திங்கள், 6 ஆகஸ்ட், 2018

மறைந்த திரு நடராசனின் ஈழ வியாபாரம் ,,, இன்றைய ஈழ வியாபாரம்

நந்தா : தமிழக அரசியலில் என்றும் குறையாத அட்சயப்பாத்திரம் ஒன்று
உண்டேன்றால் அது ஈழப்பிரச்சனை தான்.
மறைந்த திரு நடராசன் ஆதரவில் ஈழ வியாபாரம் மிக செழிப்பாக நடந்து கொண்டு இருந்தது. பழ.நெடுமாறன், வை.கோ, சீமான் என ஈழத்தை வைத்து வளர்ந்த பலர் உண்டு. இதில் வை.கோ தவிர மற்றவருக்கு ஈழம் மட்டுமே அடையாளம்.
இவர்களுக்கு இருக்கும் ஒரு சாபக்கேடு என்ன என்றால் இவர்களால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஈழம் வைத்து அரசியல் நடத்த முடியும். அதற்கு மேல் அவர்கள் வேறு பிரச்சனையை கையில் எடுக்க வேண்டும். ஆனால் அதை முறியடித்து இன்னும் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர். ஐ.நா புகழ் திருமுருகன் காந்தி.
யார் இந்த திருமுருகன் காந்தி?
பன்னாட்டு நிறுவங்கள் சர்வதேச அமைப்புகளின் சதிகள் பற்றி பேசிக்கொண்டு இருந்த திருமுருகன். ஐ.நா வில் பேசுகிறேன் என கூறி வலம் வந்து கொண்டு இருந்தவர். முதல் முறையாக ஜெயா மறைவிற்கு பிறகு 2017ல் சென்னை மெரினாவில் நினைவேந்தல் நடத்த முயன்று அதற்காக எடப்பாடி அரசால் மே 29ல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் மீதான ஊடக வெளிச்சம் அதிகமாக பட ஆரம்பித்தது. செப்டம்பர் 20ல் வெளியே வந்த திருமுருகன் அதுவரை இல்லாத மாற்றமாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். பிறகு சீமானிற்கு போட்டியாக சாதியற்ற தமிழ் தேசியம் என பேசி வசூல் வேட்டை ஆரம்பித்து விட்டார்.

திருமுருகன் ஈழப்பாசமோ அல்லது ஈழ அரசியலோ 2009ல் நடந்த முள்ளிவாய்க்கால் சம்பவத்தை மட்டுமே பேசுவார் அதற்கு முந்தைய வரலாற்று பத்தி ஒரு வார்த்தை கூட பேச மாட்டார். அவர் மட்டுமல்ல பெரும்பாலான ஈழ வியாபாரிகள் பேச மாட்டார்கள், அப்படி பேசினால் வருமானம் போய்விடும்.
ஈழப்போராட்டம் என்பது மற்ற பிரச்சனைகளை போல 5,10 ஆண்டுகளில் முடிந்தது அல்ல. அரை நூற்றாண்டு நடந்த போராட்டம். அதை ஒரு சம்பவத்தை மட்டும் வைத்து பேசிவது சந்தர்ப்பவாதம்.
முள்ளிவாய்க்கால் சம்பவத்தை வைத்து கொண்டு திமுக ஆதரவுடன் இந்தியா நடத்தியது என கூறும் இவர்கள் அதன் ஆரம்பத்தில் இருந்து இந்தியா செய்த சம்பவங்களை பற்றி வாய் பேச மறுத்து விடுகின்றனர்.
இந்திரா ஆட்சி காலத்தில் இந்தியா செய்த உதவி. டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரனை எம்.ஜி.ஆர் கொண்டு வந்த ஒப்படைத்த போது அவரை அப்படியே திருப்பிய அனுப்பிய இந்திய ராணுவம். இந்திரா பிரபாகரனை நாடு கடத்த முயன்ற பொழுது அதை தடுத்த கலைஞர். எம்.ஜி.ஆர் செய்த நிதி உதவிகள். ஈழப்பிரச்சனைக்காக இரு முறை ஆட்சியை இழந்த திமுக. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம். பிரபாகரனை இந்தியா காப்பாற்றியது என சிங்கள ராணுவம் கோவப்பட்டு ராணுவ அணிவகுப்பை ஏற்கும் பொழுது ராஜீவ் மீது நடந்த கொலை முயற்சி. ராஜீவை கொலை செய்ய நடந்த மனிதவெடிகுண்டு தாக்குதல். அதில் ராஜீவோடு சேர்த்து கொல்லப்பட்ட அப்பாவி உயிர்கள். படுகொலை திமுக உடந்தை என காங்கிரஸ்காரர்களால் தாக்கப்பட்ட திமுகவினர் என எதையும் பேசாமல் முள்ளிவாய்க்கால் சம்பவம் பற்றி மட்டும் பேசும் பிண அரசியலை தான் திருமுருகன் செய்து வருகிறார்.
ஈழபிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு என்பது ராஜிவ் மரணத்திற்கு பிறகே மாறியது. 2001ல் அமெரிக்க ரெட்டை கோபுரத்தாக்குதலுக்கு பிறகு உலக நாடுகளின் பார்வை இலங்கை மீது திரும்பியது. சீனா, அமெரிக்கா என போட்டி போட்டு இலங்கைக்கு உதவ ஆரம்பித்தது. அந்த நிலையில் கூட நார்வே நாடு ஒரு தூது குழு அமைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்த முயற்சி செய்தது. அதில் புலிகள் சார்பாக பேசியவர்களில் ஒருவர் தான் தளபதி கருணா.
2004ல் அதே கருணா புலிகளுக்கு எதிராக மாறிய பிறகு தான் இராணுவத்தின் கை ஒங்கியது. அதுவே புலிகளின் அழிவுக்கு காரணமாகவும் அமைந்தது.
ஐ.நா மனித உரிமை அமைப்புகளில் பேசும் திருமுருகனுக்கு உலக அரசியல் இதில் இருந்தது தெரியாதா. அப்படி ஐ.நா வில் பேசி திருமுருகன் பெற்றது என்ன.
ஐ.நா என்பது அமெரிக்காவின் கைப்பாவை என்பதை அறியாமலா திருமுருகன் அங்கு பேசி வருகிறார். போரை இந்தியா நடத்தியது என கூறும் அவர். அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானங்களில் இனப்படுகொலை என்ற வார்த்தையை கூட சேர்க்க மறுத்தது பற்றி பேச மறுப்பது ஏன்?. சர்வதேச விசாரணை வேண்டாம் நாங்களே பார்த்து கொள்வோம் என இலங்கை கூறியதற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன்?.
ஈழத்தமிழர் மட்டுமல்லாது பாலஸ்தீனியர்கள், குர்த் இனத்தவர்கள், காஷ்மீரிகள், சீக்கியர்கள் என பேசி வருவதாக கூறும் திருமுருகன். அந்த பகுதிகளுக்கு எத்தனை முறை சென்று இருக்கிறார்?. அவர்களுக்காக மே 17 செய்த செய்த செயல்ப்பாடுகள் என்ன?. குறைந்த பட்சம் அந்த மக்களுக்கு இப்படி ஒருவர் தங்களுக்காக பேசிவருகிறார் என்றாவது தெரியுமா?.
மக்கள் போராளி என மார்த்தட்டு அவர் நீட், ஸ்டெர்லைட், எட்டுவழிச்சாலை பற்றி வாய்த்திறக்காமல் இருப்பது ஏன்?. பெரியார் துணைக்கு அழைத்து அரசியல் பேசும் இதுவரை நடந்த சாதிய படுகொலைகளுக்கு எத்தனை போராட்டம் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியுள்ளார்.
தேர்தல் பாதை திருடர்கள் பாதை என சொல்லும் இவர். தனது அமைப்பிற்கு நேரடியாக வசூலிக்காமல் பதிப்பகத்தின் பெயரில் வசூலிப்பது ஏன்?. அப்படி வசூலித்த பணத்திற்கு முறையாக மக்கள் மன்றத்தில் கணக்கு காட்ட தயாரா?.
ஒரு என்.ஜி.ஒ அமைப்பை உருவாக்கி ஐ.நாவில பேசிவிட்டால் உலகின் வல்லரசான அமெரிக்காவை இன்ன பிற வல்லாதிக்க சக்திகளையும் எதிர்ப்பது போன்ற ஒரு மாயத்தோற்றம் உருவாக்கினால் அதை வாட்சப்பில் வரலாறு படித்தவர்கள் வேண்டுமானால் நம்பலாம், சில்லறைகளை சிதற விடலாமே ஒழிய பெரிதாய் ஒன்றும் நிகழாது. தனது கல்லாவை நிரப்ப வரலாற்றை திரிக்கும் சங்கி செயல்களை வைத்து ரொம்ப நாட்கள் பிழைக்க முடியாது என அவரும், அவரின் வசூல் எஜெண்ட்களும் புரியும் காலம் விரைவில் வரும்.
#நந்தா

கருத்துகள் இல்லை: