ஞாயிறு, 16 மார்ச், 2025

பாகிஸ்தான் உட்பட 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல தடை?

 மின்னம்பலம் -  Raj :  பாகிஸ்தான் உட்பட 41 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா செல்ல தடை விதிக்க முன்மொழிவு தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி புலம் பெயர்ந்து சட்டவிரோதமாகத் தங்கி இருப்பவர்கள் மற்றும் சட்டவிரோதமான வழிகள் மூலம் நாட்டுக்குள் நுழைய முற்படுபவர்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெரும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். List of 41 countries banned by US
இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் வசிக்கும் சட்ட விரோத குடியேறிகளுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இந்தியாவும் ஒன்று.



மேலும், தற்காலிக விசாவில் அமெரிக்காவுக்கு வந்து, விசா நிபந்தனைகளை மீறியவர்களும் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் குடியேறிகள் தவிர்த்து சட்டப்பூர்வமான வழிகளில் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கியிருப்பவர்களும் தற்காலிக விசாவில் தங்கிருப்போர்கூட நாடு கடத்தப்படலாம் என்கிற அச்சம் தொடர்கிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் உட்பட 41 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா செல்ல பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தடை விதிக்க முன்மொழிவு தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முன்மொழிவின்படி மூன்று நிலைகளில் நாடுகளை வகைப்படுத்தி கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது.

முதல் நிலையில் ஆப்கானிஸ்தான், இரான், சிரியா, கியூபா, வட கொரியா உள்ளிட்ட 10 நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நாடுகளுக்கு முழுமையாக விசா ரத்து செய்யப்படவுள்ளது.

இரண்டாவது நிலையில் எரிதீரியா, ஹைதி, லாவோஸ், மியான்மர், தெற்கு சூடான் ஆகிய 5 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளுக்கு சில நிபந்தனைகளுடன் பகுதி இடைநீக்கங்களுடன் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் சுற்றுலா, கல்வி, புலம்பெயர்ந்தோருக்கான விசா ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும்.

மூன்றாவது நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள பல நாடுகள், பாகிஸ்தான், பூட்டான் ஆகிய 26 நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நாடுகளுக்கு அமெரிக்கா குறிப்பிட்ட சில குறைபாடுகளைக் களைய 60 நாட்களுக்குள் அந்த நாடுகளின் அரசு மேற்கொள்ளாவிட்டால் விசாக்களில் பகுதி இடைநீக்கம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க அரசின் நிர்வாகத் துறை அதிகாரிகள், “இந்தப் பட்டியல் பல வாரங்களுக்கு முன்பு வெளியுறவுத் துறையால் உருவாக்கப்பட்டது. சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என மூன்று நிலைகளில் நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இறுதிப் பட்டியல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதில் மாற்றங்கள் இருக்கும். இந்த முன்மொழிவு அமெரிக்க நிர்வாகத் துறை செயலாளர் மார்கோ ரூபி ஒப்புதலுக்காகக் காத்திருப்பில் உள்ளது” என்று தெரிவித்தனர். List of 41 countries banned by US

இந்த முன்மொழிவு தொடர்பாக அமெரிக்க அரசு நிர்வாகம் இதுவரை எந்த அதிகாரபூர்வ விளக்கமும் கொடுக்கவில்லை. தற்போதைய பயணத்தடை மற்றும் கட்டுப்பாடு தொடர்பான செய்திகள் டிரம்ப்பின் முந்தைய ஆட்சிக்காலத்தில் பெரும்பான்மை இஸ்லாமிய நாடுகளுக்கு விதித்த தடையைப் போன்றே உள்ளது என்றும் பல திருத்தங்களைச் சந்தித்த அந்த கொள்கை இறுதியில் 2018- ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. List of 41 countries banned by US

கருத்துகள் இல்லை: