அந்த வகையில், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக-வினர் முற்றுகையிட்டனர். மேலும் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான தாக்குதலில் காயமுற்ற 4 வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளார். அந்த மனுவில் 9 இடங்களில் வருமான வரித்துறை சோதனை தடுக்கப்பட்டு அதிகாரிகள் தாக்கப்பட்டனர் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் வழக்கறிஞர் ராமச்சந்திரன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக