புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீட்டு தொடர்பான வழக்கில்
டில்லி கோர்ட்டில் நாளை இறுதி வாதம் துவங்க உள்ளது. இவ்வழக்கில் முக்கிய
குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, திமுக
எம்.பி.,கனிமொழி ஆகியோருடன் 15 பேர் மீதான வழக்குகள் குறித்த வாதம் நாளை
முதல் நடக்க உள்ளது.
2ஜி உரிமம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதனால் அரசுக்கு ரூ.30,984 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக 2012ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.முன்னர் எதிர்கட்சிகளும் மீடியாக்களும் ராஜா 176000 கோடி சுருட்டியுள்ளார் என்று கூறி திகாரில் அடைத்தார்கள் .இப்போ 30,984 கோடிஎன்று சொல்கிறார்கள்? முதல் தொகையை கூறியவர்களை தற்போது தேடி பொய் சொன்னதற்காக ஜெயிலில் அல்லவே போடவேண்டும் இவ்வழக்கை சிறப்பு நீதிபதி சைனி விசாரித்து வருகிறார்.
இவ்வழக்கில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 153 சாட்சிகள் மற்றும் எதிர்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 29 சாட்சிகள் ஆகியோரின் வாக்குமூலங்களை இந்த சிறப்பு நீதிபதி பதிவு செய்துள்ளார். 2011ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த வழக்கில் ராஜா உள்ளிட்ட 16 பேரின் வாக்குமூலங்களும் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. 2ஜி வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் இரண்டு குற்றப்பத்திரிக்கைகளில் 17 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள ராஜா, கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதி மனைவி தயாளு ஆகியோர் மீது கிரிமினல், மோசடி, ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் தாக்கல் செய்தல், லஞ்சம், ஊழல், அரசு அதிகாரிகளை தவறாக பயன்படுத்தியது, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிபதி சைனி, செப்டம்பர் 10ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நவம்பர் 10ம் தேதி இறுதி வாதத்தை துவங்க உத்தரவிட்டார். அதன்படி நாளை இறுதி வாதம் துவங்க உள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக