![]() |
Parama Cpim · நிர்மல் குமார் யார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.
யார் இந்த நிர்மல் குமார்..,?
தவெக வின் நிர்மல்குமார் பற்றி தெரிய இதை படிக்க வேண்டியது அவசியம்...!!
* 2020 செப்டம்பர் 14 ஆம் தேதி, உபியில் ஹத்ரஸ் என்கிற கிராமத்தில் 19 வயதான ஒரு தலித் பெண், ஒரு பண்ணைக்கு வழக்கம்போல சாணி அள்ளச் சென்றார்.
* அப்போது ஆதிக்க தாகூர் சாதியைச் சேர்ந்த சந்தீப், ராமு, லவகுசா, ராவி ஆகிய நால்வரும் அந்தப் பெண்ணைப் பிடித்து, அவளது துப்பாட்டாவையே எடுத்து அவள் கழுத்தில் சுற்றி மாட்டி, அதைப்பிடித்துக்கொண்டே, ஒரு ஒதுக்குப்புறமாக தரதரவென்று தரையில் இழுத்துக்கொண்டு சென்றனர்.
* அங்கே, அந்த நான்கு கொடூர மிருகங்களும் அவளைக் கூட்டுப் பாலியல் வன்புணர் செய்தனர். இறுதியாக அவளைக் கொன்று வீசுவதற்காக அவளது கழுத்தில் துப்பாட்டாவை இறுக்கி மரத்தில் தொங்கவிட முயற்சி செய்தனர். அப்போது கழுத்தை நெருக்கியபோது, துடித்ததில் அவளது நாக்கு பாதி துண்டானது. அவள் துடித்துப்போய் கத்தினாள்.
* நேரமாகியும் காணவில்லை என்று அவளைத் தேடிக்கொண்டிருந்த அவளது அம்மா, இந்தப்பக்கம் சத்தம் கேட்டு ஓடிவந்தார். யாரோ வருவதைப் பார்த்து, நான்கு மிருகங்களும் அவளை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டன. அம்மாவும் மற்றவர்களும் அருகில் இருந்த காவல்நிலையத்திற்கு தூக்கிச் சென்றனர்.
* அங்கே இருந்த காவல்துறை ஆய்வாளர் டி.கே.வர்மா, எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. அத்துடன் அவர்களைக் கேவலமாகப் பேசி அங்கிருந்து அடித்து விரட்டினார். உள்ளூர் மருத்துவனையில் சேர்த்தார்கள்.
* ஊடகங்களில் செய்தி பரவியது. ஆனால், உத்தரப் பிரதேச காவல்துறையோ, மாவட்ட நீதிபதியோ, அரசோ, அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று மறுத்தது. இதற்கெல்லாம் ஒரு படி மேலேபோய், இதுகுறித்து செய்தி வெளியிட்டவர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் எழுதியவர்கள் மீது வழக்கு போட உத்தரவிட்டான் முதல்வன் ஆதித்யநாத்.
* ஆனால், அழுத்தம் அதிகமாகிக் கொண்டே போனதால், ஆறு நாட்கள் கழித்து செப்டம்பர் 20 ஆம் தேதி வழக்கு போடப்பட்டது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் செப்டம்பர் 22 ஆம் தேதியன்று வாக்குமூலம் வாங்கியது காவல்துறை. அப்போதுதான் அந்த கொடூர மிருகங்களின் பெயர்களையும் அவளுக்கு நடந்த கொடூரங்களையும் அந்த பாதி அறுந்துபோன நாக்குடனும் மெதுவாகக் கூறினாள்.
* மருத்துவமனையில் கூட அவளுக்கு சரியான மருத்துவம் பார்க்கப்படவில்லை. முதுகுத் தண்டு கொடூரமாக பாதிக்கப்பட்டு கால்கள் செயலிழந்து போனதால், வேறு மருத்துவமனை போகச் சொல்லிவிட்டார்கள். அங்கிருந்து, அலிகார் பெரிய மருத்துவமனை சென்றார்கள். அங்கும் அதே நிலை. பின்னர் டெல்லிக்கு எடுத்துச் சென்றார்கள். சுமார் 2 வாரங்கள் கழித்தே அவளுக்கு மருத்துவமே பார்க்கப்பட்டது.
* அப்போதுதான் அந்த நான்கு கொடூர மிருகங்களையும் காவல்துறை கைதுசெய்தது. அதன்பிறகு என்ன நடந்தது தெரியுமா?
* அந்தப் பெண்ணின் குடும்பத்தை அழைத்து, “இந்த மீடியாக்காரங்க எல்லாம் நாளைக்கே போயிடுவாங்க. உங்க குடும்பத்தின் மானம் முக்கியம். அதனால் வழக்கை வாப்பஸ் வாங்கிட்டு போயிருங்க. அதான் நல்லது” என்று மாவட்ட நீதிபதி பேசிய வீடியோ வெளியானது.
* பாஜக தலைவரான ராஜ்வீர் சிங்கின் தலைமையில் நூற்றுக்கணக்கான பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் உறுப்பினர்கள் கொடிகளுடன் சாலையில் குற்றவாளி மிருகங்களுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிக்கொண்டே ஊர்வலம் சென்றனர்.
* தவறான் உறவில் இருந்தால் இப்படித்தான் நடக்கும் என்று குறிப்பிட்டு, “இந்த மாதிரியான பொண்ணுங்கள் இந்த மாதிரி கரும்புக்காட்டுக்குள்ளேயும் சோளக்காட்டிலும் புதர்களுக்குள்ளும்தான் செத்துகிடப்பார்கள்” என்றான் மற்றொரு உபி பாஜக தலைவரான ரஞ்சீத் பகதூர் ஶ்ரீவட்சவா.
* பெண்களுக்கு பெற்றோர்கள் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்காமல் போனால், இப்படித்தான் வன்புணர்வுகள் நிகழும். பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருப்பதற்கு பெற்றோர்தான் கற்றுத்தர வேண்டும்” என்றான் உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங்.
* இவை எல்லாவற்றுக்கும் மேலாக படித்த கொடூரன் ஒரு நபர் இன்னொரு கொடுமை செய்தான்…
* அந்தப் பெண் மருத்துவமனையில் இருந்தபோது யாரோ அந்தப் பெண்ணிடம் போய் சில கேள்விகளைக் கேட்டு எடுத்த வீடியோவினை தனது தேவைக்கு எடிட் செய்து, அதனை டிவிட்டரில் வெளியிட்டுவிட்டான்.
* அவன் வெளியிட்ட அந்த வீடியோவில் அந்தப் பெண்ணின் முகம் முழுவதுமாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரோ, புகைப்படமோ, வீடியோ வெளியிடக்கூடாது என்பது ஆயிரம் முறை உச்சநீதிமன்றம் எச்சரித்திருக்கிறது. ஆனால் சங்கியாக இருந்தால் படித்தவனாக இருந்தாலும் மனிதநேயம் இருக்காதே.
* அத்துடன், “இந்தப் பெண்ணைப் பாருங்கள். நாக்கு அறுந்தது போலா இருக்கிறது? நன்றாக பேசமுடிகிறது அவளால். வன்புணர்வு செய்யப்பட்டதாகவும் அவள் சொல்லவில்லை” என்று அந்த வீடியோவுடன் சேர்த்து எழுதினான்.
* அவனுடைய அந்த டிவிட்டர் பதிவால் நாடே கொந்தளித்தது. ஊடகங்கள் முதல் தேசிய பெண்கள் ஆணையம் வரையிலும் அனைவரும் கண்டித்தனர். ஒரு ஏழை தலித் பெண்ணின் உயிருக்கும், மரியாதையான மிகக்குறைந்தபட்ச வாழ்க்கைக்கும் இவனைப் போன்ற கொடூர மிருகங்கள் கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதான். அவளைப் பாலியல் வன்புணர்வு செய்தவர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத மிருகங்கள் இவர்கள்.
* அவன் வேறு யாருமல்ல. 20 ஆண்டுகளாக பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்துவிட்டு, இப்போது ஆர்எஸ்எஸ்-பாஜக கொடுத்திருக்கும் பணியை நிறைவேற்ற தவெக வில் இணைந்து, விஜயின் ஊடகப் பேசுமுகமாக இருக்கும் சிடிஆர். நிர்மல் குமார் தான் அந்தக் கொடூரன்.
* கடந்த 20 ஆண்டுகளாக சங்கிகள் பரப்பிய வெறுப்பை எல்லாம் உருவாக்கியதில் முதன்மைப் பங்குவகித்தவன். அவனையெல்லாம் தூக்கிப் பிடிச்சீங்கன்னா உங்களுக்குள் இருக்கும் மனிதநேயம் காணாமல் போய்விட்டது என்றுதான் பொருள் See less

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக