சுமந்திரன்MP |
திரு..சுவாமிநாதன்! |
luxmi mittal narendra modi |
ராதா மனோகர் : அண்மையில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுமந்திரன் அதில் தோல்வி அடைந்தார்.
சுமந்திரனின் தோல்வி நாக்பூரில் (ஆர் எஸ் எஸ் தலைமை செயலகம்) திட்டமிடப்பட்டது என்றுதான் எண்ணுகிறேன்.
திரு சுமந்திரன் இந்திய பாஜக அரசின் வெறுப்புக்கு ஏன் ஆளானார்?
சுமந்திரன் கிறிஸ்தவர் என்பதை தாண்டி சுமந்திரன் மீது மோடியரசு கோபமாக இருப்பதற்கு ஒரு வரலாற்று காரணம் இருக்கிறது.
சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு அசல் குஜராத்தி கொள்ளையை சுமந்திரன் தடுத்து நிறுத்தி இருக்கிறார்
மோடியின் செல்லப்பிள்ளையான லக்ஷ்மி மிட்டலின் ஆஸ்லர் மிட்டல் கம்பனியின் பொருத்து வீட்டு கொள்ளையை சுமந்திரன் முன்பு தடுத்து நிறுத்தினார்அதை அவ்வளவு சுலபத்தில் மோடி குழுமம் மறந்து விடுமா?
அதிலும் சுமந்திரனின் தோல்வியை உறுதி செய்யும் பொறுப்பு கிழக்கு மாகாண யோகேஸ்வரனிடம் வழங்க பட்டிருக்க வேண்டும்..
அவர்தானே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மோடி புகழ் பாடுவதும் அர்ஜுன் சம்பத்தின் மேடைகளில் போட்டி போட்டுகொண்டு சினிமாஸ் கோப்பில் சிரிப்பவர்?
எதிர்காலத்தில் மீண்டும் ஒரு குஜராத்து கொள்ளை நடக்க வேண்டுமென்றால் சுமந்திரன் ஒதுங்கி நிற்கவேண்டுமே? நிற்பாரா? மாட்டார்.
இந்த கோணத்தில் இந்த விடயத்தை ஆய்வு செய்வதற்கு உரிய மேலதிக தரவுகள் பின்வருமாறு:
லக்ஷ்மி மித்தல் பிளஸ் மோடியின் நிறை வேறாமல் போன ஒரு ஊழல் கதை ஒன்றுள்ளது.
இது பற்றி இந்திய ஊடகங்கள் வழமை போல கனத்த மௌனத்தை கடைப்பிடித்தன ..
இன்றுவரை ஒரே மௌனம்தான்
இந்த ஊழலை முறியடித்ததில் பெரும் பங்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரனையே சாரும்( இப்படி சொன்னால் அவருக்கு புகழ் போய்விடும் என்று சிலர் வகுப்பு எடுக்கிறார்கள் .. அது வேற கதை இருக்கட்டும்)
சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடியவர்கள் இலங்கைக்கு ஐம்பதாயிரம் வீடுகள் கட்டி கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார் .
பின்பு அதை அறுபத்து அய்யாயிரமாக உயர்த்தினார்
அங்கு ஏற்கனவே மன்மோகன் சிங் அரசு ஏற்கனவே ஐம்பத்தாயிரம் கான்க்ரீட் வீடுகளை கட்டி கொடுத்தது. ..
ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார் ஐந்து லட்சம் ருபாயிருந்து (இந்திய ரூபாய்) ஏழு லட்சம் வரை செலவானது. .
ஆனால் மோடி அறிவித்த வீட்டு திட்டமோ வெறும் (தகர பொருத்து) டின் வீடு சுமார் ஒரு லட்சம் (இந்திய ரூபாய்) ரூபாய் மட்டுமே பெறுமதியானது .
ஆனால் இந்திய அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் ஆகும் செலவை 22 லட்சம் (இந்திய ரூபாய்) என்று அறிவித்தது.
(22 லட்சம் X அறுபத்தி அய்யாயிரம்ர் வீடுகள் .. .. கணக்கு பார்த்து கொள்ளுங்கள்.)
இந்த பொருத்து வீட்டு (தகர வீடு) திட்டத்தின் கான்டராட்க் லட்சுமி மித்தலின் ஆர்சிலர் மித்தல் கம்பனிக்கே வழங்கப்பட்டது
அப்போது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதில் உள்ள ஊழலை அக்குவேறு ஆணிவேராக பிட்டு பிட்டு வைத்து கடுமையாக எதிர்த்தார்
அவரின் ஏராளமான தொடர் போராட்டங்களின் பின் அது ஒருமாதிரி கைவிடப்பட்டது.
மோடியரசின் மோடி வித்தைக்கு அவர்கள் ஒத்து ஊதாமல் விட்டதால் அதன் பின் பெரிதாக வீடு திட்ட முயற்சிகள் முன்னெடுக்கவில்லை.
மோடி கூறிய திட்டத்தின் கால் வாசி தொகையென்றாலும் பயனாளிகளுக்கு கொடுத்திருந்தால் அவர்கள் தாங்களாகவே வீடுகள் கட்டிக்கொண்டிருப்பார்கள்
மன்மோகன் சிங்கின் திட்டம் பெரும்பாலும் அப்படித்தான் குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்டது
ஆனால் மோடியரசோ அடைந்தால் மகாதேவி அல்லது மரண தேவி என்பது போல அந்த திட்டத்தை அடியோடு மறந்தே விட்டது
தமிழரசு கட்சியின் தலைவராக சுமந்திரன் தெரிவானால் அது சங்கிகளுக்கு எதிர்காலத்தில் மீண்டும் பாடம் படிப்பிப்பார் அல்லவா?
அதனால் தங்களின் எடுபிடியை தலைவராக்கி உள்ளது நாக்பூர்.
இந்த பொருத்து வீடுகளை பற்றி திரு அனஸ்லி அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்த தரவுகள் முக்கியமானவை.
Annesley Ratnasingham : இன்று ஒரு பதிவில் ...பொருத்து வீடுகள் வடமாகாணத்துக்கு வருவதை விக்கினேஸ்வரன் மக்களும் எதிர்பதாக சொல்லப்பட்டு இருந்தது.....
அதை நான் விளக்கம் கேட்டு எழுதி இருந்தேன்....
எதற்க்காக அந்த வீடுகள் கூடாது என்று விளக்கத்தை தரும்படி அதை அறிந்து கொள்ள ஆவலாக கேட்டிருந்தேன்....
யாரும் அதை பற்றிய விளக்கத்தை தரவில்லை.....
அதனால் நானே தேட தொடங்கினேன்....
அதன் படி எனக்கு கிடைத்த Information தரவுகளை இங்கே உங்களுக்கும் தரலாம் என்று நினைத்து இதை பதிகிறேன்.....
இந்த வீடுகள் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட கம்பனியின் பெயர் .....
ArcelorMittal Construction Deutschland GmbH ....என்பது....
இது ஒரு ஜெர்மனி இன் கம்பனி....இதன் பதிவு ஜெர்மனி இக்கு பக்கத்தில் உள்ள நாட்டில் Luxemburg இல் பதியப்பட்டு உள்ளது......
இவர்கள் வீடு கட்ட பாவிக்கும் Material இன் பெயர் Sandwich-Elemente Ondatherm என்பது......
இதை எப்படி செய்வது என்றால் ?????
இரண்டு தகரங்களுக்கு இடையில் அல்லது இரும்பு தட்டுகளுக்கு இடையில் Hartschaum என்று ஜேர்மன் மொழியில் சொல்லப்படும் rigid foam என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் திடமான நுரை அவை இரண்டுக்கும் இடையில் செலுத்தி Sandwich-Elemente Ondatherm ஐ உருவாக்கி அதை வைத்து தான் சுவர்களை உருவாக்குகிறார்கள்......
கூரைகள் தகரங்களாலும்....யன்னல் கதவுகள் ஒருவகை பிளாஸ்டிக்கும் மரமும் கலந்தது போன்ற ஒன்றால் ( நல்ல இறுக்கமானது) உருவாக்குகிறார்கள்......
Ondatherm 1003
Ondatherm 2000
Ondatherm 2003....இப்படி மூன்று விதமான Material இருக்கிறது......
இவ்வளவு Information உம் தெரிந்திருந்தால் போதும் ....
இது இலங்கைக்கும் நீண்ட நாள் பாவனைக்கும் பொருந்துமா என்றால்?????
என்னுடைய அனுபவத்தில் இது பொருந்தாத ஒன்று....
இந்த Material ஐ நாங்கள் ஜெர்மனி இல் பெரிய Tennis Hall அல்லது ஒரு கல்யாண மண்டபம் அமைக்க பயன்படுத்துவோம்.....
காரணம் உள்ளே நல்ல சூடாக இருக்கும்....
ற்றையது ....ஐரோப்பா 3 அல்லது 4 மாதங்கள் மட்டுமே வெய்யில் இருக்கும்.....
அதை விட இலங்கை போன்று கடுமையான வெயில் தொடர்ந்து இருக்க வாய்ப்பில்லை....
ஆகவே இது இலங்கைக்கு ஒவ்வாத ஒன்று.....
ஆனால் இன்று இதை கூடாது என்று சொல்பவர்கள் தொடர்ந்தும் சொல்ல மாடார்கள் என்பதையும் உங்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன்......
காரணம் இவர்கள் சொல்லும் சர்வதேசம் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதால்......சுண்ணாகம் தண்ணீரை போலவே....
நான் எழுதியதை மட்டும் நம்பாமல் தயவு செய்து அந்த சுவரில் இரண்டு தகரங்களுக்கும் இடையில் உள்ள Material ஐ வெட்டி பார்க்கவும்! நன்றிகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக