சனி, 15 ஆகஸ்ட், 2026

றீச்சா பாஸ்கரனின் அட்சய பாத்திர மோசடி

 Arun Ambalavanar : றீச்சா பாஸ்கரனின் அட்சய பாத்திர மோசடி
உண்மைகளை சுய தணிக்கை செய்யும் தமிழ் அச்சுப்பத்திரிகைகள்
கடந்த வாரம் சனிக்கிழமை றீச்சா உணவுத்திருவிழாவில் 2500 மக்களுக்குரிய உணவு மட்டுமே  கையிருப்பில் இருந்ததை நன்கு அறிந்த பாஸ்கரன் அதைவிட மூன்றுமடங்கு மக்களுக்கு ரிக்கற் கிழித்து உள்ளே அனுமதித்த அநியாயம் நடந்தது. அதனால்  பாதிக்கப்பட்ட மக்கள் அதனை  உடனேயே சமூக வைத்தளங்களில் வெளிப்படுத்தினார்கள்.  அந்த நியாயயக் குரல்கள் வைரலாகின. றெண்டிங் ஆகின.  
ஆனால் ஈழத் தமிழ் அச்சுப் பத்திரிகைகள்(பாரம்பரிய ஊடகங்கள் – Traditional Media)  எவையுமே இதனைச் செய்தியாக்கவில்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று அவை இன்றுவரையும் சுயதணிக்கை செய்து அழிச்சாட்டியம் பண்ணுகின்றன.


 உதயன், வலம்புரி, ஈழநாடு, காலைக்கதிர், யாழ் தினக்குரல் இவை எவையுமே றீச்சா சம்பவம் பற்றி எதுவுமே எழுதவில்லை என்றே நான் அறிகிறேன். நான் அறியாது ஏதாவது பத்திரிகைகள் இதனை எழுதியிருந்தால் அறியத் தாருங்கள். 
ஆக ஊரில் யாரும் சொல்லும் சாட்சியும் எடுபடாது என்பதை நன்கறிந்தே பாஸ்கரன் தன் மோசடிப் பொய்களை  அடுத்தநாள் தன் கட்டுப் பாட்டிலியங்கும் IBC, லங்காசிறி, தமிழ்வின், JVP Newsஇணைய ஊடகங்களில் அடிச்சுவிட்டார். கூடவே தன் பிச்சைக் காசுக்கு இயங்கும் மீடியா மதி முதலியவர்களையும் தன் IBC ல் புடம்போட்டு வளர்த்துவிட்டதாக அவர் நம்புகிற  ஜனனி குணசீலன் , வல்வை Sulax(அக்குட்டி), பிச்சுமணி, மாட்டு மணி முதலியவர்களையும் களத்திலிறக்கினார். 
இதில்,முதல் சொன்ன ஜனனியை விட மிச்சம் அனைவரும் அசலான கலைஞர்கள். பாஸ்கரனை விட்டு தூர இருக்கவே இவர்கள் இப்போது விரும்புகிறார்கள். ஏதோ விட்ட குறை தொட்ட குறைக்காக  “கரன் அண்ணாவின்”  வற்புறுத்தல் தாங்கமுடியாது  அக்குட்டியும் பிச்சுமணியும்   செய்த ஓட்டோ யூரியூப் வீடியோவில் இது தெளிவாகத் தெரிகிறது. றீச்சாப்  உணவுத் திருவிழாவில் நடந்த உண்மைகளை முழுமையாக  மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவர்கள் அவஸ்தைப்பட்டது தெளிவாகத் தெரிகிறது. 
ஆனால் இந்த அசலான கலைஞர்களை பாஸ்கரன் புற “மோட்” பண்ணவில்லை. ஜனனியையே புறமோட் பண்ணினார். தன் பணபலத்தால், செல்வாக்கால் ஜனனியை பிக் பொக்சில் நடிக்கவைத்தார். பிறகு ஜனனியை ஒரு Food Critic/Restaurant Reviewer ஆக்கினார் . இந்தளவுக்கும் ஜனனிக்கு தமிழே ஒழுங்காகச் தெரியாது. சாப்பாடு “செமையா” இருக்கு என்பதைத் தவிர
 ஜனனிக்கு ஒரு தமிழ் Food Critic பயன்படுத்தவேண்டிய  தமிழ்ச் சொற்கள் எதுவும் தெரியாது. இதுதான் பாஸ்கரனின் அடிப்படைப் பிரச்சனை. யாரை எங்கு போடவேண்டும் என்பது பாஸ்கரனுக்குத் தெரியாது. அற்புதமான Food Critic வேறு யாருமல்ல. நிராஜ் டேவிட் . [மட்டக்களப்பு உணவுகள் பற்றி நிராஜ் டேவிட் போட்ட முகநூல் பதிவு இதற்குச் சாட்சி] அவரை IBC எச்சக்கூட்டிவ் ஆக்கிவிட்டு வரவேற்பறையில் றிசப்சனிஸ்ட். ஆக இருக்கக்கூடிய ஜனனியை  பூட் கிறிற்றிக். ஆக்கியிருக்கிறார். 
இங்கு பன்கோண ஊடகப் பிரச்சனைகள் இருக்கின்றன.
1. உலகம் பூராகவும் அச்சு ஊடகங்கள் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன என்கிற யதார்த்தம் இருக்கிறது. ஆனால் அதைவிட்டு சளைக்காது போராடும் உலகத்து அச்சு பத்திரிகைகள் அதில் வெற்றி கண்டு வருகின்றன. தம் அச்சு ஊடக விற்பனையில் அவை விழுந்தாலும் அதனை  கட்டணம் கட்டிப் பார்கக்கக் கூடிய இணைய ஊடகத்துடன் இணைத்ததால் அவை வீழ்ச்சியை சந்திக்கவில்லை. 
2. ஈழ அச்சு ஊடகங்களுக்குரிய இன்னொரு பிரச்சனை இன்னமும் அவை தம் இணைக்கப்பட்ட இணைய ஊடகங்களுக்கு கட்டணம் அடவிடத் தயக்கம். இதற்குக் காரணம் சமகால ஊடகத்துறை பற்றிய முழுமையான தொழில் அறிவு அவற்றுக்கு கிடையாது. அவற்றில் முதலிடுபவர்களுக்கும் கிடைக்காது. தரமான நம்பகரமான பத்திரிகையாளர்களை மதித்து அவர்களின் ஆக்கங்களை மக்கள் வாங்கமாட்டார்கள் என்கிற தயக்கம்.  அதனால் இன்று  மேலதிகமாக அச்சு ஊடகங்களில் முதலிட்டு தரமான பத்திரிகையாளர்களை உருவாக்காமல் இருக்கிற சாமான்களை வச்சு ஈயோட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
3. மற்ற செய்திகளில் இணையத்தில் றெண்டிங் ஆகும் செய்திகளை கொப்பி  பண்ணி கட் பண்ணி பேஸ்ட் பண்ணுபவர்களுக்கு றீச்சா உணவுத் திருவிழாவில் நடந்த அக்கிரமங்களையும் அவ்வாறே செய்யப் பயம். பாஸ்கரனுக்குப் பயம்.
4. றீச்சாவில் நடந்த அக்கிரமங்களை சமூக வலைத்தளங்களிலிருந்தே அறிந்து, ChatGPT ல் சில கேள்விகள் கேட்டு 
[ 1. குறிப்பாக பாஸ்கரனே ஒப்புவித்த  600 கிலோ ஆட்டிறைச்சி எத்தனைபேருக்குக் காணும்? 
2. 6500 பேருக்கு மேற்பட்ட மக்களுக்கு பரிமாற எத்தனை பணியாளர்கள் தேவை? ]
ஆராய்ச்சி செய்யக்கூடிய பத்திரிகையாளர்கள் இல்லை.
உதாரணத்துக்கு உதயன் பத்திரிகை
கடந்த திங்கட்கிழமை போட்டிருக்கும் கூடிய தலைப்புச் செய்தி எது? போட்டிருக்கங்க் கூடியது எது, 
நான் உதயன் எடிட்டர் ஆக  இருந்திருந்தால்
தலைப்புச் செய்தி:
அறுநூறு கிலோ ஆட்டுறச்சிக்கு அடிபட்ட ஆறாயிரம் மக்கள்
முன்பக்க முதல் செய்தியொன்று:
“கரன் அண்ணாவின் ஆட்டிறைச்சி செமையா இருந்தது”. பிக் பாஸ் ஜனனி இலையைக் காவி செய்து ஏப்பம் விட்டபின் நடந்த களேபரம்.
இரண்டாவது முன்பக்கச் செய்தி:
மூவாயிரம் ரூபாய்க்கு ஒரேயொரு தொதல் துண்டா,? கால்கள் நடுங்க கதறியழுத இளமாது
ஆசிரியர் தலையங்கம் :
ஆறாயிரம் ஈழத்தவருக்கு 600 கிலோ  ஆட்டையைப் போட்ட பாஸ்கரன்
கடைசிப் பக்க செய்தி:
இணையத்திலும் தவறிப்போகாத பத்திரிகா தர்மம் 
RJ Ramesh இன் வீடியோவின் முழுநீள எழுத்துப் பதிவு
இப்படியான செய்திகளோடும் மற்ற முக்கியமான வடமாகாண செய்திகளோடும் உதயன் பத்திரிகை கடந்த திங்கட்கிழமை வந்திருந்தால் அது Sold out ஆகியிருக்கும். 
அதைச் செய்யத் தெரியாத பணக்காரர்களை ஊம்பும் ஊழல் சமூகமாக யாழ்ப்பாணத்தை மாற்றியது எது. ஊத்தை உதயனும் அதை ஊம்பும்  யாழ் தினக்குரலும் மற்ற பத்திரிகைகளான  ஈழநாடும் காலைக்கதிரும் வலம்புரியும் .....
ஒரு போர்வாளை விட பேனா வலிமையானது  எனபது பிற்காலத்தில் ஆங்கில காலனியாதிக்க அடிமைகளாக இருந்த நாங்கள் கேள்விப்பட்டது. அதனை ஆயிரமாயிரம் ஆணடுகளுக்கு முதலே அழகான தமிழில் சொன்னவர் எங்கள் குலத்தந்தை  வள்ளுவர். 
பகையகத்துச் சாவார் எளியர்; அரியர்
அவையகத்து அஞ்சாதவர்.” 
— குறள் 723
அதாகப்பட்டது  இன்றைக்கு ஈழப்போரில் செத்த மாவீரர்கள் எல்லோருக்கும் கோயில் கட்டுவேன் என்கிற அறுநூறு கிலோ ஆட்டிறைச்சிக் கள்ளன் பாஸ்கரன் சொல்கிறானே! . ஈழப்போரில் எதிரியோடு போரிட்டு இறந்தவர்களை வீரன் என்று சொல்கிற அதே திருவள்ளுவர் தான் அதைவிட மிகப்பெரிய  வீரர்  அவையில் அதாகப்பட்டது நீதி மன்றங்களில் துணிந்து சாட்சி சொல்பவர் மற்றும் யூரியூப் வருமானங்களுக்காக அன்றி நியாயத்துக்காக சொல்கிற அறமான பத்திரிகையாளர்களான சமகால  RJ Ramesh  முற்கால புலிகளால்,கொல்லப்பட்ட Rajini Thiranagama  அவர்களைப் போன்றவர்களைத்தான்

கருத்துகள் இல்லை: