ஞாயிறு, 16 மார்ச், 2025

கனடிய நீதி அமைச்சராக திரு ஆனந்த சங்கரியின் (TULF) மகன் கரி ஆனந்த சங்கரி பதவி ஏற்றார்

Justice Canada on X: "We are delighted to welcome the Honourable Gary  Anandasangaree as the Minister of Justice and Attorney General of Canada.  https://t.co/A004GxB5ym" / X

வீரகேசரி : கனேடிய வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ். ஈழத்தமிழர் கரி ஆனந்தசங்கரி!
கனடா (Canada) வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே கரி ஆனந்தசங்கரி ஆவார்.
இலங்கையில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து, தனது 13 ஆவது வயதில் புலம்பெயர்ந்து அவர் கனடா சென்றார்.



கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள் சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.

<span style="display: inline-block; width: 0px; overflow: hidden; line-height: 0;" data-mce-type="bookmark" class="mce_SELRES_start"></span>

கனடாவில் வாழ்கின்ற தமிழ் இளைஞர்களிடம் காணப்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்காக முன்னின்று செயற்படுபவராக கரி ஆனந்தசங்கரி அந்த காலங்களில் திகழ்ந்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் அத்தோடு, கனடா தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளிலும் அவர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, அத்துடன், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: