வெள்ளி, 24 மார்ச், 2017

கட்சியின் பெயரை அதிமுகவினரால் உச்சரிக்க முடியவில்லை.. துரைமுருகன்

சென்னை: அதிமுக தொண்டர்களால் தங்கள் கட்சியின் பெயரை கூட உச்சரிக்கக் முடியவில்லை என்று திமுக முதன்மை செயலாளரும், சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் தெரிவித்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவடைந்ததை அடுத்து காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவின் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, திமுக, தேமுதிக, பாஜக, நாம் தமிழர், மார்க்சிஸ்ட் என 7 முக்கிய கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  சசிகலாவுக்கு எதிர்ப்பு..00:50 சசிகலாவுக்கு எதிர்ப்பு.. 
 இந்தத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தைக் கைப்பற்ற அதிமுகவின் இரு அணிகளும் முட்டி மோதின. ஆனால் அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் அதிரடியாக புதன்கிழமை முடக்கி உத்தரவிட்டது. இதையடுத்து அதிமுகவின் சசிகலா, ஓபிஎஸ் கோஷ்டிகள் புதிய பெயர், சின்னம் கோரி நேற்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தது. இதனடிப்படையில் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) என்றும் சசிகலா அணிக்கு அதிமுக (அம்மா) என்றும் பெயர்கள் வழங்கப்பட்டன. ஓபிஎஸ் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் ஒதுக்கப்பட்டுள்ளது. சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து திமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரை முருகன் கூறுகையில், ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வெற்றிபெற்றும் கூட வளர்ச்சியடையாத தொகுதியாகவே இருக்கிறது. கட்சியின் பெயரைக்கூட அதிமுகவினரால் காப்பாற்ற முடியவில்லை. அதிமுக தொண்டர்களால் கட்சியின் பெயரை உச்சரிக்கக் கூட முடியவில்லை. இன்னும் 6 மாதத்தில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாக ஏற்படும். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவார். அதற்கு அடித்தளமாக ஆர்.கே.நகரில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
/tamil.oneindia.com/n

கருத்துகள் இல்லை: