பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மத்திய மந்திரி சபையை விரிவாக்கம் செய்தார்.அப்போது 21 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர்.புதிய
மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கலந்து
கொள்ளவில்லை. இந்த நிலையில் புதிய மந்திரிகளில் 8 பேர் கிரிமினல்
குற்றவழக்கு பின்னணியில் உடையவர்கள் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய்
மக்கான் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:பிரதமர் நரேந்திரமோடி அடிக்கடி இந்தியாவை சுத்தப்படுத்துவது பற்றி பேசுகிறார். ஆனால் அரசியலை அவர் சுத்தப்படுத்தவில்லை.தேர்தல்
பிரசாரத்தின் போது அவர் அரசியலில் இருந்து கிரிமினல்கள்
விரட்டப்படுவார்கள் என்றார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்
மாறிவிட்டார்.மந்திரிசபை மாற்றத்தின் போது குற்றப்பின்னணி உடைய 12
மத்திய மந்திரிகளை நீக்குவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரோ, அத்தகைய
மந்திரிகள் எண்ணிக்கையை 12–ல் இருந்து 16 ஆக உயர்த்தி விட்டார்.
>புதிய மத்திய மந்திரிகளில் ஒய்.எஸ்.சவுத்திரி சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.317 கோடி கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் உள்ளார். கடன் பாக்கியாளராக அறிவிக்கப்பட்டுள்ள அவர் மத்திய மந்திரி ஆகி உள்ளார்.>அதுபோல மற்றொரு மத்திய மந்திரியான ராம் சங்கர் கத்தாரியா மீது 23 கிரிமினல் வழக்குகள் உள்ளது. 8 அமைச்சர்களின் சொத்து மதிப்பு கடந்த 5 மாதங்களில் கணிசமாக உயர்ந்து விட்டது.மத்திய மந்திரி கிரிராஜ் சிங்கின் பாட்னா வீட்டில் திருட்டு போன போது, ரூ.50 ஆயிரம் காணாமல் போய் விட்டதாக மத்திய மந்திரி கூறினார். ஆனால் அவர் வீட்டில் திருடியவனை பிடித்த போலீசார், திருடனிடம் இருந்து ரூ.1½ லட்சம் மீட்டுள்ளனர்.>மத்திய மந்திரிக்கு அந்த பணம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. இதற்கெல்லாம் பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் கூறினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக