Murugesu Kanagalingam : நல்லூர் கந்தசாமி கோயில் சுற்றாடலில் உள்ள பொது மலசலகூடத்தின் நிலைமை என்று தலைப்பிட்டு ஒரு அன்பர் படங்களுடன் பதிவு ஒன்றைப் போட்டிருந்தார்.
இங்கிருந்து படத்தைப் பார்க் கும்போதே,குமட்டலோடு,வாந்தி வருமாற் போல இருக்கிறது.
இவற்றைப் பார்க்க நேரி டுவது பாவம் செய்த கண்களுக்கே நேரும்.
அந்தப் பதிவாளர் மாநகர மேயரையும் சாடி யுள்ளார். உண்மையில்,நிர்வாகங்கள் இவற்றைக் கவனிக்க வேண்டிய கடமைப்பாடுடையவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, கிடையாது.
மறுபுறம்,எமது மக்கள் எப்போதும் வெறும் காட்டான்களாகவே இருக்கிறார்கள்.
இலங்கையில் எந்த இடத்தில் போனாலும் கக்கூசுகள் அழுக்காக, அவலட்சணமாக, மூக்கைப் பொத்திக் கொண்டே உள்நுழைய வேண்டிய இடங்களாக இருக்கின்றன.
இந்த அழுக்குக் கூட்டம் மொழி உரிமை, மத உரிமை விஷயங்களில் பெரிய முனைப்புக் காட்டுவது பெரும் வேடிக்கை. கல் தோன்றி,மண் தோன்றாக் காலத்து மூத்தவர் நாம் என்று முட்டாள் பெருமை பேசுவதில் முன்னிற்பர்.
நல்லூரில் சாந்துப்பொட்டு சலசலக்க,சந்தன ப்பொட்டு கமகமக்கப்,பட்டுப் பீதாம்பரங்களுட ன்,கழுத்து, கைகளில் நகைகள் மினுங்கப் பவனி வரும் நாரீமணிகளின் வாரிசுகளே இந்த கக்கூசுகளை அசிங்கம் பண்ணிவிட்டு அகலும் பிரகிருதிகள் என்றால் அது தவறல்ல. யார் எவரும் மலசலகூடங்களைச் சுத்தமாகவோ,அழகாகவோ வைத்திருக்க நினைப்பதோ,முயல்வதோ கிடையாது.
யாழ்.நகர பஸ் நிலையத்தில் ஒரு கழிவறை உண்டு. வெளியே, கதிரை,மேசை போட்டுக் கொண்டு ஒருவன் இருப்பான்.முன்னர் நான் போன நேரத்தில் 20ரூபா வாங்கிக் கொண்டு உள்ளே போக விடுவான்.அங்கே கால் வைக்க முடியாது. கரிய,அழுக்கும், சேறுமாக இருக்கும். எப்படி இது?ஏன் அந்த மனிதன் ஒரு உதவியாளை வைத்துக்கொ ண்டு,நீர் ஊற்றித் தரையைக் கழுவிவிடக் கூடாது?இவர்களுக்கு மாநகரசபைச் சம்பள மும் உண்டு. மக்களிடம் வசூலிப்பது பல ஆயிரங்கள் வரும்.ஆனால் வேலைதான் கண்துடைப்பாக உள்ளது.
உள்ளே போகும் மனித மிருகங்கள் ஏன் கழி வறைகளைத் தூய்மையாகப் பாவிக்கக் கூடாது?பனைவளவில் மலம் கழித்து விட்டுக் கல்லால்,பனங்கொட்டையால் துடைத்து விட்டுப்போகும் பழக்கம்தானே இது?காந்தி தனது ஆரோக்கிய வழி என்ற நூலில் எழுதியிருந்தார்,பூனை எங்காவது மலம் கழி த்தால்,தனது கால்களால் மண்ணை விறாண்டி மூடி விட்டுப் போகும் என்று... ஆனால், இங்கே பொது மலகூடங்களைப் பாவிக்கும் மனிதப் பதர்கள் அதை நீரூற்றித் துப்பரவு செய்வதில்லை.நாய் கழித்தது மாதிரிக் கழிந்து விட்டுப் போய் விடுகிறார்கள்.அருவருப்பான கூட்டம்....
கனடாவில் கழிவறை என்றே சொல்வதில் லை.wash room வாஷ் றூம் என்றே சொல் வார்கள்.பளபள என்று கிளீனாக,துப்பரவாக
அழகாக இருக்கும். அப்படிப் பராமரிப்பார்கள் தமிழர் வீடுகளில் கூட,சுவாமிப்படம் வைத்து வணங்கும் அறைக்கு அடுத்த, அறையில் வாஷ்றூம் இருக்கும். இங்கே இது எல்லாம் வழமைதான்.சுத்தமும்,சுகாதாரமும் இருக்கும் இடமே இறைவன் இருக்கும் இடமுமாகும்.
இங்குள்ள சகல இந்துக் கோவில் வளாகங்க ளிலும்,ஆண்,பெண்களுக்குத் தனித்தனி வாஷ்றூம் வசதிகள் உள்ளன. சகல உணவு விடுதிகளிலும்,இத்தகைய வசதிகள் உள்ளன. இது அரசின் சட்டம் ஆகையால் மீற முடியாது.
இத்தகைய கண்டிப்பான சட்டநடைமுறைகள் மக்களின் பழக்க,வழக்க,பண்பாட்டு, நாகரிக முன்னேற்றங்கள் இன்னமும் 100--200 வருடங்கள் சென்றாலும்,நமது நாட்டு மக்களுக்கு வரவே வராது என்பதே எனது ஆதங்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக