வியாழன், 3 ஆகஸ்ட், 2023

கணவனால் விபச்சார தொழில் செய்தேன்.. 10 முறை கருக்கலைப்பு..ரௌடி பேபி சூர்யா பகீர் பேட்டி! By

Tik tok celebrity rowdy baby surya sad life story

tamil.filmibeat.coம்  Jaya Devi  :   சென்னை: என்னை விபச்சார தொழிலுக்கு அனுப்பியது என் கணவர் தான் என்று ரௌடி பேபி சூர்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
டிக்டாக் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா.
அதில், ஆபாச உடைகளை அணிந்தும், கெட்ட வார்த்தைகளை பேசியும் வீடியோக்களை வெளியிட்டு, சர்ச்சையில் சிக்கிய ரௌடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்த சூர்யா தற்போது, ஆபாசமில்லாமல், கெட்டவார்த்தை பேசாமல் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
சுப்புலட்சுமி என்கிற சூர்யா: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ரௌடி பேபி சூர்யா, என்னுடைய உண்மையான பெயர் சுப்புலட்சுமி,


இந்த பெயரை என் அப்பா தான் வைத்தார். அவர் இல்லாததால் அந்த பெயரை மாற்றிவிட்டேன்.
எனக்கு ஜாதகத்தின் மீது அதிக நம்பிக்கை உண்டு,

இந்த பெயர் எனக்கு ராசியில்லாததால், 20 வருடத்திற்கு முன்பே என் பெயரை சூர்யா என்று மாற்றிக்கொண்டேன்.
பின் மீடியாவிற்குள் வந்ததும் என் பெயர் ரௌடி பேபி சூர்யாவாக மாறிவிட்டது.
18 வயதில் திருமணம்: எனக்கு 18 வயது இருக்கும் போது மாற்றுத்திறனாளி ஒருவருக்கு திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும், வீட்டில் அம்மா விருப்பத்திற்காக அவரை திருமணம் செய்து கொண்டேன். அவருடன் 6 மாதம் வாழ்ந்தேன்.

அதற்குள் குழந்தை இல்லை என்ற பேச்சு வந்த போது கணவரை அழைத்துக்கொண்டு டாக்டரிடம் சொன்றோம்.
அப்போது மருத்துவர்கள் அவருக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லிவிட்டதால்,
பஞ்சாயத்தில் எழுதிக்கொடுத்துவிட்டு எங்களை பிரித்துவிட்டனர்.
திருமணம் செய்யாமலே வாழ்ந்தேன்: அதன்பின் அம்மா வீட்டில் இருந்தேன்,
என்னை யாருமே கண்டுக்கொள்ளவில்லை.
இதனால், திருப்பூருக்கு வேலை பார்க்க வந்தேன்.

அப்போது தான் பாலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அவருடன் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து குழந்தை பெற்றுக்கொண்டேன்.
ஆரம்பத்தில் அவரைப்பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை.
அதன் பிறகுதான் அவன் ஒரு குடிகாரன் என்று தெரிந்தது. Tik tok celebrity rowdy baby surya sad life story 10 முறை கருக்கலைப்பு: இருந்தாலும் அவருடன் சேர்ந்து வாழ்ந்தேன்,

என் கணவர் தான் எனக்கு குடிக்க காற்றுக் கொடுத்தார்.
அவர் தன் என்னை விபச்சார தொழிலுக்கு அனுப்பினார். அப்படி நான் கஷ்டப்பட்டு கொண்டுவரும் பணத்தையும் குடித்துவிடுவார்.
இதுவரை 10முறை கருக்கலைப்பு செய்து இருக்கிறேன்.
கடைசியான என் இரண்டாவது மகன் கருவுற்றபோதும், கருவை கலைக்கத்தான் மருத்துவமனைக்கு சென்றேன்.
ஆனால், முடியாமல் போனதால் இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொண்டு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். எல்லாமே குழந்தைகளுக்காக:

என் முதல் கணவர் பற்றி என் மகனுக்கு தெரியும், அவன் என்னை புரிந்து கொண்டான். இரண்டு குழந்தைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பது மட்டும்தான் என் ஆசை
 இதற்காக எவ்வளவு அவமானத்தை வேண்டுமானாலும் நான் தாங்கிக்கொள்வேன். மேலும், நான் கஷ்டப்பட்ட போது என்னுடன் இருந்தவர் சிக்கா அவரை நான் யாருக்காகவும் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று ரௌடி பேபி சூர்யா தனது வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தை அந்த பேட்டியில் கூறியுள்ளார்

 

கருத்துகள் இல்லை: