செவ்வாய், 7 ஏப்ரல், 2026

TVK BJP திரிஷா அமித்ஷா டெல்லியில் பேச்சு வார்த்தை அம்பலமாகிய ரகசிய டீல்

 நிலவன் மாணிக்கம் :  TVKவின் முதல்வர் வேட்பாளர் திரிஷாவின் மும்பை டீல் வெட்ட வெளிச்சமானது..
விஜய்யுடன் மோடி போட்ட கூட்டணி ஒப்பந்தம்!*
* மும்பையில் விஜய், த்ரிஷாவுடன் பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதை உறுதி செய்திருக்கிறார் இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும், மோடி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே.*
*▪️. சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லிக்கு செல்வதற்கு முதல் நாளே மும்பைக்கு பறந்தார் த்ரிஷா.    மும்பையில் அவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள், பாஜகவினரை சந்தித்துள்ளார்.  அதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.*


*▪️. த்ரிஷாவின் இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் விஜய்யும் மும்பையில் பாஜக பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.  டெல்லியில் பிரதமர் மோடியுடனும் விஜய் சந்திப்பு நடந்திருக்கிறது என்கிறார்கள். ஆனால் வெளியுலகத்திற்கு த்ரிஷாவும் விஜய்யும் இயக்குநர் அட்லீ மனைவியின் வளைகாப்பிற்கு சென்றனர் என்று தகவல் பரவின.*
*▪️. மும்பையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் எட்டிய முடிவு  என்ன? என்பது அறிவிக்கப்படாவிட்டாலும் கூட அமித்ஷா – த்ரிஷாவின் இந்த சந்திப்புக்கு பிறகுதான் விஜய்க்கு சிபிஐ விசாரணை மிக எளிதாக இருந்திருக்கிறது என்கின்ற பேச்சு எழுந்தது.   அப்படி என்றால் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது என்பதையே புரிந்துகொள்ள முடிந்தது.*
*▪️. அமித்ஷா –  த்ரிஷா பேச்சுவார்த்தையில்  என்ன முடிவானது என்பது குறித்து தற்போது மனம் திறந்திருக்கிறார் ராம்தாஸ் அத்வாலே.*
*▪️ புதுச்சேரியில் நடந்த இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராம்தாஸ் அத்வாலே,  ‘’2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி கூட்டணி ஆட்சி அமைப்போம்’’ என்றார்.*
*▪️. மும்பை மற்றும் டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் விஜய்யுடன் கூட்டணி அதிமுக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று எடப்பாடி பழனிசாமியும்,  நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோரும் இதையே சொன்னார்கள்.*
*▪️. உண்மையில் நடந்த பேச்சுவார்த்தையை இல்லை என்று ஏன் இரு தரப்பும் மறுத்தனர் என்றால், பாஜகவுடன் தவெக கூட்டணி என்றால் சிறுபான்மையினர் வாக்குகள் தவெகவுக்கு வராது என்பதை கவனத்தில் கொண்டுதான் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை இப்போதைக்கு சொல்லாமல் இருக்கிறார்கள் என்கின்றன கமலாலயம், பனையூர் வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள்.*

கருத்துகள் இல்லை: