்வப்போது பயன்படுத்தப்படுவதுடன் ரீ மிக்ஸும் செய்யப்படுகிறது. தற்போது பாலிவுட்டிலும் இந்த விவகாரம் தலைதூக்கி இருக்கிறது. ‘மார்கெரிட்டாவித் ஏஸ்டிரா’ படத்தில் தோன்றும் சயானி குப்தா, ஒரு காட்சியில் ‘டோலி சஜாகேரக்னா...’ பாடலை முணுமுணுப்பதுபோல் சீன் அமைக்கப்பட்டிருந்தது. படம் ரிலீஸ் ஆகும் கடைசி நேரம் வரை இதுபற்றி யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த சமயத்தில் திடீரென்று எச்எம்வி சரிகம நிறுவனம் குறிப்பிட்ட பாடலுக்கான காப்பிரைட் உரிமை தங்களிடம் உள்ளதால் படத்தில் அப்பாடலை முணுமுணுப்பதுபோல் இடம்பெற செய்ய வேண்டுமென்றால் குறிப்பிட்ட தொகையை தர வேண்டும் என்றது. இது பட தயாரிப்பாளருக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
இதற்கு பேச்சுவார்த்தை மேற்கொண்டால் அது பட ரிலீஸை பாதிக்கும் என்பதால் குறிப்பிட்ட பாடலின் வரிகளை படத்திலிருந்து நீக்கிவிட்டார் தயாரிப்பாளர். இதுபற்றி சென்சார்போர்டு தலைவர் நிஹ்லானி கூறும்போது ‘இனிமேல் பழைய பாடல்களை புதிய படத்தில் பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கான உரிமையை சம்மந்தப்பட்டவரிகளிடமிருந்து பெற வேண்டும்’ என்றார். - See more at: .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை: