ஞாயிறு, 29 மார்ச், 2026

ஒரு கட்சி ஆட்சியும் பல கட்சி ஜனநாயக ஆட்சி முறையும்

 Santhirapalan Saminathar  : ஜனநாயக நாடுகளில்  பலர் குறிப்பிடும் குறைகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.  ஜனநாயகம் தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதை . 
இதை வளர்த்து எடுப்பது மக்கள் தான். 
நவீன உற்பத்தி முறை வளர்ச்சி,  மக்களை சிந்தனையிலும் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. 
இலங்கை இந்தியாவில் இருக்கும் ஜனநாயக அரசுகளுக்கும் நோர்வே, சுவீடன், சுவிஸ் அரசுகளுக்கும் இடையே ஜனநாயக வளர்ச்சி பாரிய அளவு வித்தியாசம் ஆகும் 
நோர்வே,டேன்மார்க், சுவீடன், நியூசிலாந்து, ஜஸ்லாந்து அரசுகளின் ஜனநாயகம் நல்ல வளர்ச்சி அடைந்தவை. ஜனநாயகத்தில் குறைகள் இருக்கு என்பதற்காக மன்னர் ஆட்சிக்கு சென்று விட முடியாது. 
அல்லது அதன் சாயலான  ரஸ்சியா, சீனா, வடகொரியா, ஈரான் சர்வாதிகார ஆட்சிக்கு சென்றுவிட முடியாது. ஜனநாயகத்தின் அடிப்படை பல கருத்துக்களும் மோதி மக்கள் தெளிவடைவதற்கான களமாக இருப்பதுதான். பல கட்சிகளின் தேர்தலில் மக்கள் தமது ஆட்சியாளரை  தெரிவு செய்யும் முறையாகும்.  


மக்களின் தெரிவு மக்களை படிப்படியாக உயர்ந்த ஜனநாயக விழுமியங்களை கொண்ட கட்சிகளை தெரிவு செய்ய ஆற்றல் உள்ளவர்களாக மாற்றும். 
இன்றைய சர்வதேச சட்டங்கள் என்பது கூட ஜனநாயக அடிப்படை கொண்டது அல்ல. 
அரசுகள் தமது இருத்தலை உறுதிப்படுத்த வகுத்த சட்டங்கள் தான். 
ஐ நா சபை கூட ஒரு ஜனநாயக அமைப்பல்ல . 
ஜனநாயகம் என்பது ஒரு நீண்ட பயணம்.  
அது ஒரு நிரந்தர கட்டமைப்பு அல்ல. 
மக்களின் சிந்தனை வளர வளர கூடவே ஜனநாயகமும் வளரும். 

உலக ரீதியில் பார்த்தால் ஜனநாயகப் பாதையில் சிறிய தூரமே பயணித்துள்ளோம்.   
இதில் சலிப்படைந்து பின்னோக்கி பயணிக்க முடியாது. 
துன்பப்பட்டு கஸ்ரப்பட்டு களைப்படைந்தென்றாலும் இப்பாதையில் தான் பயணிக்க முடியும்.  
இதை மறுத்து, பயணிக்க மறுக்கும் அரசுகளை வளர்ந்த அரசுகள்  இப்பலயீனத்தை பயன்படுத்தி தமது மேலாதிக்கத்தை நிறுவ முயல்வர்.
 (வேறு பதிவில் இடப்பட்ட பின்னூட்டம்)

கருத்துகள் இல்லை: