தினபூமி :புதுடெல்லி: காவிரி நீர் விவகாரத்தில்
சுப்ரீ்ம் கோர்ட் அளித்த தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் மற்றும்
ஒழுங்கு முறை குழு அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில்
தமிழக அரசின் சார்பில் நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
காவிரி
பிரச்சினை தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 6 வார
காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்
உத்தரவிட்டிருந்தனர். ஆனால் இதுவரையில் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய
அரசால் அமைக்கப்படவில்லை. சுப்ரீம் கோர்ட் இது தொடர்பாக விதித்த கெடுவும்
முடிவடைந்து விட்டது. ஆனால் மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கைக்கு
செவிசாய்த்ததாக தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 17 நாட்கள்
அ.தி.மு.க. எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அமளியில்
ஈடுபட்டு அவையை முடக்கினர். ஆனாலும் எந்த பலனும் கிட்டவில்லை.






















