jaffnamuslim.com : கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி கொல்லப்பட்டவன் சர்வதேச கணினி குற்ற வலையமைப்பின் தலைவரும் கோடீஸ்வரருமான ஹாவோ போன் என்ற சீனப் பிரஜை ஆவான்.
கணினி குற்றங்கள் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் தொடர்பான கடுமையான தகராறு இந்த கொலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த குற்றத்தில் சுமார் 20 சீனப் பிரஜைகள் சம்பந்தப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த அன்று நண்பர்களாக நடித்த 2 சீனப் பிரஜைகள் பாதிக்கப்பட்ட கோடீஸ்வரரை துறைமுக நகரில் உள்ள ஒரு பாலத்திற்கு அழைத்துச் சென்று, ஒன்றாக மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சீனக் கும்பல் அவரைக் கடத்தி எஹலியகொட கரதன பிரதேச காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று கை, கால்களைக் கட்டி, கொடூரமான சித்திரவதைகளைச் செய்து, வெட்டி கொலை செய்து உடலை கற்களால் மூடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக