minnambalam.com - Mathi : தமிழக சட்டசபை தேர்தல் 2026 முடிவுகள் எப்படி இருக்கும்? தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் நமது மின்னம்பலம் மீடியா நடத்திய மெகா சர்வே முடிவுகள் மின்னம்பலம் யூ டியூப் சேனலில் இன்று முதல் வெளியாக இருக்கிறது.
மார்ச் 20 முதல் மார்ச் 31-ந் தேதி வரை ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் என
234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப
நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை நீங்கள் மின்னம்பலம் யூடியூப் சேனலில் தொடர்ச்சியாக பார்க்கலாம்.
தென் சென்னை சர்வே முடிவுகளை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்…
வெற்றி வாய்ப்பு யாருக்கு..? தென் சென்னை | South Chennai | Minnambalam Mega Survey Results 2026 | DMK
tamil.oneindia.com : மொத்தமாக அள்ளும் திமுக.. மீண்டும் ஸ்டாலின் ஆட்சி தானாம்! அதிமுக, விஜய்க்கு படுதோல்வி! புதிய சர்வே
சென்னை: தமிழ்நாடு தேர்தல் தொடர்பான Inside Election கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் திமுக கூட்டணியே மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி 159 முதல் 165 இடங்களில் வெல்லும் என அந்த சர்வே கூறியுள்ள நிலையில், அதிமுக கூட்டணி 64 முதல் 70 இடங்களில் மட்டுமே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இதற்கிடையே தமிழ்நாடு தேர்தல் தொடர்பாக Inside Election அமைப்பு நடத்திய புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
திமுக வெல்லும்
அதில் இந்த முறையும் திமுக கூட்டணியே வென்று ஆட்சியை அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி இந்த முறை 159-165 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக- பாஜகவின் என்டிஏ கூட்டணி 64-70 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கனவோடு தேர்தலை முதல்முறையாக தவெகவினர் எதிர்கொள்கிறார்கள். பல்வேறு காரணங்களால் விஜய் பிரச்சாரமும் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டே வருகிறது.
இதற்கிடையே இந்த முறை விஜய்யின் தவெக அதிகபட்சமே 4 முதல் 6 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
வாக்கு சதவிகிதம்
அதேபோல அரசியல் கட்சிகள் பெறும் வாக்கு சதவிகிதம் குறித்தும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதில் திமுக கூட்டணி 44% வாக்குகளைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பாஜகவின் என்.டி.ஏ 33% வாக்குகளைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் தவெக 18% வாக்குகளுடன் 4-6 இடங்களையும் பெறும் என கூறப்பட்டுள்ள நிலையில், நாதகவுக்கு இந்த முறை 3% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகளுக்கு 2% வரை வாக்குகள் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வேட்பாளர்
அதேபோல யார் சிறந்த முதல்வர் வேட்பாளர் என்றும் ஒரு கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. அதில் திமுக தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலினுக்கே மிகப் பெரிய ஆதரவு இருக்கிறது.
சுமார் 44% பேரின் ஆதரவோடு சிறந்த முதல்வர் வேட்பாளர் ரேஸில் ஸ்டாலின் முதலிடத்தில் இருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 28% மக்கள் ஆதரவோடு 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
மூன்றாவது இடத்தில் இருக்கும் விஜய்க்கு 24% ஆதரவு இருக்கிறது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு 3%மக்கள் ஆதரவளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மீதான ரேட்டிங்
மேலும் தற்போதைய அரசு எப்படிச் செயல்படுகிறது என்ற கேள்விக்கு சுமார் 30% மிக சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறியுள்ளனர்.
அதேபோல சுமார் 20% பேர் சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 25% பேர் திமுக அரசின் செயல்பாடுகள் சுமாராக இருப்பதாகக் கூறியுள்ள சூழலில், 15% பேர் மோசமாக இருப்பதாகவும் 10% பேர் மிக மோசமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடைசியாக இந்த ஆட்சி தொடர வேண்டுமா என்ற கேள்விக்கு சுமார் 55% பேர் தொடர வேண்டும் என்றே பதிலளித்துள்ளனர். மாற்றம் தேவை என வெறும் 25% பேர் மட்டுமே அனுமதி அளித்துள்ள சூழலில், 20% பேர் மட்டுமே கருத்துச் சொல்ல விரும்பவில்லை எனக் கூறியுள்ளனர்.
Post Views: 53
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக