திங்கள், 2 நவம்பர், 2026

திமுக தலைவர்களின் பார்ப்பன மயக்கம் - குமுறும் உடன்பிறப்புக்கள்

 திமுக ஆதரவாளர்களின் உட்கட்சி  கருத்து பரிமாறல்கள் வரவேற்கப்பட வேண்டிய  உன்னத ஜனநாயக பண்பு! அழுத்தமான கொள்கை சார்ந்த ஒரு கட்சியில்தான் இது சாத்தியமாகும்.
தவறான பாதையில் தலைவர்கள் சென்றாலும் தடுத்து நிறுத்தி திருத்தி வேண்டும் , வெறும் ஜால்றா அடிப்பது மட்டுமே கழக பணியாகாது 
சாந்தி நாராயணன் : முதுமை கலைஞரை  முடக்கியிருக்கிறது.
மூடநம்பிக்கைகள் திமுகவை முடக்கி விடாமல் இருக்கட்டும்.
திருஷ்டி பேசும் துரைமுருகன்
காவிரி புஷ்கரத்துக்கு பூஜை போடப்போன செயல்தலைவர் மனைவி  துர்க்கா 
ஆயுதபூசை கொண்டாடும் அன்பில் மகேஷ் 
சூரசம்ஹாரத்திற்கு பெரியார் அண்ணா கலைஞர் படத்தோடு சுவரொட்டி அடிக்கிற அனிதா  ராதாகிருஷ்ணன்.


நெற்றிக் குங்குமத்துடன் , காவி வேட்டிகளுடன்  மேடையேறும் பொறுப்பாளர்கள் 
என்று தொடர்ந்து தவறான இடங்களில் தலைகாட்டுகிறது சில இரண்டாம் கட்ட தலைமைகள்.
அதிமுகவை கொள்கையற்றவர்கள் என்று புரிந்தும், திமுகவினரை கொள்கையாளர்கள் எனத் தெளிந்துமே அவர்களை ஏற்றுக்கொள்கிறார்கள் மக்கள்.
தொடர்ந்த அதிமுகவின் வெற்றிகள் திமுகவை திசைமாற்றி சிந்திக்கத் தூண்டும் என்றால், 
ராமனை செருப்பாலடித்த போராட்டங்கள் நடைபெற்ற பின் 
வந்த தேர்தலில் தான் சரித்திர வெற்றியாக 200க்கும் மேற்ப்பட்ட இடங்களைக் கைப்பற்றியது திமுக என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 
புலிகளைக் கண்டு பூனைகள் சூடு போட்டுக்கொள்ளலாம். ஆனால் 
பூனைகளைப் பார்த்து புலிகள் தங்கள் கோடுகளை அழித்தால் அது அவலம்.
அதிமுகவாக மாற திமுக முயன்றால் திமுகவின் தேவை இருக்காது தமிழகத்திற்கு. 
கழகத்திற்கு , 
தலைமை ஏற்றிருக்கிற   செயல்தலைவருக்கு  
களங்கம் ஏற்படுத்த முனைகிறவர்களை, பகுத்தறிவுக்கு முரணாக செயல்படுகிற பொறுப்பாளர்களை  
சுட்டித் திருத்தாமல் விட்டால் சமஸ்களும் விஜயபாரதமும் எதிர்நோக்கி இருக்கிற பேரியக்கத்தின்  அஸ்தமனம் வெகுதூரத்தில் இல்லை.
ஏனெனில் தேர்தல் தோல்விகள் அல்ல. கொள்கை பிறழ்வுகளே ஓர் இயக்கத்தின் அஸ்தமனம். 
காலில் விழுவதை சுயமரியாதைக்கு இழிவென்று சுட்டி நிறுத்திய செயல்தலைவர்,
திடீர் காவிப்பாசம் காட்டுகிற மூடநம்பிக்கையாளர்களையும் பகுத்தறிவுப் பாதைக்கு மீட்டு வரட்டும்.
முதுமை கலைஞரை  முடக்கியிருக்கிறது.
மூடநம்பிக்கைகள் திமுகவை முடக்கி விடாமல் இருக்கட்டும்

கருத்துகள் இல்லை: