வியாழன், 5 ஜூன், 2025

மனைவி சுவர்ணலதாவின் தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர் சுகிர்தரன்! வவுனியாவில் ஏனிந்த கொடூரம்

 Vijaya Baskaran  :  ஏனிந்த கொலை வெறி
வன்னியில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் மனைவியை வெட்டிக் கொலை செய்து தலையோடு பொலிசில் சரண் அடைந்துள்ளார்.இந்தக் கொலைக்கு மனைவியின் தவறான உறவு என ஊடக செய்திகள் கூறுகின்றன. இதில் உண்மை பொய் தெரியாது.
ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு எதிரான பரப்புரைகளில் பாலியல் தவறுகள் முன் வைக்கப்படுகிறது.இது மிகவும் இலகுவானதும் மலினமான பரப்புரைகளாகும்.இந்த சமூகம் ஒழுக்கம் என்ற விசயத்தில் ஒரு பெண்ணில் மட்டுமே பார்க்கிறது. பெண்ணிடமே எதிர்பார்க்கிறது.ஆண்களின் தவறுகளை கணக்கெடுப்பதே இல்லை. இதைவிட பெண்களை பெண்களே தவறாக பார்ப்பதும் விமர்சனம் பண்ணுவதும் மகா கொடுமை.
ஒரு ஆணைக்கூட கெட்டவனாக காட்ட பெண் தொடர்புகளை இந்த சமூகம் கட்டவிழ்த்துவிடுகிறது.அங்கேயும் பெண்தான் பலிக்கடா ஆகிறாள்


இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கும்போது முற்போக்குவாதிகள் இலக்கியவாதிகள் இடதுசாரிகள் பணம் படைத்த படித்த பெண்ணிலைவாதிகள்கூட மௌனம் சாதிப்பது மிகவும் கொடுமையான விசயம்.இந்த சம்பவத்தில் எந்த்தப் பெண்ணும் வாய் திறந்ததை காணவில்லை.
சில ஆண்டுகள் முன்பாக கனடாவில்கூட கணவனிடம் இருந்து விலகி வாழ்ந்த பெண்ணை கணவன் பொதுவீதியில் வைத்து வெட்டிக்கொன்றான். அவனும் நமது யாழ்பாண தமிழன்தான்.
இதே கனடாவில் ஒரு பெண்ணை காரோடு  வைத்து கொழுத்தி அவனும் எரிந்தே சாம்பலானான்.இன்னொரு பெண் காரில் இறங்கி் வருவதை சந்தேகப்பட்டு அடித்துக் கொலை செய்தான்.
இன்னொருவர் கூலிக்கு ஆளை பிடித்து கொலை செய்வித்தார்.எல்லாரும் தமிழர்கள்தான்.
பெண்ணைப் பிடிக்கவில்லை. அவள் போக்கு பிடிக்கவில்லை என்றால் விலகிப் போகவேண்டியதுதானே. அதற்கு கொலையா தீர்வு?
ஒரு இருபது வருடங்கள் முன்பாக என் நண்பர் ஒருவர் தன் மனைவியை குழந்தைகளை விட்டு கனடா வந்தார். மனைவிக்கே அங்கே வேறு தொடர்பு ஏற்பட்டது. அது தெரிந்தும் அவளை குழந்தைகளை கனடாவுக்கு அழைத்தார். அவளால் அவரை விட முடியவில்லை.
அவர் அந்த ஆணை கனடாவுக்கு கொண்டுவர முயன்றார். நான் திட்டினேன். அவர் சொன்னார்.
நான் அவளை விரும்பி காதலித்து கல்யாணம் செய்தேன். நான் காதலிக்கும்போது அவளது சந்தோசமே என் சந்தோசமாக இருந்தது.இப்பவும் அவள் சந்தோசமாக இருக்கவேண்டும். அதற்காக இதை செய்கிறேன் என்றார்.
அவரும் வந்தார் . சில காலங்களின் பின் அவன்
 விட்டுப்போக இவள் தனிமைப்பட்டாள்.என் நண்பர் மறுபணம் செய்து வாழ்கிறார். அவளோ இப்போது இவளின் நினைவாக வாழ்கிறாள்.இது பொய்யல்ல உண்மைக்கதை.
இந்தப் பெண் ஒருவர் மீது ஆசைகொண்டால் கணவன் விலகவேண்டும். அவளைக் கொல்ல அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது.?மனிதர்உணர்ச்சிகளும் உணர்வுகளும் வித்தியாசமானவை.சிலருக்கு அடிக்கடி பசிக்கும். சிலர் குறித்த நேரமே சாப்பிடுவார்கள். சிலருக்கு சில உணவுகள் பிடிக்கும். சிலருக்கு அது பிடிக்காது.
இந்தியர்கள் போல மாடு சாப்பிடாதே. மரக்கறிதான் சாப்பிடவேண்டும் என சட்டம் போடக்கூடாது.
இப்படிப்பட்ட விவகாரங்களில் குடும்பங்கள்கூட ஊரோடு ஒத்துப்போவது முட்டாள்தனமானது. இவை நிறுத்தப்படவேண்டும்.இந்தக் கொலைகாரன் தண்டிக்கபட வேண்டியவன். 
கிட்டு 1984 இல் சுப்பிரமணியன் என்ற பொலிஸ் அதிகாரியின் தலையை அறுத்து கொண்டுபோய் மீசாலையில் வைத்தான். அதற்குப் பின்னர் இந்தக் கொலைகாரன் சொந்த மனைவியின் தலையை அறுத்துக் கொண்டு பொலிஸ் நிலையம் போயிருக்கிறான்.இந்த தவறுகளுக்கு வாழ்த்துகள் கூற ஒரு கூட்டம். மிருக கூட்டம்

கருத்துகள் இல்லை: