செவ்வாய், 11 நவம்பர், 2014

சகாயம் குழுவில் சேர அதிகாரிகள் மறுப்பு ? தயக்கம்? பயம் ? மறுத்து ஒதுங்கும் அதிகாரிகள்!

மதுரை: மதுரை மாவட்டத்தில், கிரானைட் முறைகேடு ஆய்வு குறித்து, ஆய்வு செய்யும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் குழுவில் இடம் பெற, அலுவலர்கள் தயக்கம் காட்டுகின்றனர். குழுவில் சேர அழைத்தாலும், 'நமக்கேன் பொல்லாப்பு' என, பலரும் ஒதுங்குகின்றனர். கிரானைட் கற்கள்: மதுரை மாவட்டத்தில், 39 லட்சத்து 30 ஆயிரத்து 431 கனமீட்டர் கிரானைட் கற்கள் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 'அரசுக்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு' என அப்போதைய கலெக்டர் சகாயம், அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அதன் பி,ன் கலெக்டராக இருந்த அன்சுல்மிஸ்ரா, கிரானைட் முறைகேடு தொடர்பாக, 20 வழக்குகளை பதிவு செய்தார். சகாயதையே பதவியில் இருந்து தூக்கி எறிந்த மம்மி தலைமையிலான அரசை கண்டு பயப்பட நியாயம் இருக்குல்லா? துணைக்கு போறவங்களையும் தூக்கிட்டா என்ன பண்றது?

தற்போதைய கலெக்டர் சுப்ரமணியன், 42 வழக்குகள் பதிவு செய்தார்.தமிழகம் முழுவதும் கனிமவளங்கள் கொள்ளை போனதாக, 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. தமிழக அரசும் இதற்கான அரசாணை பிறப்பித்தது.
ஆய்வுப்பணியில் உதவ, இரண்டு துணை கலெக்டர்கள், இரண்டு தாசில்தார்கள், இரண்டு புவியியலாளர்கள், நான்கு பணியாளர்கள், ஒரு போட்டோகிராபர், ஒரு வீடியோகிராபர் உட்பட, 14 பேர் தேவை என அவர் கேட்டார். ஆனால், இக்குழுவில் இடம்பெற அதிகாரிகள், அலுவலர்கள் பெரிதும் தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு காரணமாக அவர்கள் கூறியதாவது: சகாயம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி; அவர் முறைகேடுகள் குறித்து ஆய்வு அறிக்கை அளித்துவிட்டு சென்னை சென்று விடுவார். உதவப்போன நாம் உள்ளூரில் பணியாற்ற வேண்டும். அரசும் இந்த முறைகேடு விஷயத்தில் என்ன நிலையில் உள்ளது? என்பது குழப்பமாகவே உள்ளது. எனவே, ஆய்வுக்கு உதவப்போய் பிரச்னையில் ஏன் மாட்டிக்கொள்ள வேண்டும்?இவ்வாறு, தெரிவித்தனர்.
சகாயம் வரவில்லை: சகாயம் நேற்று மதுரை வந்து, விசாரணையை துவக்குவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் நேற்று மதுரை வரவில்லை. 'பிற மாவட்டங்களிலும் நடந்த கனிமவளக் கொள்ளைகளையும் சகாயம் குழு விசாரிக்க வேண்டும்' என 'டிராபிக்' ராமசாமி புதிதாக தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த மனு மீதான கோர்ட் உத்தரவை அறிந்தபின், விசாரணையை துவக்கலாம் என்பதால் சகாயம், மதுரைக்கு வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், சென்னை ஐகோர்ட்டில் நேற்று, வழக்கு விசாரணைக்கு வரவில்லை.dinamalar.com

கருத்துகள் இல்லை: