During the raid, 18 of the total 42 women enrolled were found missing.
Chinniah Kasi : பீகாரை தொடர்ந்து உ.பி.யிலும் 24 சிறுமியர் மீட்பு!
அடுத்தடுத்து வெளிவரும் குழந்தைகள் காப்பக சித்ரவதைகள்
லக்னோ, ஆக. 6 -
பீகாரைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திலும், ஏராளமான சிறுமியர், காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டு, பாலியல்வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், இவர்களில் 18 சிறுமியரை காணவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், வல்லுறவு நடந்ததாக கூறப் படும் தியோரா மாவட்ட காப்பகத்தில் இருந்து24 சிறுமியர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.பீகார் மாநிலம் முசாபர் நகர் மாவட்டத் தில், ‘சேவாக் சங்கல்ப் இவான் விகாஷ் சமிதி’ என்ற அரசு உதவிபெறும் சிறுமியர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்தக் காப்பகத்தில் காது கேளாத, வாய்பேச முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட 11 வயது முதல் 17 வயது வரையிலான சிறுமியர் தங்கியிருந்தனர்.
இவர்களுக்கு இரவு உணவில் மயக்கமருந்து கொடுத்து அந்தக் காப்பகம் நடத்துபவர்கள் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாகியதும், சிலரை கொன்று புதைத்ததும் அண்மையில் வெளியுலகத்திற்கு தெரியவந்தது. அந்தக் காப்பகத்தை நடத்துவோரும், அங்கு பணியாற்றும் ஊழியர்களும் காப்பகத்தில் உள்ள 34 சிறுமியரை வல்லுறவுக்குஉள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள் ளது. போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து அந்தக் காப்பகத்தின் உரிமையாளர்கள், ஊழியர்கள் என 11 பேரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியரை வல்லுறவுக்கு உள்ளாக் கிய குற்றச்சாட்டில் அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகளின் பெயர்கள் அடிபடுவதால், உச்சநீதிமன்றம் தலையிட்டு, சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில்தான் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்கு தியோரா மாவட்டத்தின் காப்பகம்ஒன்றில் தங்கியிருந்த சிறுமியரும் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும், இதுவரை 18 சிறுமிகளை காணாமல் போயிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காப்பகத்திலிருந்து தப்பிவந்த சிறுமிஒருவர் போலீஸில் அளித்த புகாரையடுத்து,இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இரவுதோறும் வாகனம் ஒன்று, காப்பகத்திற்கு வந்து சிறுமியரை ஏற்றிச் செல்லும்;அதிகாலையில் மீண்டும் அவர்களை காப்பகத்திற்கு கொண்டுவந்து விடும் என்று சிறுமிதனது புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து அந்தக் காப்பகத்தில் சோதனையிட்ட போலீசார் 24 சிறுமியரை மீட்டுள்ளனர். 18 சிறுமியர் காணாமல் போயுள்ளனர் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.தற்போது காப்பகத்தை இழுத்து மூடிசீல் வைத்துள்ள போலீசார், அதனை நடத்திவந்த மோகன் திரிபாதி, கிரிஜா திரிபாதி ஆகியோரை கைது செய்துள்ளனர். காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்டு சிறுமிகள் அனைவரும் தற்போது மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பெண்கள் நலத்துறை செயலாளர் ரேணுகா குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இதனிடையே தியோரா மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை தற்காலிக பணிநீக்கம் செய்து, உத்தரப்பிரதேசத்தின் சாமியார் முதல்வர் ஆதித்யநாத் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வரும் காப்பகம் குறித்தும் 12 மணி நேரத்துக்குள் அறிக்கை அளிக்குமாறு ஏனைய மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர்உத்தரவிட்டுள்ளார்.
பீகாரில் 110 காப்பகங்களில் பாலியல் சித்ரவதை!
இதனிடையே, பீகாரிலுள்ள 110 காப்பகங்களில், சிறுமியர் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றனர் என்று டாடா சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.“பீகாரில் சுமார் 110 அரசு நிதியுதவி பெறும் காப்பகங்களில் சிறுவர் நீதிச் சட்டத்தை மீறும் வகையில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன; மேலும் இந்த அமைப்புகளில் தீவிரத்தன்மையின் அளவு வேறுபட்டாலும் சித்ரவதை நடப்பது உண்மைதான்; முசாபர்பூர் காப்பகத்திலும் கூட, அங்குள்ள சிறுமியர் திறந்த வெளி இடங்களில் அனுமதிக்கப்படவில்லை; அறைகளில் பூட்டி வைக்கப்பட்டனர்; கைத் தொழில் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் எதுவும் இல்லை; பெண்களுக்கு ஆடைகள், மருந்துகள் மற்றும் கழிப்பறைகளை கூட வழங்கவில்லை” என்று டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சைன்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
#தீக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக