கத்தி’ கதை திருட்டு வழக்கை கோபி வாபஸ் பெற்றது ஏன்?‘கத்தி’
கதைத்திருட்டு விவகாரம் தொடார்பான வழக்கு நேற்றுய் நீதிமன்றத்திற்கு
வந்தது. அப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது போடப்பட்டிருந்த வழக்கை
வாபஸ் பெற்றுவிட்டார் மீஞ்சூர் கோபி. நீதிமன்றமும் கோர்ட் நேரத்தை
வீணடித்ததாக கோபிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. பொருளாதார
சிக்கலில் இருக்கும் கோபிக்கு கோர்ட் வழக்கு செலவு செய்வதற்கெல்லாம் சக்தி
இல்லை. ஆனால் அவரது வாதத்திலிருக்கும் உண்மையை புரிந்துகொண்ட
வழக்கறிஞர்கள் குழு ஒன்று உதவிக்கு வந்திருக்கிறது.இந்த
வழக்கை வேறு மாதிரி கொண்டு போகவேண்டும். அதனால் இப்போது சற்று
வலுவில்லாமல் இருக்கும் இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டுமென்று
அறிவுருத்தினர். ஆக, மீஞ்சூர் கோபிய்யால் வாபஸ் பெறப்பட்டிருக்கும் இந்த
வழக்கு முன்னிலும் வேகமாக விஸ்வரூபம் எடுக்ககூடும் என்கிறார்கள். இதை
தெரிந்துகொண்ட ஏ.ஆர்.முருகதாஸ், டெல்லியிலிருந்து பிரபல வழக்கறிஞரை
அழைத்து வரப்போகிறாராம்.nakkheeran.in ;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக