/tamil.oneindia.com - /kalai :
"-ராணுவ வாகனத்தில்
சென்னை: மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியின் உடல் முப்படை வீரர்களின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியின் உடல் முப்படை வீரர்களின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
முப்படை வீரர்களின் மரியாதையுடன் கருணாநிதியின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
அவரது இறுதிச்சடங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் பிரதமர் தேவ கவுடா உள்ளிட்டோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பேராசியர் க.அன்பழகன், வைகோ, திருமாவளவன், பொன்.ராதாகிருஷ்ணன், ஜெயக்குமார் , திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் கருணாநிதியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.
ஸ்டாலின் அழகிரி, கலாநிதி மாறன், ராஜாத்தியம்மாள், கனிமொழி, செல்வி, துர்கா உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தாரும் முழு அரசு மரியாதையுடன் அண்ணா சமாதி அருகே நடைபெற்ற இறுதிச்சடங்கில் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது ஸ்டாலின், அழகிரி, செல்வி, கனிமொழி உட்பட குடும்பத்தினர் பலரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக