![]() |
![]() |
ராதா மனோகர் : 2000 இலங்கை போரில் ஒரு முக்கியமான காலகட்டம்
குறிப்பாக புலிகளுக்கு எதிராக பலநாடுகள் ஒற்றுமையாக செயல்பட தொடங்கியது இந்த காலக்கட்டத்தில்தான்.
இந்த திருப்பத்தை சரியாக கணித்திருந்தால் ஒரு சிலவேளை பின்பு நடந்த அவலங்களை புலிகள் தவிர்த்திருக்க முடியும்.
யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நோக்கத்தில் புலிகளின் ஓயாத அலைகள் 4 செப்டெம்பர் மாதம் ஆரம்பித்தது
கருணாவின் ஜெயந்தன் படையணி யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் முனைப்புடன் எழுதுமட்டுவாளில் நிலை கொண்டிருந்தது..
கிழக்கு முனையில் நாகர் கோவில் வாசலில் காத்து நின்றது
மேற்கு பக்கமான கிளாலி முனையில் தயார் நிலையில் நின்றது.
2000 ஆண்டு எப்பிரல் 30 ஆம் தேதி பலாலி ராணுவத்தளத்தின் மீது புலிகளின் கனரக ஆர்டிலரி குண்டு தாக்குதல் செய்வதற்கு இன்னும் சரியாக ஐந்து கிலோ மீட்டர் தூரம் மட்டுமே உள்ளது என்று அமைச்சர் மங்கள சமரவீர ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதை கேட்டு முழு இலங்கையும் அதிர்ச்சி அடைந்தது,
பலாலியில் நிலை கொண்டிருந்த (40000) நாற்பதாயிரம் ராணுவத்தினருக்கு உரிய உணவு மருந்து மற்றும் ஆயுதங்கள் கொண்டு செல்வதற்கு உரிய வழிகள் பெரும்பாலும் அடைக்க பட்டுவிட்டன.
ஜனாதிபதி சந்திரிகா மிகபெரும் நெருக்கடிக்கு உள்ளானார்
பலாலி ராணுவ தளம் புலிகளின் கைகளில் விழும் அபாயம் நெருங்கி கொண்டிருக்கிறது

மறுபுறத்தில் வெறும் ராணுவத்தினர் மட்டுமல்லாமல் ஏராளமான கனரக ஆயுதங்களும் அந்த முகாமில் இருந்தன.
அவையும் புலிகளின் கைகளில் விழக்கூடிய வாய்ப்பும் தாராளமாக இருந்தது
அப்படி நேர்ந்தால் சந்திரிகா அம்மையார் மக்களுற்கு என்ன பதில் சொல்ல முடியும்
இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் மிகவும் பாரதூரமானவை.
முதலில் அந்த 40000 ராணுவத்தினரை பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சியை மூன்றாம் தரப்பு பேச்சவார்த்தைகள் மூலம் மேற்கொண்டார்
இந்த விடயத்தில் இந்தியா பாகிஸ்தான் இஸ்ரேல் சீனா ஆகிய நாடுகளின் உதவியை நாடினார்.
ராணுவத்தினரை வெளியேற்றும் முயற்சியை புலிகள் ஆதரித்தனர்
ஆனால் ஆயுதங்களோடு அவர்கள் வெளியேற புலிகள் சம்மதிக்கவில்ல
அதாவது அந்த ராணுவத்தினரை உயிரோடு வெளியேற அனுமதிப்பதற்கு கூலியாக,
ஏராளமான ஆயுதங்களை வைத்து விட்டு வெளியேறவேண்டும் என்பதாக அவர்களின் போக்கு இருந்தது
இது சந்திரிகா அம்மையாரால் ஏற்று கொள்ள முடியாததாக இருந்தது

ஒரு பயங்கரவாத இயக்கத்திடம் இவ்வளவு பெரிய ஆயுத கிடங்கை கொடுத்து விட்டால் அத்தோடு இலங்கையின் கதையே முடிந்தது என்ற அளவில் தென்னிலங்கையில் தீ மூண்டிருக்கும்
மறுபுறத்தில் பலாலி ராணுவ முகாமில் உள்ள ராணுவத்தின் பாதுகாப்பு கேள்வி குறியானதை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளும் பல்வேறு இனவாத இடதுசாரி இயக்கங்களும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விடத்தொடங்கினார்கள்
இவர்களை அடக்குவதற்காக கடுமையான பாதுகாப்பு சட்டங்களையும் அறிவிப்புக்களை அரசு அறிமுகப்படுத்தியது .

கொழும்பில் பல நாடுகளின் ஆயுத வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் குவிந்தனர் battle tanks from Czech Republic, fighter bombers from Israel, fighting ships from Israel, mortars from Iran, mortar locating devices from United States and communication equipment from the United Kingdom.
இதன் மூலம் இலங்கையின் ராணுவ பலம் உண்மையாகவே அதிகரித்தது என்பதை பின்பு அவர்கள் புலிகளை யாழ்மாவட்டத்தில் இருந்து பின்தள்ளியதில் தெரிந்தது
இந்த அவசர ஆயுத கொள்வனவு Rs. 5920 billion ரூபாயாக எகிறியது.
ராணுவத்தினரை மீட்கும் முயற்சியை இந்திய அரசு கொஞ்சம் கவனமாகவே அணுகியது
இந்த விடயத்தில் இலங்கைக்கு உதவ இந்தியா தயாராகவே இருந்தது
ஆனால் ஏற்கனவே புலிகளோடு இந்திய அரசுக்கு ஏற்பட்ட அனுபவங்களை கொண்டு புலிகள் எந்த நேரமும் எந்த எல்லைக்கும் செல்லக்கூடும் எனவே அவர்களை இட்டு ஒரு அதீத கவனம் தேவை என்று கருதியது.
அதாவது சமாதான ரீதியில் ராணுவத்தினரை மீட்கும் முயற்சியை குழப்புவதற்கு புலிகள் முயல கூடும் .
அப்படி நடந்தால் இன்னொரு இந்திய புலிகள் சண்டையாகி வேறொரு கோணத்தில் திசை திரும்பி விடும் என்று வாஜ்பாயி தயங்கினர் என்று தெரிகிறது
மறுபுறத்தில் அமெரிக்காவும் ஏறக்குறைய இது போன்ற ஒரு தயக்க நிலையிலே இருந்ததாக தெரிகிறது
ஆனால் அமெரிக்க தனது கடற்படை கப்பல் ஒன்றை வடக்கிற்கு அனுப்பியது
நிலைமை இவ்வாறு இழுபறியில் நின்ற அந்த கால இடைவெளியில் இலங்கைக்கு பல்குழல் பீரங்கியை முதல் தடைவையாக கிடைத்தது
கிளிநொச்சி இயக்கச்சி பரந்தன் பகுதிகளை புலிகள் கைப்பற்றுவதற்கு மிகப்பெரும் காரணியாக Multi Barrel Rocket Launchers பல்குழல் பீரங்கி இருந்தது
இது இலங்கை ராணுவத்திடம் அப்போது இருக்கவில்லை.
புலிகளின் ராணுவ மேலாண்மைக்கு இந்த பீரங்கிதான் காரணம் என்று பெரிதும் கூறப்பட்ட நிலையில் இலங்கையும் அதை பாகிஸ்தானில் இருந்து பெற்று கொண்டது
இதில் ஒரு வேடிக்கை பாகிஸ்தானும் இந்தியாவும் கூட்டாகவே இந்த விடயத்தில் இலங்கைக்கு உதவின.
பாகிஸ்தானில் இருந்து Multi Barrel Rocket Launchers(MBRL பீரங்கிகளை ஏற்றிக்கொண்டு அன்டோனோவ் ரக பெரும் கார்கோ விமானங்கள் டெல்லிவரை வந்து அங்கு தரை இறங்கி எரிபொருள் நிரப்பிய பின்பு சென்னை வந்து அங்கும் எரிபொருள் நிரப்பிய பின்பு பத்திரமாக அங்கிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன
இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரிநாடுகளாக கருத்தப்பட்டாலும் புலிகளை அழிக்க வேண்டும் என்பதில் ஒற்றுமையாக செயல்பட்டுள்ளார்கள்.
புலிகள் எவருக்குமே நட்பு சக்தியாக இருக்கவில்லை
எவரும் நம்பக்கூடிய சக்தியாகவும் இருக்கவில்லை
நம்பவைத்து கழுத்தை அறுப்பதை ராஜதந்திரம் என்று கருதி கொண்டார்கள் புலிகள்
இந்த இடத்தில தோழர் ஜெயகாந்தன் அவர்கள் முன்பு பேசிய ஒரு மேடைப்பேச்சு ஞாபகத்திற்கு வருகிறது
:" இவர்கள் தமிழர்களுக்கும் நண்பர்கள் இல்லை
இவர்கள் ஈழத்து தமிழர்களுக்கும் நண்பர்கள் இல்லை
இந்தியாவுக்கும் நண்பர்கள் இல்லை
இலங்கைக்கும் நண்பர்கள் இல்லை
தமக்கே நண்பர்கள் இல்லை"
தோழர் ஜெயகாந்தன் கூறியதுதான் இறுதியில் இதுதான் நடந்தது
இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வரலாற்றில் முதலும் கடைசியுமாக ஒற்றுமையாக மேற்கொண்ட ஒரு ராணுவ நடவடிக்கை இதுமட்டும்தான் என்று எண்ணுகிறேன்.
எல்லோரையும் பகையாளிகளாக்கியது தலைவரின் ராஜதந்திரம் என்றுதான் அவரின் ஆதரவாளர்கள் கூறுவார்கள்
deploying the newly acquired Multi Barrel Rocket Launchers (MBRL). They spewed fire on enemy positions and, at least on May 19
பல்குழல் பீரங்கி இலங்கையின் கைகளுக்கு கிடைத்த பின்பு போரின் போக்கு திசை மாறியது
இலங்கை ராணுவம் மெதுவாக புலிகளை பின்னோக்கி தள்ளி பாதுகாப்பு அரண்களை அமைத்துக்கொண்டது
இந்த இடத்தில இன்னொரு முக்கிய செய்தி இருக்கிறது
உண்மையில் அன்று ஓரிரு நாட்கள் தாமதிக்காமல் தொடர்ந்து தாக்கியிருந்தால் பலாலியையும் புலிகள் பிடித்திருப்பார்கள்
ஆனால் மேற்கொண்டு கருணாவின் ஜெயந்தன் படையணியை முன்னேற வேண்டாம் என்று பிரபாகரன் தடுத்துவிட்டார் என்று நம்பகமான செய்தி உள்ளது
அந்த காலக்கட்டங்களில் திரு வைகோ அவர்கள் இந்திய உள்நாட்டு அமைச்சர் திரு எல் கே அத்வாணியோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார்
அவர் ( வைகோ ) அப்போது புலிகளோடு சட்டர் லைட் தொலைபேசி மூலம் பேசிக்கொண்டிருந்தார்.
புலிகள் வைகோ மூலம் இந்தியா அரசோடு ஒரு மறைமுக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அத்வானி வைகோ மூலம் புலிகளை பயமுறுத்தினார் என்று உறுதிப்படுத்த படாத செய்திகள் வலம் வந்தன.
மேற்கொண்டு பலாலியை நோக்கிபுலிகள் நகர்ந்தால் இந்திய ராணுவம் மீண்டும் வரும் என்ற செய்தியை பிரபாகரனுக்கு வைகோ கூறினார்
இதனால் புலிகள் பயந்து பின்வாங்கினர் என்று நம்புவதற்கு முகாந்திரம் உள்ளது
மீண்டும் ஒரு முறை இந்திய ராணுவத்தோடு மோதுவதற்கு புலிகள் தயாராக இல்லை .
உண்மையில் இந்திய மீண்டும் வருவதற்கு வாய்ப்பில்லை ஆனால் அத்வானி இந்திய ராணுவ பூச்சாண்டியை காட்டி பிரபாகரனை பயமுறுத்துவதில் வெற்றி கண்டார்
வைகோ மீது அதீத நம்பிக்கை கொண்ட பிரபாகரனை வைகோதான் அத்வானியின் வழிக்கு கொண்டுவந்தார்.
பிரபாகரன் வைகோ மீது அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது தெரிந்ததே.
இது பற்றி கேர்ணல் கருணா பேசும்போது எங்களால் பலாலியை சுலபமாக பிடித்திருக்க முடியும் ஆனால் தலைவர் சம்மதிக்கவில்லை அது ஏனென்று தெரியவில்லை என்றார்.
கைத்தடி வரை முன்னேறி வந்த புலிகள் ஏன் திடீரென்று பின்வாங்கியது என்பது இன்றுவரை மர்மாகவே உள்ளது. இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க கூடிய ஒரே மனிதர் வைகோதான். ஆனால் அவர் பேசமாட்டார். ஒருவேளை பேசினாலும் ஒருபோதும் உண்மை பேசமாட்டார்.
இந்த சவாலான காலப்பகுதியை ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் பொறுமையோடு வெகு திறமையாக கடந்து விட்டார்
உண்மையில் சந்திரிகா அம்மையாரின் ராஜதந்திரம் போற்றுதற்கு உரியதுதான்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக