தினமலர் :புதுடில்லி: ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க முடியாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.
முன்னாள்
பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன்,
பேரறிவாளன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார்
ஆகியோர் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய தமிழக
அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில்
முறையீடுசெய்தது.
;தவறான முன்னுதாரணம் : இந்த வழக்கில், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்; ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. ராஜிவ் கொலையாளிகள் விவகாரத்தில் பலக்கட்ட விசாரணை முடிந்து அவர்கள் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு பல கட்ட பணிகளுக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவர்களை விடுவித்தால் நாட்டில் தவறான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.
முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதால், அவர்களை விடுதலை செய்ய முடியாது. இந்த முடிவு தமிழக அரசுக்கு தெரிவிக்கபட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக