சனி, 9 மே, 2026

யாழ்ப்பாணத்து மடைப்பள்ளிகளும் தெலுங்கு மடுகா நடிகர் விஜய்யும்

நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : Simon Casie Chetty..  தமிழும் அகராதிகளும் உள்ளவரை சைமன்காசிச் செட்டியார் புகழ் வாழும் ம்.

ராதா மனோகர்   யாழ்ப்பாணத்தில் 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர் காலத்தில் ஒரு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெற்றது 
அதில் மூன்றாவது பெரிய ஜாதியாக மடைப்பள்ளி என்ற ஜாதி குறிப்பிடப்பட்டிருக்கிறது 
இன்றும் கூட கோயில்களில் உள்ள சமையல் அறையை மடப்பள்ளி என்றுதான் அழைக்கிறார்கள் 
சமைப்பவரை மடைப்பள்ளி என்றும் முன்பு அழைத்தார்கள் 
இது பற்றிய செய்திகளை சைமன் காசி செட்டி simon kasi chetty அவர்களின் வரலாற்று ஆவண குறிப்புக்களில் காணலாம் 
இப்போதும் அந்த வழக்கம் அற்று போய்விட்டது.
மொத்த யாழ்ப்பாண மக்கள் தொகையில் இந்த மடைப்பள்ளி என்ற ஜாதி ஐந்தில் ஒரு பகுதியாக உள்ளது 
பின்பு காலப்போக்கில் இந்த ஜாதி காணாமல் போய்விட்டது 
இவர்களும் ஏனைய  பல ஜாதிகளை போலவே வெள்ளாள ஜோதியில் கலந்திருக்க வாய்ப்புள்ளது 
குறிப்பாக இசைவேளாளர் தேவேந்திர குல வெள்ளாளர் போன்று பல ஜாதிகள் தங்கள் ஜாதிப்பெயர்களோடு வெள்ளாளர்கள் லேபிளை ஒட்டி கொள்ளுதல் ஒரு மரபு 
அந்த வகையில் விஜய்யின் பெற்றோரும் வெள்ளார் ஜாதி லேபிளை ஒட்டியிருக்க கூடும்.


யாழ்ப்பாண அரசை உருவாக்கிய கலிங்க தேசத்து ( இன்றைய ஒடிஷா) அரசன் கலிங்க மாகன் வழியில் வந்தவர்களாக இருக்க கூடும் 
ஒடிசாவில் இருந்து ஆந்திராவின் மகதப்பள்ளி துறைமுகம் நோக்கி வந்து அங்கிருந்து இலங்கையின் வடபகுதிக்கு வந்திருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன் 
யாழ்ப்பாண அரசை நிறுவிய கலிங்கமாகன் என்ற அரசனே இந்த கலிங்கா( ஒடிஷா) வழிவரவுதான்.  
வரலாற்று ரீதியாக புகழ் பெற்ற துறைமுகமாக விளங்கிய இந்த மகதப்பள்ளி துறைமுகம் விஜயவாடாவுக்கும் காக்கிநாடாவுக்கும் நடுவே அமைந்திருக்கிறது 
மகதப்பள்ளிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் ஒரு நேர்கோடு கீறினால் சுருக்கமான ஒரு நேர்வழி கடல் பாதை தென்படும்.
யாழ்ப்பாணத்தில் மடைப்பள்ளி இன்று அழைக்கப்பட்ட இந்த குடிவரவாளர்களை ஆந்திரா தெலுங்கானா கர்நாடக மாநிலங்களில்  மடிகா என்று அழைக்கிறார்கள் 
யாழ்ப்பாணத்து மடைப்பள்ளி போலல்லாமல் அவர்கள் இன்றும் ஒரு பலம்வாய்ந்த சமூகமாக உள்ளார்கள் 
தமிழ்நாட்டில் இவர்கள் அருந்ததியர்களின்  ஒரு உட்பிரிவாக கருத படுகிறார்கள் 

நடிகர் விஜயும் தங்களவர்தான் ஆந்திராவில் கூறுகிறார்கள் 
இவரின் ஜாதி  மதிகா என்றும் கூறுகிறார்கள் 
இன்னொரு பகுதியினரோ இல்லையில்லை இவர் மாலா ஜாதியை சேர்ந்தவர் என்றும் வாக்குவாதப்படுகிறார்கள்.
இந்த  உரிமை கோரலையும் தாண்டி ஷோபாவின் முதல் கணவர்  தெலுங்கு பிராமணர் என்றும் சிலர் கூறுகிறார்கள் 
ஒருவேளை கலப்பு திருமண குடும்பமாகவும் இருக்கலாம் 
உண்மையில் இந்த பதிவு நடிகர் விஜயை பற்றியதல்ல 
யாழ்ப்பாணத்தில் பெருமளவில் வாழ்ந்த மடைப்பள்ளி என்ற ஜாதியை பற்றிய  புள்ளி விபரம் மட்டுமே 
உண்மையில் இந்த இரு வேறு ஜாதிகளும் அருந்ததிய ஜாதியின் உட்பிரிவுகள்தான் 
ஆந்திர மடுக்கா என்ற ஜாதி என்றாலும் சரி யாழ்ப்பாண மடைப்பள்ளி என்ற ஜாதியாக இருந்தாலும் இவை எல்லாம் அருந்ததியர் ஜாதியின் உட்பிரிவுகள் என்றுதான் தெரிகிறது 
யாழ்ப்பாணத்து மடைப்பள்ளிகள்தான் இவர்கள் 


கருத்துகள் இல்லை: