மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு ஆளுநருக்கு காயம்
ஏற்படக் காரணமாக இருந்ததாக கூறி 5 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 2
ஆண்டுகாலத்துக்கு அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்ற பாஜகவின் பட்நவிஸ் அரசு பெரும்பான்மையை
நிரூபிக்க இன்று காலை கூடியது. முதல் நடவடிக்கையாக பாஜகவின் பக்தே
சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்தாமல்
குரல் வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு சிவசேனா,
காங்கிரஸ் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குரல் வாக்கெடுப்பில்
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்து பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாக சபாநாயகர்
அறிவித்தார். ஆனால் இதனை ஏற்க முடியாது என்று சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள்
போர்க்கொடி தூக்கின.tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக