செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

தமிழக அரசு மருத்துவமனைகளில் 3 இலட்சத்துக்குக் குறையாத பிரசவங்கள் ஆண்டுதோறும்

Ravishankar Ayyakkannu : தமிழ்நாட்டில் அரசு மருத்துவம் இலவசம் என்று
சொன்னால், அது ஏதோ ஒப்புக்குச் சப்பாய் பிழைக்க வழியில்லாத நான்கு பேர் சிகிச்சை பெறும் இடம் என்று நினைக்கிறார்கள். இணைத்துள்ள படங்களில் உள்ள தரவுகளைப் பாருங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 3 இலட்சத்துக்குக் குறையாத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன.
மாவட்ட அளவில் உள்ள மருத்துவமனைகள் முதற்கொண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை 70,000+ படுக்கைகள் உள்நோயாளிகளுக்கு என்று இருக்கின்றன.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகப்பேறுக்கான சிறப்பு மையங்கள், மாவட்ட/வட்ட அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என்று அனைத்தையும் கூட்டினால், அண்மைய ஆண்டுகளில் ஏறத்தாழ 8 இலட்சம் பிரசவங்கள் வரை கூட நிகழ்ந்துள்ளன. இது, தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகள் உட்பட நடக்கும் மொத்த பிரசவங்களில் 72%.
ஒவ்வொரு ஆண்டும் 16 கோடிக்கு மேற்பட்ட வெளி நோயாளிகளைக் கவனிக்கிறார்கள். இது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஆண்டுக்கு இரண்டு முறைக்கு மேல் அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்கு ஈடாகும்.
மறக்காதீர்கள். இச்சிகிச்சை முற்றிலும் இலவசம். டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தாய்க்கும் 18,000 ரூபாய் வேறு கொடுப்பார்கள்.

தகவல் உதவி: National Health Mission.
ஆதாரம்: தமிழக அரசு நிதி அறிக்கை (இணைப்பு மறுமொழியில்

கருத்துகள் இல்லை: