மின்னம்பலம் -Mathi : கரூரில் 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் இன்று மார்ச் 15-ந் தேதி விசாரணை நடத்துகின்றனர்.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் முதலில் விசாரணை நடத்தினர் சிபிஐ அதிகாரிகள்.
இதனையடுத்து தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரை டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல கரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் விசாரணை நடந்தது.
இதனையடுத்து டெல்லி சிபிஐ அலுவலகத்துக்கு விஜய் வரவழைக்கப்பட்டு 2 முறை விசாரணை நடந்தது.
இதன் தொடர்ச்சியாக கடந்த10-ந் தேதி விஜய் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் விஜய் வேறு ஒரு தேதியில் ஆஜராவதாக சிபிஐயிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று விசாரணைக்காக விஜய் ஆஜராகிறார்.
இதற்காக நேற்று தனி விமானத்தில் டெல்லி சென்ற விஜய் தாஜ் மான்சிங் ஹோட்டலில் தங்கி இருக்கிறார். இன்றைய விசாரணை முடிந்த உடன் சென்னை திரும்புகிறார் விஜய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக