திங்கள், 6 ஆகஸ்ட், 2018

ஹீலர் பாஸ்கர் ரூ.1.5 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளாராம்

15 நாள் காவல் tamiltoneindia :சென்னை: போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹீலர் பாஸ்கர் ரூ.1.5 கோடி ரூபாய் மக்களை ஏமாற்றி சம்பாதித்தது விசாரணையில் வெளியாகி உள்ளது.
போலீஸ் விசாரணையில் ஹீலர் பாஸ்கர் இதை வாக்குமூலமாக அளித்து இருப்பது அம்பலமாகி உள்ளது. சென்ற வாரம் ஹீலர் பாஸ்கர் இயற்கை முறையில் வீட்டில் எப்படி சுகப்பிரசவம் பார்க்க வேண்டும் என்று பயிற்சி அளிப்பதாக விளம்பரம் கொடுத்தார்.
இதையடுத்து அவர் போலீஸ் மூலம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இவரை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். 15 நாள் காவல்< ஹீலர் பாஸ்கர் மற்றும் அவரது மேலாளர் சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஐ.பி.சி. 420 மற்றும் 511 ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. மக்களை மோசடி செய்து ஏமாற்றுதல், தவறான செயல்களுக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. கோவை ஜே.எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் 15 நாள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.





விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை

இந்த நிலையில் விசாரணைக்கு ஹீலர் பாஸ்கர் தொடக்கத்தில் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. போலீஸ் விசாரணையில் பதில் அளிக்க முடியாது, உயரிய அதிகாரிகள் வந்தால் மட்டுமே பேச முடியும் என்று கூறியுள்ளார். அதேபோல் அறிவியல், மருத்துவம் தெரிந்த நபர்களிடம் மட்டுமே பேசவேன் என்று கூறியுள்ளார்.




மோசடி

இந்த நிலையில் தொடர் விசாரணையில் சில முக்கியமான விஷயங்களை தெரிவித்துள்ளார். அதன்படி, தனக்கு தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகள் தெரியும். டிவி, யூ டியூப், பயிற்சி வழங்குதல் மூலம் சம்பாதித்து வந்தேன். இதில் வருமானம் வந்ததால் முழு நேர தொழிலாக இதை செய்கிறேன். மருத்துவம் சார்த்த ஆலோசனைகளை கடந்த 8 வருடமாக இந்தியா முழுக்க சென்று மக்களுக்கு வழங்கி வருகிறேன் என்றுள்ளார்.




எவ்வளவு பணம்

அதேபோல், தன்னுடைய அனாடமிக் தெரபி ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளை மூலம் கடந்த 8 வருடங்களில் மட்டும் 1.5 கோடி ரூபாய் பணம் சம்பாதித்து இருக்கிறேன். அறக்கட்டளைக்கு நிதி உதவி, பயிற்சி வழங்க கட்டணம் என்று இவ்வளவு பணம் சம்பாதித்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த வாக்குமூலத்தை வைத்து இவர் மீது இன்னும் சில புதிய வழக்குகள் போடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: