மதுரம் சந்திரசேகர் ; பொற்கொடிக்கு பிரதிநிதித்துவம் அளித்த அதிமுக அளித்துள்ளதால் அண்ணன் திருமாவளவன் அவருக்கு ஆதரவா இரட்டை இலைச்சின்னத்தில் வாக்கு கேட்பார் போல..
ஒரு பக்கம் சனாதன எதிர்ப்பு பேசிவிட்டார் என்கிறீர்கள்..
பூவை மூர்த்தி பாஜகவுடன் கூட்டு.ரஞ்சித் சங்கிகளுடன் கைகோர்த்திருக்கிறார்..
இவர்களெல்லாம் அவர்களது சாதியவர்கள் பிரதிநிதித்துவம் பெற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிர் சித்தாந்தாந்தத்தை ஆதரிக்கின்றனர்.
இவர்களுக்கு எதிராக அண்ணன் சனாதன எதிர்ப்புக்குரல் எழுப்புவதில்லை.
அதிமுக இவருக்கு எதிர் கூட்டணி..
இவர் எதிர்ப்பதாக கூறும் சனாதன ஆதரவு கூட்டணி.. பொற்கொடி வெற்றி பெறுவதை வரவேற்கும் இவர் ஆர். கே நகரில் திமுக கூட்டணி தோற்பதை விரும்புகிறார்தானே..
பொற்கொடி அவர்கள் வெற்றிபெற்று, பிஜேபியிடம் தமிழ்நாட்டை அடகுவைப்பதற்கு அவர் துணைபோவதையும் வரவேற்பார் போல...
இவர்களுக்கு அடிப்படை எண்ணமெல்லாம் இவர்களது சாதியைச்சார்ந்தவர்கள் எந்த கேடுகெட்ட சித்தாநத கூட்டணியில் நின்றாலும் அவர்கள் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது...
இம்மாதிரி எண்ணச்செயல்பாடுகளின் அடிப்படையில்தான் ஒரு கட்சி சாதிக்கட்சியா அல்லது சமத்துவக்கட்சியா என்பது மக்கள் மன்றத்தில் முடிவாகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக