புதன், 29 ஜூலை, 2026

கொளத்தூரில் நாளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு! ஸ்டாலினின் அதிரடி மூவ்!

 tamil.oneindia.com - Rajkumar R :  சென்னை: திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க .ஸ்டாலின் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனது சொந்த தொகுதியான குளத்தூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 
இந்த நிலையில் அந்த தொகுதியில் உள்ள 14 வார்டுகளில் பதிவான வாக்குகளை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை வாக்குகள் சரிபார்ப்பு பணியும், பின்னர் மாதிரி வாக்கு பதிவும் நடைபெற இருக்கிறது. 
ஒருவேளை வாக்குகள் மாறுபட்டதாகவோ அல்லது வாக்குப்பதிவு முறையாக செயல்படவில்லை என ஸ்டாலின் நிரூபித்தால் அங்கு மறு தேர்தல் நடத்தப்படக்கூட வாய்ப்பு இருப்பதாக சொல்கின்றனர் திமுகவினர்.



தமிழக அரசியலில் மறக்க முடியாத மறக்க முடியாத பெயர்களில் ஒன்று மு.க.ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் என்று அடையாளத்தோடு அரசியலுக்கு வந்தாலும் தனது கடினமான உழைப்பால் அரசியலில் தனி இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர்.

இளைஞர் அணி செயலாளராக திமுகவில் பணியாற்றத் தொடங்கி திமுக தலைவராக உயர்ந்தவர். அதே நேரத்தில் பல்வேறு போராட்டங்கள், கட்சியிலும் குடும்பத்திலும் எதிர்ப்பு என பல தடைகளை தாண்டித்தான் அந்த பதவியைப் பெற முடிந்தது.
MK Stalin Kolathur
மு.க.ஸ்டாலின்

கட்சியில் மட்டுமல்லது அரசியலிலும் மு.க.ஸ்டாலினின் பயணம் கண்டு கரடு முரடு நிறைந்ததாக இருந்தது. சென்னையின் மேயர் எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர், அதற்குப் பிறகுதான் முதலமைச்சர் பதவிக்கு வர முடிந்தது. 1989 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக சட்டசபையில் நுழைந்தார் ஸ்டாலின். பின்னர் 1996, 2001, 2006, தேர்தல்களில் வெற்றி பெற்று அரசியல் பயணத்தை தொடர்ந்த அவர், 2011 ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதிக்கு மாறினார். அங்கும் 2011, 2016, 2021 தேர்தல்களில் வெற்றி பெற்று கொளத்தூரில் திமுகவின் கோட்டையாக மாற்றி இருந்தார். நிச்சயம் கொளத்தூரில் ஸ்டாலினுக்கு வெற்றி தான் என்பது திமுகவினரின் எண்ணமாக இருந்தது.
கொளத்தூர் தொகுதி

தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்த ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. அந்த அளவுக்கு தொகுதி மக்களை நம்பி இருந்தார் ஸ்டாலின். ஆனால் தேர்தல் முடிவுகள் வேறாக இருந்தது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக எதிர்பாராத தோல்வியை சந்தித்தது.
அதிர்ச்சித் தோல்வி

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் இருந்த கட்சிக்கு இந்த தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை விட அதிர்ச்சியாக பல ஆண்டுகளாக தொடர்ந்து முக ஸ்டாலின் வெற்றி பெற்று வந்த கொளத்தூர் தொகுதியிலேயே அவர் தோல்வி அடைந்தது திமுகவினரை கடும் வேதனையில் ஆழ்த்தியது. முதல்வராக இருந்த காலத்தில் அத்தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியிருந்தார்.
விஎஸ் பாபு

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விஎஸ் பாபு போட்டியிட்டார். முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், 74 ஆயிரத்து 22 வாக்குகள் பெற்ற நிலையில் விஎஸ் பாபு 82997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுமார் 8700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் ஸ்டாலின். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.
MK Stalin Kolathur
தேர்தல் ஆணையம்

இருந்த போதும் நேரடியாக மக்களை சந்தித்து நன்றி தெரிவித்திருந்தார் ஸ்டாலின். இந்த நிலையில் தான் அதிரடி திருப்பமாக தேர்தல் ஆணையத்தை நாடி இருக்கிறார் மு க ஸ்டாலின். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் 14 பூத்துகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்ததா என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும், அந்த பூத்துகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்து அதில் எந்தவித குளறுபடியும் இல்லை என்பதை தங்கள் முன்னிலையில் செய்து காட்ட வேண்டும் என தேர்தல் அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தார்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி வேட்பாளர்கள் அனைவருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் இப்படி ஒரு சரிபார்ப்பு நடந்த நிலையில் அந்த அடிப்படையில் தனக்கும் அதே போல செய்து காட்ட வேண்டும் என விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பம் சட்டப்படி பரிசீலிக்கப்பட்டு நாளை காலை 9 மணிக்கு 14 பூத்களில் பதிவான வாக்குப்பதிவு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மறு ஆய்வு செய்யப்பட இருக்கிறது.
மறு ஆய்வு

தற்போது அந்த 14 பூத்களில் மிஷின்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் நாளை காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. அப்போது தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு விவரங்கள் மீண்டும் சரி பார்க்கப்பட இருக்கிறது.
தேர்தல் ஆணைய அதிகாரிகள்

இதில் வேட்பாளர்கள் அல்லது வேட்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பத்திரிகையாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். ஒருவேளை அதில் மாறுபாடு இருந்தால் மறு தேர்தலுக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றம் செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.
மாதிரி வாக்குப்பதிவு

மேலும் வாக்குப்பதிவு இந்திரங்களின் நம்பகத் தன்மை குறித்து ஒரு மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்படும். அதாவது வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஃபார்மெட் செய்யப்பட்டு திமுகவினர் மட்டும் தங்கள் எண்ணத்திற்கு ஏற்ப எந்த சின்னத்துக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். உதாரணத்திற்கு 100 வாக்குகள் பதிவு செய்து, அதில் உதயசூரியன் உள்ளிட்ட சின்னங்களுக்கு வாக்களித்துவிட்டு அது சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
மறு தேர்தல்

ஒருவேளை அதிலும் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால் மறு தேர்தல் கோரிக்கை விடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது இதற்கு ஒரு பூத்துக்கு 47 ஆயிரம் ரூபாயை ஸ்டாலின் செலுத்தி இருக்கிறார். இதேபோல 14 பூத்துகளுக்கும் அவர் 65,8000 கட்டணம் செலுத்தி இருக்கும் நிலையில் நாளை மாதிரி வாக்கு பதிவும், வாக்குகளை சரிபார்க்கவும் தயாராகி வருகின்றனர் திமுகவினர்.

TVS Verde Vista – உங்கள் கனவு வீட்டின் புதிய அடையாளம்.

கருத்துகள் இல்லை: