ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

கொத்தடிமையாக தவித்த 14 தொழிலாளர்கள் மீட்பு ! புதுகோட்டை கரும்பு தோட்டத்தில் கொத்தடிமைகள்



 புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த பனையபட்டி ஊராட்சி மேலபனையூர் கரும்பு தோட்டத்தில் கொத்தடிமைகளாக சிலர் வேலை செய்து வருவதாக ஆர்டிஓ அலுவலகத்துக்கு ஆதிவாசி தோழமை கழக நிர்வாகி தனராஜ் தகவல் கொடுத்தார். ஆர்டிஓ ராஜாராம், தாசில்தார் பிரதாபகரன் மற்றும் போலீசார், கரும்புத்தோட்டத்துக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு கொத்தடிமையாக தவித்த விழுப்புரம் பாக்கம் பகுதியை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 14 பேரை மீ¢ட்டனர்.புதுவையை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர்,  தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்களை கொத்தடிமையாக விற்றுள்ளார். கரும்புதோட்ட சூப்பர்வைசர் நாகராஜனிடம் 2 முதல் 15 ஆண்டு வரை கொத்தடிமைகளாக இருந் துள்ளது விசாரணையில் தெரியவந்தது.  பாலியல் கொடுமை: கொத்தடிமையாக இருந்த 17 வயது பெண் ஒருவர் கூறுகையில், ‘எனக்கு சிறு வயதிலேயே திருமணமாகிவிட்டது. 2 குழந்தைகள் உள்ளனர். என்னை சூப்பர்வைசர் நாகராஜன்  அடித்து துன்புறுத்தி தினமும் பலாத்காரம் செய்வார். இதில் எனக்கு ஒரு குழந்தை பிறந் தது. யாரிடம் சொல்வது என தெரியாமல் தவித்து வந்தேன்‘ என கதறினார்.
கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர் களை சொந்த ஊருக்கு அனுப்பும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள் ளனர். திருமயம் போலீசார் வழக்கு பதிந்து, சூப்பர்வைசர் நாகராஜன், பாண்டுரங்கன் ஆகியோரை தேடி வருகின்றனர்.


அந்தியூரில் 4 பேர் மீட்பு
நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் திருவள்ளுவன் (48). இவரது மனைவி ஜோதி (40). இவர்களது மகன்கள் திபாகரன் (27), தினகரன் (24). இவர்கள் 4 பேரும், ஈரோடு மாவட்டம் அந்தியூர் கிராமத்தில் செந்தில் என்பவரது செங்கல் சூளையில் கடந்த 3 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனர். இந்நிலையில் செங்கல் சூளையிலிருந்து தப்பி வந்த தினகரன், கீழ்வேளூர் எம்.எல்.ஏ. நாகை மாலியை சந்தித்து விவரம் தெரிவித்தார். அவர் கடந்த 27ந்தேதி  கலெக்டரை நேரில் சந்தித்து மீட்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி கலெக்டர் முனுசாமி உத்தரவின்பேரில், மற்ற 3 பேரும் மீட்கப்பட்டனர். 4 பேரும் கலெக்டர் முனுசாமி, நாகை மாலி எம்எல்ஏ, டிஆர்ஓ ஆசியா மரியம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.dinakaran,com

கருத்துகள் இல்லை: