ஞாயிறு, 18 ஜூன், 2023

நடிகை விஜயலட்சுமிக்கு ஒரு நீதி நடிகை குஷ்புவுக்கு ஒரு நீதியா? கொந்தளிக்கும் உடன் பிறப்புக்கள்

 Mahesh S D. Dmk  :  நடிகைகுஷ்பு கண்ணீருடன் பேட்டியளித்த ஒரு மணி நேரத்தில்  அண்ணன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுத்து அவரை திமுகவில் இருந்து நீக்கி  கைது செய்யபடுகிறார் .
அண்ணன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பேசியதில் உண்மை இருந்தால் கூட அதில் நமக்கு உடன்பாடு இல்லை.
ஆனால் இவ்வளவு வேகமும் வீரியமும் திமுகவை விமர்சனம் செய்பவர்களை வச்சி செய்றதுல காட்டி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்..
யாரை திருப்திபடுத்த இந்த நடவடிக்கை?
தலைவர் ஸ்டாலினை ஒரு பெண்ணுடன் இணைத்து பேசிய போது வராத களங்கம்,
அந்த நடிகையை கலைஞருடன் இணைத்து பேசிய போது வராத கோபம்..
கனிமொழியை ஆ ராசாவுடன் இணைத்து பேசிய போது தெரியாத குற்றம்,
குமரன்களும் சிவாஜிகளும் பேசும் போது மட்டும் வருகிறது.
ஆருத்ரா முதல் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்யுங்கள்
கிருஷ்ணமூர்த்தி கைதை வரவேற்கிறோம்.


வார் ரூம் வைத்துக்கொண்டு சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பும் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்யுங்கள் கிருஷ்ணமூர்த்தி கைதை வரவேற்கிறோம்.
அரசையும், முதல்வரையும்,போலீஸ் அதிகாரிகளையும் தரக்குறைவாக பேசும் சவுக்கு சங்கரை கைது செய்யுங்கள் கிருஷ்ணமூர்த்தி கைதை வரவேற்கிறோம்.
பாஜகவின் டெய்சி சரணை ஆபாசமாக பேசி கடற்கரையில்
க...அ..பேன் என்று சொன்ன திருச்சி சூர்யாவை கைது செய்யுங்கள் கிருஷ்ணமூர்த்தி கைதை வரவேற்கிறோம்.
தன்னை பாலியல் ரீதியாக  சீமான் கொடுமை படுத்தியதாக நடிகை விஜயலட்சுமி  கூறிய தொடர் குற்றச்சாட்டுகளுக்கு சீமானை கைது செய்யுங்கள் கிருஷ்ணமூர்த்தி கைதை வரவேற்கிறோம்.
பொள்ளாச்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களை கைது செய்யுங்கள்
கிருஷ்ணமூர்த்தி கைதை வரவேற்கிறோம்.
தலைவர் கலைஞர்  மகளின் பிறப்பை கொச்சைப்படுத்தி பேசிய
எச்சை.ராஜாவை கைது செய்யுங்கள்.
கிருஷ்ணமூர்த்தி கைதை வரவேற்கிறோம்.
பெண் நிருபர் எல்லோரை பற்றியும் அருவருக்க தக்கவகையில் பேசிய
எஸ்.வி.சேகரை கைது செய்யுங்கள்
கிருஷ்ணமூர்த்தி கைதை வரவேற்கிறோம்.
மைலை ரமா முதல் பல பெண்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக
மிக தரம் தாழ்ந்து திமுக தலைவரை,திமுகவினரை விமர்சனம்
செய்பவர்களை கைது செய்யுங்கள்
கிருஷ்ணமூர்த்தி கைதை வரவேற்கிறோம்.
கொடை நாடு கொலையாளிகளை,
கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யுங்கள் கிருஷ்ணமூர்த்தி கைதை வரவேற்கிறோம்.
2016 ல் குட்கா வழக்கில் குற்றவாளியான குட்கா பாஸ்கரை கைது செய்யுங்கள் கிருஷ்ணமூர்த்தி கைதை வரவேற்கிறோம்.
கோவையில் பாஜக அலுவலகத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டு இளைஞர் மரணம் அடைந்த வழக்கில் வானதி சீனிவாசனை கைது செய்ய வேண்டாம் குறைந்தபட்சம் விசாரிக்க முடியுமா..? விசாரியுங்கள்
கிருஷ்ணமூர்த்தி கைதை வரவேற்கிறோம்.
Honey trap செய்கிறார்கள் என்று
காயத்ரி ரகுராம் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பாஜக தலைவர்  உட்பட Honey trap camera man களை கைது செய்யுங்கள்
கிருஷ்ணமூர்த்தி கைதை வரவேற்கிறோம்.
#ஊடகங்களை ஹோட்டலுக்கு வரவழைத்து பணமும்,தண்ணியும் கொடுத்து ஊடக விபசாரம் செய்ய சொன்ன கிஷோர்.கே.சாமியை கைது செய்யுங்கள் கிருஷ்ணமூர்த்தி கைதை வரவேற்கிறோம்.

கருத்துகள் இல்லை: