ஞாயிறு, 21 ஜூன், 2026

போர்துகீசியரிடம் அடிமை சாசனம் எழுதி கொடுத்தது உயிர் பிழைத்த நல்லூர் அரசன் சங்கிலியன்

No photo description available.
Queen Catherine

 ராதா மனோகர் : 1544  ஆம் ஆண்டு மன்னாரில் சங்கிலியனும் அவனின் குண்டர்  படையும் 600 க்கு மேற்பட்ட தமிழ் கிறிஸ்தவர்களை சகோதர படுகொலை சம்பவம் போர்த்துகீசிய கிழக்கிந்திய கம்பனியை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருந்தது The massacre of about 600 to 700 Christians in Mannar in 1544 by Cankili
போர்த்துகீசிய அரசி  Queen Catherine இந்த படுபாதக செயலுக்கு காரணமான சங்கிலியனையும் அவன் பரிவாரங்களையும் கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் 

No photo description available.
Viceroy Dom Constantino de Bragança

இந்த பணியை நிறைவேற்றுவதற்கு போர்த்துகீசிய வைஸ்ரோய்   Viceroy Dom Constantino de Bragança  தலைமையில்  from Goa to Jaffna with 20 galleys, 10 galiots, and 70 ships. The forces consisted of 1,200 soldiers; September 1560 கோவாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்தனர் 
இவர்களை (யாழ்ப்பாணம் )கொழும்பு துறையில் எதிர்கொண்ட சங்கிலியன் படைகள்  சண்டையில் தோற்று கோப்பாய் பற்றை காடுகளை நோக்கி ஓடி தப்பினார்கள்.
அங்கும் போர்த்துகீசிய படைகள் சென்று அவர்களின் இருப்பிடங்களை தீவைத்து கொளுத்தியது 
கோப்பையிலும் பாதுகாப்பு கேள்வி குறியானதும் சங்கிலியன் படை வன்னி காட்டுக்கு தப்பி ஓடிச்சென்றது.
பின்பு அங்கிருந்து கொண்டே போர்த்துகீசிய வைஸ்ரோய்க்கு ஒரு சமாதான தூது அனுப்பினான் 
கெஞ்சினால் மிஞ்சுவதும் மிஞ்சினால் கெஞ்சுவதும் அவனின் குணம் 
இவனின் தூதை போர்துகீசிய அரசி ஏற்றுக்கொள்ளவில்லை 
ஆனால் வைஸ்ரோய் வேறு விதமாக கணக்கு போட்டார் 
இவனை கொல்வதிலும் பார்க்க இவனை கொண்டு பல காரியங்களை செய்து கொள்ளலாம் என்று கருதினார். 


ஒரு போர்த்துகீசிய அரசு அதிகாரி என்பதைவிட இப்போது கிழக்கிந்திய வர்த்தக  கம்பனி அதிகாரியாக சிந்தித்தார், 
இவன் மூலம் பெறக்கூடிய வரி கப்பம் போன்றவற்றை கூட்டி கழித்து  பார்த்தார்.
சங்கிலியனின் சமாதான கோரிக்கையை ஏற்று கொண்டார் 
ஒரு இடத்தில சங்கிலியனை சந்தித்து      இரு முதலியார்கள் மற்றும் உள்ளூர் பெரிய நாட்டாமை ஆகியோரின் முன்னிலையில் இருவரும் கைச்சாத்திட்டனர் 
அந்த ஒப்பந்தம் பின்வருமாறு :
மன்னார் தீவு மற்றும் மேற்குக் கடற்கரையின் கட்டுப்பாடு போர்த்துகீசியர்களிடம் ஒப்படைக்கப்படும்.
சங்கிலியன் மற்றும்  அவனின்  படைகளுக்குத் துப்பாக்கிகள் மற்றும் பிற வெடி ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதி கிடையாது.
சங்கிலியன் எந்த காரணம் கொண்டும்  அயல் படைகளின் உதவிகளை பெறுவதற்கு அனுமதி கிடையாது 
போர்த்துகீசியப் படைகள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும்.
 அதற்கு சங்கிலியன்  படை எந்த தொந்தரவையும்  கொடுக்காது..
சங்கிலியனிடம் பாதுகாப்புக்காக கொடுக்க பட்டிருந்த கோட்டை அரசனின் தந்தையின் மறைக்கப்பட்ட கருவூலம் போர்த்துகீசியர்களிடம் ஒப்படைக்க சம்மதித்தான்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யானைகள் போர்த்துகீசியர்களுக்குக் காணிக்கையாக சங்கிலியனும் அவனின் பரிவாரங்களும் வழங்கவேண்டும்..
என்ன காரணம் கொண்டும் கத்தோலிக்க சமயப் பணிக்கு சங்கிலியன் தடையாக இருக்க  அனுமதிக்கப்படவில்லை.
ஒப்பந்தத்தின் விதிகளைப் பாதுகாப்பதற்காக, ஒரு இளவரசரும் இரண்டு முதலியார்களும் போர்த்துகீசியர்களால் நியமிக்கப்பட்டனர் 
சங்கிலியன் காலத்திற்கு பின்பு அவனின் மகன் இந்த ஒப்பந்ததில் கூறப்பட்ட விடயங்களை தொடர்வதற்கு அனுமதிக்க பட்டுள்ளது .

இதை உண்மையில் ஒரு சமாதான ஒப்பந்தம் என்று கூறுவதிலும் பார்க்க ஒரு அடிமை சாசனம் என்றுதான் கூறவேண்டும். 
போர்த்துகீசிய அரசி  Queen Catherine விதித்த மரண தண்டனை இவனை ஒரு போதும் நிம்மதியாக தூங்க விட்டிருக்காது. 
அந்த பயத்தில் இவன் போர்த்துக்கீசர்களுக்கு எழுதி கொடுத்த அடிமை சாசனம் என்றுதான் கூறவேண்டும்.
அந்த நூற்றுக்கணக்கான தமிழ் கிறிஸ்தவ சகோதர்களின் படுகொலையின் பின்  விளைவுதான் இந்த அடிமை சாசனம்.  

பின்பு june 1619  போர்த்துகீசிய தளபதி பிலிப் டி ஒலிவேரா 5000 படைகளோடு வந்து சங்கிலியனையும் அவனின் படைகளையும் முழுவதுமாக  கொன்றான். 
சங்கிலியும் அவனின் குடும்பமும் மொத்தமாக கோவாவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு  விசாரணைக்கு பின்பு மரண தண்டனை வழங்கப்பட்டது 
தமிழ் கிறிஸ்தவர்கள் மீதான கொலைவெறியாட்டம்தான் சங்கிலியனின் இந்த கோரமான முடிவுக்கு  காரணம் 
  Phillippe de Oliveira and his land army of 5000, which was able to defeat Sankili.  Sankili, along with every surviving member of the royal family, was captured and taken to Goa, where he was hung till death. 


போர்த்துகீசிய அரசி  Queen Catherine - போர்த்துகீசிய வைஸ்ரோய்   Viceroy Dom Constantino de Bragança See less

கருத்துகள் இல்லை: