வியாழன், 13 நவம்பர், 2014

திருட்டு கதைகளால் நடிகரும் இயக்குனரும் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர்?

நடிகர்களே திருட்டு கதைகளை இயக்குனர்களுக்கு சொல்வதும் ,இயக்குனர்களே திருட்டு கதைகளை ஏதோ சொந்தத கதை போல முழக்குவதும் இனி பிரச்சனைதான் , திருட்டு டிவிடி யை விட இது இவர்களை அதிகமாக பாதிப்பதாக தெரிகிறது , ஏனெனில் முக்கால் வாசி கதைகள் திருட்டு கதைகள் தானே. ஆனால் மாட்டிக்கிறது அரிது. கத்தி கோஷ்டி மட்டும் நன்றாக மாட்டி கொண்டது .விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்ஸிகா, ஸ்ரீதேவி நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. கத்தி திரைப்படம் அதிக வசூல் செய்து விஜய்யின் இமேஜை தூக்கி நிறுத்தினாலும், ‘கதை திருட்டு’ என்கிற விமர்சனம் அவரை அதிகமாகவே பாதித்துவிட்டது.இனி நம் படத்திற்கு இப்படிப்பட்ட அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்று நினைத்தாரோ என்னவோ! படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக இயக்குனர் சிம்புதேவனிடம் ”இந்த கதை உங்களுடையது தானே? கத்தி படத்திற்கு வந்தது போன்ற பிரச்சனை இந்த படத்திற்கு வராது என உறுதுமொழிகொடுங்கள்” என்று கேட்டாராமஇது என்னோட கதை தான் என்று விஜய்யிடம் சொல்லிவிட்டாலும், இப்படி கேட்டுவிட்டாரே என சிம்புதேவன்
அப்செட்டாம். சிம்புதேவன் இயக்கிய முதல்படமான ‘இம்சை அரசன்’ என்னுடைய கதை என்று பிரபல ஓவியர் டிராட்ஸ்கி மருது பிரச்சனை செய்ததை யாரோ விஜய்யிடம் சொல்லியிருக்கிறார்கள் என்று குமுறிக்கொண்டிருக்கிறதாம் இயக்குனர் தரப்பு.

கருத்துகள் இல்லை: