ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

ஆழ்துளைகின்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமி மரணம்

 குழியை சாதாரண கோணிப்பையால் மூடிவிட்டு வீடு சென்ற கொடியவர்கள் போர்வெல் குழாய்க்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்த, சிறுமி, 15 மணி நேரம் கழித்து மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பகுதியை சேர்ந்தவர் பாண்டி, 35. இவர், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, சூரியபாலி என்ற இடத்தில், சக்திவேல் என்பருக்கு சொந்தமான முதலைக்காட்டு தோட்டத்தில், தந்தை முத்துகாளை, 65, மனைவி பெருமாயி, 32, மகள்கள் முத்துலட்சுமி, 7, விஜயலட்சுமி, 5, தனலட்சுமி, 2, ஆகியோருடன் தங்கி, விவசாய வேலை செய்து வருகிறார். தோட்டத்தில், கடந்த, 25ம் தேதி, போர்வெல் குழாய் அமைக்கும் பணி நடந்தது. முதலில், 12 அடி ஆழம் வரை, எட்டு அங்குல அகலத்திலும், பிறகு, 900 அடிவரை, ஆறு அங்குல அகலத்திலும், போர்வெல் தோண்டப்பட்டது. தண்ணீர் வராததால், குழியை மண்ணால் மூடாமல், சாதாரண சாக்குப்பை கொண்டு மூடி விட்டு சென்றுள்ளனர்.
நேற்று காலை, 8 மணிக்கு, தனது தாத்தா முத்துகாளையுடன், சிறுமி முத்துலட்சுமி, தோட்டத்துக்கு முருங்கைக்காய் பறிக்கச் சென்றார். எதிர்பாராத விதமாக, போர்வெல்லுக்காக தோண்டப்பட்ட குழியில், சிறுமி முத்துலட்சுமி தவறி விழுந்தார். அரவக்குறிச்சி தீயணைப்பு படை அதிகாரி கோமதி தலைமையில், வீரர்கள் விரைந்து வந்தனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சிறுமி முத்துலட்சுமிக்கு, டியூப் வழியாக ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது.
சிறுமியை மீட்க, மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம், பக்கவாட்டில் குழி தோண்டும் பணி விறுவிறுப்பாக நடந்தது. பாறையாக இருந்ததால் இப்பணி பாதிக்கப்பட்டது. பாறைகள் உடைக்கும் இயந்திரமும் வரவழைக்கப்பட்டு பணி நடந்தது. ஆயினும், மாலை, 6 மணிவரை, சிறுமி முத்துலட்சுமி மீட்கப்படவில்லை. பெற்றோரும், மற்றவர்களும், மேலேயிருந்து முத்துலட்சுமி என்று குரல் கொடுத்தபடியே இருந்தனர். மதியம், ஒரு மணி வரை குழந்தை முத்துலட்சுமி அழும் சத்தம் கேட்டதாக, அங்கிருந்தவர்கள் கூறினர். பின்னர், சத்தம் எதுவும் கேட்கவில்லை.

கரூர் மாவட்ட அதிகாரிகள், சம்பவ இடத்தில் முகாமிட்டு, மீட்பு பணியை முடுக்கி விட்டனர். இந்நிலையில், 15 மணி நேர போராட்டத்துக்கு பின், இரவு, 10.50 மணியளவில், சிறுமி மீட்கப்பட்டார். மயக்கமடைந்த நிலையில் இருந்த சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம், கரூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு செயற்கை சுவாசும் அளித்தும் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை. சிறுமி இறந்து விட்டதாக நேற்று நள்ளிரவு டாக்டர்கள் அறிவித்தனர். இதைக் கேட்டு பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். dinamalar,com

கருத்துகள் இல்லை: