புதன், 12 நவம்பர், 2014

முதலமைச்சர் பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் பொன்னார் பேச்சு! மதுரவாயில் பறக்கும் சாலை திட்டம் No more sabotage panneer asssured?

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்ற ஓ. பன்னீர்செல்வத்தை மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிப்பதாக முதல்வர் பன்னீர்செல்வம் உறுதியளித்தார். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் முதல்வர் பதவியை இழந்தார் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய அரசுடன் முதல்வர் ஓ.பி.எஸ்-ஸின் முதல் சந்திப்பு- பறக்கும் சாலை குறித்து பொன்னாருடன் பேச்சு
தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்ற பின்னர் யாரையும் சந்திக்காமல் இருந்து வந்தார். பொதுவாக முதல்வர் பதவி ஏற்பவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது வழக்கம். ஆனால் முதல்வர் பன்னீர்செல்வமோ யாரையுமே சந்திக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் முதல்வர் பன்னீர்செல்வத்தை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். முதல்வர் பதவியில் ஓ. பன்னீர்செல்வம் அமர்ந்த பிறகு அவர் மேற்கொண்ட முதலாவது சந்திப்பு இது. இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினோம். இத்திட்டத்தை செயலாக்குவது குறித்து பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்திருக்கிறார். மேலும் இதற்கான நிலம் கையகப்படுத்துதல் பிரச்சனைகள் குறித்தும் விவாதித்தோம். குளச்சல் துறைமுகத்தை மேம்படுத்த மத்திய அரசிடம் ஒப்படைக் கோரும் கடிதத்தையும் முதல்வரிடம் கொடுத்தேன். என்னால் இயன்ற அளவுக்கு தமிழகத்துக்கான திட்டங்களை கொண்டு வர முயற்சிப்பேன். இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 ராமேஸ்வரம் மீனவர்களை மீட்கும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்

/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: