திங்கள், 28 அக்டோபர், 2024

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 75 படுக்கைகளுடன் தீக்காய சிறப்பு பிரிவு

 மாலைமலர் : சென்னை தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விபத்துக்களில் தீக்காயம் ஏற்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளித்து பாதுகாக்க சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ராஜீவ்காந்தி, ஸ்டான்லி மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீயினால் ஏற்படும் விபத்து மற்றும் அதன் பின் விளைவுகளுக்கு சிகிச்சை அளிக்க தீக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவு 1981-ம் ஆண்டு 10 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டது.

ஞாயிறு, 27 அக்டோபர், 2024

கல்விக்காக குழந்தைகளை கனடாவுக்கு அனுப்ப வேண்டாம்! அங்கு காலிஸ்தான் பிரசாரமாம் இந்திய தூதர் வர்மா அச்சம்

 மின்னம்பலம் -Kavi:   உயர்கல்விக்காக உங்கள் குழந்தைகளை கனடாவுக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோருக்கு கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவில் கடந்த ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார்.
 அதில் சஞ்சய் வர்மாவையும், பிற இந்திய தூதரக அதிகாரிகளையும் கனடா தொடர்புபடுத்தியது.
இந்தக் குற்றச்சாட்டுகளால் கடும் அதிருப்தி அடைந்த மத்திய அரசு,
இந்தியாவில் இருந்து கனடா தூதர் மற்றும் அந்நாட்டின் ஐந்து தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டதுடன்,
 கனடாவில் இருந்து சஞ்சய் வர்மா மற்றும் ஐந்து இந்திய தூதரக அதிகாரிகளை தாயகத்துக்கு திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் அறிவித்தது.

விஜய் : திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் - த.வெ.க. தலைவர் சூளுரை

 மாலை மலர்  : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது.
விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
வி.சாலை விஜய்யின் வியூகச் சாலையாக மாறி, மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் மாநாடு தொடங்க இருக்கிறது. த.வெ.க. முதல் மாநில மாநாடு தொடங்குவதை அடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. தலைவர் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுவை எனும் நஞ்சு* - பெருகி வரும் போலி உணவுகள் . புற்றுநோய்களின் ஊற்றுக்கள்

 Esther Vijithnandakumar  :  *சுவை எனும் நஞ்சு*
தமிழகம் முழுவதும் சுற்றிப் பார்த்த நண்பர் ஒருவர்,  அவர் பார்த்து மிகவும் அஞ்சிய ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அது வேறொன்றும் இல்லை எங்கு நோக்கிலும் உணவு .. உணவு ..உணவு.. ..
தமிழகத்தில் உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது. எல்லோரும் எதையாவது  தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது .
அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது.
உதாரணமாகச் சோறு, இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்றவை ஏளன உணவு பொருளாகப் பார்க்கப்படுகிறது.
பல உணவகங்களில் இவை இல்லை.
ரொட்டி வகைகளும், கறி வகைகளும் மட்டுமே இரவு உணவில் பெரிதும் பரிமாறப்படுகிறது.

ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள பொருளை இறக்க 25 ஆயிரம்... கேரளா நோக்கு கூலியால் நாக்கு தள்ளிய காண்டிரக்டர்


மின்னம்பலம் -Kumaresan M :  கேரளாவில் ஒருவர் தனக்கு சொந்தமான சரக்குகளை அவரது பணியாளர்களைக் கொண்டு ஏற்றி, இறக்கிவிட முடியாது.
இதற்கு சுமை தூக்கும் தொழிலாளர்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என எழுதப்படாத சட்டம் உள்ளது. அப்படி தொழிலாளர்களை பயன்படுத்தாதவர்களிடம் ‘நோக்கு கூலி’ என்ற பெயரில் கட்டாயமாகவும் கூலி வசூலிப்பார்கள்.
மற்றவர்கள் வேலை செய்வதை பார்த்து கொண்டு இருந்து விட்டு சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி வாங்கிச் செல்வதே நோக்குகூலி. அவர்களைக்கொண்டே அந்தப் பணியைச் செய்தால் எவ்வளவு கூலி வாங்குவார்களோ, அதைவிடக் கூடுதலாக நோக்குக் கூலி வாங்குவதும், தராதவர்களைத் தாக்குவதும் கேரளாவில் வாடிக்கை.

சனி, 26 அக்டோபர், 2024

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த திமுக கூட்டணி தலைவர்கள் : ஏன்?

 மின்னம்பலம் - Kavi : விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை இன்று (அக்டோபர் 26) ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின் போது தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதன்பிறகு திமுக கூட்டணி தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

வெள்ளி, 25 அக்டோபர், 2024

சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு? மாணவர்கள் மயக்கம்

 தினமலர் : சென்னை: சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்படுகிறது.
இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
மாலை திடீரென வாயுநெடி ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கிருந்த மாணவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். இருப்பினும் 3 பேர் மயக்கமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை - போதை பயணியால் பறிபோன கண்டக்டர் உயிர்! ஓடும் பஸ்சுக்குள் என்ன நடந்தது?

commuter-beat-an-mtc-bus-conductor-to-death-following-a-quarrel-in-chennai

tamil.oneindia.com - Mani Singh S :  சென்னை: சென்னை அண்ணா ஆர்ச் அருகே சென்று கொண்டுருந்த மாநகர பஸ்சில் பயணி ஒருவர் மதுபோதையில் தகராறு செய்ததால்,
அந்த பயணிக்கும் கண்டக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் அந்த பயணி தள்ளிவிட்டதில் கண்டக்டர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
பயணிக்கும் கண்டக்டருக்கும் எப்படி பிரச்சனை ஏற்பட்டது?
என்ன நடந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.
சென்னை மாநகர பேருந்தில் பயணிக்கும் - நடத்துநனருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

வியாழன், 24 அக்டோபர், 2024

இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்: கனடா புதிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை

 hindutamil.in  :  ஒட்டாவா: இந்தியா மீது பொருளாதாரத் தடையை கனடா அரசு விதிக்க வேண்டும் என்று, கனடாவிலுள்ள புதிய ஜனநாயகக் கட்சியின் (என்டிபி) எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில், நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தமுடிவு செய்துள்ளதாகவும் கனடா தெரிவித்தது.
இதையடுத்து இந்தியதூதரை திரும்ப பெற இந்தியா முடிவு செய்தது. மேலும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.

இலங்கையில் இஸ்ரேலிய பயணிகள் மீதான தாக்குதல் திட்டம்

 Letchuman Shanmuganathan  :  இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் திட்டம் – இருவர் கைது.. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அருகம்பே, சர்ப் வீரர்கள் அடிக்கடி வந்து செல்லும் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இஸ்ரேலியர்கள் அதிகம் கூடும் இடமாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் அருகம்பே பிரதேசத்தில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு அறிவித்துள்ளன.
இலங்கையைச் சேர்ந்த இருவர் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் ஈராக்கைச் சேர்ந்தவர் என்றும் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

விஜய் 70 அடி உயரத்தில் த.வெ.க மாநாடு கட் - அவுட்.. பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் நடுவில் விஜய்!

 tamil.filmibeat.com  -Mohanraj Thangavel  : விக்கிரவாண்டி: தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக இருப்பவர் நடிகர் விஜய். மிகப்பெரிய ஓப்பனிங் கொண்ட கதாநாயகன்,
அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் என விஜய்யின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் ரொம்பவும் பெருசு. இப்படியான நிலையில் அவர் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டுத் திடலில் அரசியல் தலைவர்களின் கட் - அவுட்டுகளுக்கு மத்தியில் விஜய்க்கும் கட் - அவுட் வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் திட்டம் அம்பலம் இந்தியாவே தகவல் வழங்கியது - தாக்குதலுக்காக 50 இலட்சம் ரூபா

 அததெரண அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டதாக இன்று (23) தெரியவந்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அறுகம்பே பகுதியானது,
 அலைச்சறுக்கு (Surfing) செய்பவர்கள் அடிக்கடி வந்து செல்லும், உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
அந்தப் பகுதி இஸ்ரேலியர்கள் அதிகம் கூடும் பகுதியாகவும் காணப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் அறுகம்பே பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு அறிவித்துள்ளன.

உங்களவா கண்டு பிடிச்ச மிகப்பெரிய மோசடி சொல்தான் பக்திங்கிறது.

 ராதா மனோகர் : கீரன் : பக்தி அப்படீனா என்ன.?
சங்கரன் : பக்தின்னா அன்பு..!
கீரன் : அன்புன்னா அன்புன்னு சொல்ல வேண்டியதுதானே?  அதென்ன பக்தி ...யுக்தி?
சங்கரன் : சாதாரண மனிதர்களுக்கு இடையே இருப்பது அன்பு  .கடவுளிடம் நமக்கு இருப்பது  பக்தி!
கீரன் : ஓஹோ .. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
சங்கரன் : கடவுள் நம்மைவிட ரொம்ப உசத்தி!
வெறும் அன்புன்னு சொன்னா?
அது மதிப்பில்லை அதனாலேதான்  பக்திங்கிறோம்..!
கீரன்  : அதாவது கொஞ்சம் பயம் கலந்த அன்புன்னு வச்சுக்காமா..?
சங்கரன்  : அதே அதே ..  அதான் பக்திங்கிறது !
கீரன் : பயம் இருக்கும் இடத்தில் வெறுப்புதானே இருக்கும்? அன்பு எப்படி வரும்கிறேன்.?
சங்கரன்  : இது விதண்டாவாதம் .. அது வேற இது வேற ...  அது அன்பு இது பக்தி!  

புதன், 23 அக்டோபர், 2024

வடநாட்டு கலைஞர் திரு லாலு பிரசாத் யாதவ்

May be an image of 1 person

Vijay Karthick :   மொகலாய ஆட்சியிலும், பிரித்தானிய ஆட்சியிலும் வங்காளத்தோடு இணைந்திருந்த பீகார் பிரிக்கப்பட்ட பின்பும் ஏன் வங்காளம் வளர்ந்த அளவு கூட வளரவில்லை ?
மேலும் இந்திய ஒன்றிய வரலாற்றில் "பீகார் பீகாரிகளுக்கே" என்ற தனிக்குரல்தான் [1909] முதலில் ஒலித்தது.இதை நான் தலைவரின் மனசாட்சியான மாறனின் மாநில சுயாட்சி புத்தகத்தில்-கு.ச.ஆனந்தனின் மாநில சுயாட்சி நூலிலும்-சாதிக் பாட்சாவின் மாநில சுயாட்சி நூலிலும் படித்திருக்கிறேன்.
1917ல் தான் திராவிடநாடு திராவிடர்களுக்கே என்றார் புரட்சியாளர் டி.எம்.நாயர்.

ஹிஸ்புல்லாவின் பதுங்கு குழிகளில் 15,000 கோடி ரொக்கம்., இஸ்ரேல் வெளியிட்ட ஆதாரம்

 லங்காஸ்ரீ  : ஹிஸ்புல்லாவின் ரகசிய பதுங்கு குழிகளில் 15,000 கோடி ரொக்கம்., இஸ்ரேல் வெளியிட்ட ஆதாரம்
ஹிஸ்புல்லாவின் ரகசிய பதுங்கு குழிகளை இஸ்ரேல் இலக்காக்கியுள்ளது.
லெபனான் மருத்துவமனை ஒன்றின் கீழ் உள்ள பதுங்கு குழியில் தங்கம் மற்றும் பணத்தாள்களை குவியல் குவியலாக இருப்பதை உறுதிப்படுத்தும் காணொளியை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் தலைவர் யஹ்வா சின்வார் கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்போவதாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா சமீபத்தில் மிரட்டல் விடுத்திருந்தது.

செவ்வாய், 22 அக்டோபர், 2024

தென் மாநில மக்கள் தொகை குறைவது குறித்து முதல்வர்கள் கவலை

 முரளிதரன் காசிவிஸ்வநாதன் :   தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துவருவது மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது.
ஆந்திரப் பிரதேச மக்கள் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமையன்று கூறியிருந்தது விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அதேபோன்ற ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமையன்று, அமராவதி நகரில் கட்டுமானப் பணிகளைத் துவக்கிவைத்துப் பேசும்போது ஆந்திர மக்கள் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அப்படி பெற்றுக்கொள்வோருக்கு சலுகைகள் அளிக்கப்படுமென்றும் குறிப்பிட்டார்.

சினிமாஸ் குணரெத்தினமும் ஏவி மெய்யப்ப செட்டியாரும்- Cadillac.Sky blue with Navy blue top Automatic Left hand drive

May be an image of 2 people, car, hood ornament and text ராதா மனோகர் : சினிமாஸ் குணரெத்தினமும் ஏவி மெய்யப்ப செட்டியாரும்
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த மூன்றாவது திரைப்படம் வாழ்க்கை
22 December 1949 இல் இது வெளியானது
மிக பிரமாண்டமான வெற்றியை பெற்றது
பல திரையரங்குகளில் 25 வாரங்களை நிறைவு செய்தது.
இத்திரைப்படத்தை இலங்கையில் ஒரு தமிழ் இளைஞர் வாங்கி வெளியிட்டார்
அந்த இளைஞருக்கு பெரிய பின்னணி கிடையாது
சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி திரைப்படங்கள் பற்றிய அனுபவ அறிவு கொஞ்சம் இருந்தது
அந்த நிறுவனத்திற்காக திரைப்படங்கள் வாங்குவதற்கு சென்னை வந்து சில திரைப்பட தயாரிப்பாளர்களின் அறிமுகமும் கிடைத்திருந்தது

திங்கள், 21 அக்டோபர், 2024

அந்தரங்கங்களை கூறுபோட்டு விற்கும் யூ டியூபர்கள் .. இர்பான் வகையறாக்கள்

May be an image of 5 people, hospital and text

 LR Jagadheesan :  ஒருபக்கம் உங்கள் அந்தரங்கத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் நீங்களே கூவிக்கூவி கூறுபோட்டு விற்று காசாக்குகிறீர்கள்.
மறுபக்கம் என் தனிப்பட்ட வாழ்வு பற்றி கருத்துசொல்லவோ விமர்சிக்கவோ அடுத்தவருக்கு உரிமை இல்லை என்கிறீர்கள். அது எப்படி எடுபடும்?
பொதுச்சந்தையில் உங்களை நீங்களே அதிக விலைக்கு விற்கத்தானே உங்கள் வாழ்வின் அந்தரங்கமான ஒவ்வொன்றையும் தினம் தினம் காட்சிப்படுத்துகிறீர்கள்?
உங்கள் வாழ்வை காட்சிச்சந்தையின் கடைச்சரக்காக்கி விற்றபின் அதன்மீது கருத்துசொல்லும்/விமர்சிக்கும் உரிமை உங்களுக்கேது?
அதை காட்சிச்சந்தையில் தம் கண்களால் வாங்கிய பார்வையாளர்கள் தானே அதன் உரிமையாளர்கள்? அவர்களை எப்படி நீங்கள் தடுக்கமுடியும்?

குவைத்தில் பாதிக்கும் மேல் திருமணம் ஆகாத இளம் பெண்கள்... தொடரும் விவாகரத்துகள்

 tamil.samayam.com - மகேஷ் பாபு  : சர்வதேச அளவில் பண மதிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது? என்றால் குவைத் என்று தான் பதில் கிடைக்கும்.
எண்ணெய் வளங்களால் செல்வம் கொழித்து காணப்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து பெரிய அளவில் பொருள் ஈட்டி வருகிறது.
இந்நாட்டில் பிறப்புரிமை பெற்றிருந்தால் கல்வி, வேலை, திருமணம் உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.
குவைத் நாட்டில் பெண்கள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிப்படுத்திய உதய கம்மன்பில!

தேசம் நெட்  -arulmolivarman :        உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும், பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பிலும், அப்போதைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு 2019 ஜனவரி மாதம் முதல் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி வரை 13 புலனாய்வு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகைளை வெளியிடும் இன்றைய விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Canada நிஜ்ஜார் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: இந்திய தூதர் சஞ்சய் வர்மா

மாலை மலர்  :  ஒட்டாவா கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக, இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்போவதாக கனடா தெரிவித்தது. இதனால் கனடாவுக்கான இந்திய தூதரை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்தது.
மேலும் இந்தியாவில் கனடா அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா Vs சத்யன் மோக்கேரி Vs நவ்யா.

 மின்னம்பலம் -Selvam : வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக இன்று (அக்டோபர் 19) அறிவிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி போட்டியிட்டார். மேலும், அவர் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார்.

ஞாயிறு, 20 அக்டோபர், 2024

உ.பி.யில் ரூ.500 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால் பாஸ்போர்ட்டை கிழித்த தபால்காரர்-வீடியோ

மாலைமலர் : “உத்தரபிரதேசத்தில் ரூ.500 லஞ்சம் கொடுக்க மறுத்ததால், ஒருவரின் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை தபால்காரர் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒருவருக்கு பாஸ்போர்ட் தபாலில் வந்துள்ளது. ஆனால் பாஸ்போர்ட் கொடுப்பதற்கு தபால்காரர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனால் தபால்காரருக்கும் சம்பந்தப்பட்ட நபருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தபால்காரர் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை கிழித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநராக வி.கே.சிங் பெயர் தீவிரமாக பரிசீலனையில்

மின்னம்பலம் - Selvam :   தஞ்சை தமிழ் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு தமிழ்த் தாய் வாழ்த்து பாடிய வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அக்டோபர் 18 ஆம் தேதி  (நேற்று) சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் இந்தி மொழி விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது திராவிட நல் திருநாடு என்ற வரி தவிர்க்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட விழாவில் இவ்வாறு நடந்ததால், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் ஆளுநர்.’

ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை.. முன்னாள் ஊழியர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

 tamil.oneindia.com - Shyamsundar : கோவை: ஈஷா மீதான ஆட்கொணர்வு மனு வழக்குகள் நேற்று முடித்து வைக்கப்பட்டன. அதன்படி ஈஷா மீது உள்ள மற்ற வழக்குகளை விசாரிக்க தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விசாரணை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை.
இரு பெண்களும் தங்கள் சுய விருப்பத்தின்பேரில் ஈஷா மையத்தில் தங்கி இருப்பதால் அவர்களை மீட்டுத் தர சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
இந்த வழக்கின் பரபரப்பு அடங்கும் முன்பே.. ஈஷா யோகா மையம் அடுத்த சர்ச்சையில் சிக்கி உள்ளது.