புதுடில்லி, நவ.12_ ராஜஸ்தான் மாநிலம்
கங்கா நகர் பகுதியைச் சேர்ந்த பெண், 2012 இல் நிகல் சந்த் மேக்வால் மற்றும்
அவரது கூட்டா ளிகள், தன்னை பாலியல் வன்முறை செய்ததாக, காவல் நிலையத்தில்
புகார் அளித்தார். காவல் துறை விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு நியா யம்
கிடைக்காததால், அவர், ஜெய்ப்பூர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந் தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலை
மையிலான அமைச்சரவை யில், ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சராக பொறுப்பு
வகித்த மேக்வால், வழக்கு விசாரணையில் ஆஜரா காததால், அவரைத் தேடி
கண்டுபிடிக்குமாறு, காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட் டது.
அவரை எங்கு தேடி யும் கிடைக்கவில்லை என,
காவல்துறை தரப்பில் கூறப்பட்டதால், மேக் வாலுக்கு 2014 ஆகஸ்டில்,
ஜெய்ப்பூர் நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது. இந்நிலையில், மத்திய
அமைச்சரவையில் செய்யப் பட்ட மாற்றத்தில், மேக் வாலுக்கு, ரசாயனம் மற்றும்
உரத்துறைக்கு பதிலாக, பஞ்சாயத்து ராஜ் துறை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து,
டில்லியில் மேக்வால் தனக்கான புதிய துறையின் பொறுப்பை நேற்று (11.11.2014)
ஏற்றுக் கொண்டார்.
நீதிமன்றம் தாக்கீது குறித்து, மேக்வாலிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, காவல்துறையினர் தரப்பில்
அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு
எந்த தாக்கீதும் கிடைக்கவில்லை' என்றார். நீதிமன்றம் தாக்கீதுக் குப்
பின், பிரதமரின் ஒற்றுமை ஓட்டத்தை துவக்கி வைக்கவும், பிரத மரின்
அறிவுரைப்படி, கிராமத்தைத் தத்தெடுக் கும் நிகழ்ச்சிக்காவும், மேக்வால்
பலமுறை கங்கா நகர் வந்துள்ளதாக பகுதிவாசிகள் தெரிவித் துள்ளனர். எனினும்,
மேக் வாலை காணவில்லை என்றே காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கேள்வி
பாலியல் வன்முறை வழக்கில் நீதிமன்றம் தாக்
கீது அனுப்பிய நபர், மத்திய அமைச்சராக நீடிப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்
தெரிவித்துள் ளது. டில்லியில் அனை வரின் கண்முன் தெரியும் மத்திய அமைச்சர்
மேக் வால், ராஜஸ்தான் காவல் துறையினரின் கண்ணுக்கு மட்டும் தெரியாமல் போனது
எப்படி என, காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக