திங்கள், 10 நவம்பர், 2014

சினிமா வாய்ப்புக்காக நான் வேறு மாதிரி அட்ஜஸ்ட் செய்வேன் என்று எதிர்பார்கிறார்கள்! நடிகை சுர்வீன் சாவ்லா!

ஹேட் ஸ்டோரி 2’ இந்தி படத்தில் கவர்ச்சி அணுகுண்டாய் வெடித்தவர்... ஸாரி, நடித்தவர் சுர்வீன் சாவ்லா. தனது அதிரடிக் கவர்ச்சியால் ரசிகர்களைச் சுருட்டிய சுர்வீன், வெறும் ‘கிளாமர் கில்லி’ என்று மட்டும் தான் பெயர் பெற விரும்பவில்லை, கவர்ச்சியோடு இணைந்த அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்கவே தனக்கு ஆசை என்கிறார்.சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு வந்திருக்கும் சுர்வீனின் ஒரு சுறுசுறு பேட்டி...
 ‘ஹேட் ஸ்டோரி 2’ படத்தில் கிளுகிளு கிளாமர் காட்டியபிறகு உங்களுக்கு அதே மாதிரியான கதாபாத்திரங்கள் வருகின்றனவா? 
ஒரே மாதிரியான பாத்திரங்கள் என்று நினைப்பதெல்லாம் நாம்தான். நான் கவர்ச்சி காட்டுவதாக மற்றவர்கள் சொல்வதை கேட்டுக் கேட்டு அலுத்துப் போனதால் இப்போதெல்லாம் நான் அதைக் கண்டுகொள்வதே இல்லை. எனக்கு என்ன கதாபாத்திரம், அதற்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று மட்டும்தான் பார்க்கிறேன். நான் கவர்ச்சியாக, கிளுகிளுப்பாக நடிப்பதில் என்ன பெரிய தப்பு இருக்கிறது? ஏன் இதை மற்றவர்கள் விமர்சிக்கிறார்கள்!


ஆனால் ஆண்களை கிறங்கடிக்கும் கதாபாத்திரங்களை மட்டும்தானே ஏற்கிறீர்கள்?

நான் ஒரு வர்த்தகரீதியான சினிமா நடிகை. பிறரைக் கவரக்கூடிய விதத்தில் தோன்றும் அதேநேரம், நடிக்கவும் செய்பவள். எனது முதல் படத்துக்குப் பின் பலரும் என்னிடம் வந்து எனது நடிப்புத் திறமையைப் பாராட்டவே செய்தார்கள். எனக்கு இந்த கலைப்படங்களில் எல்லாம் ஆர்வமில்லை. நான் இங்கே ஆடவும், பாடவும், அழகாகத் தோன்றவும், நடிக்கவும்தான் வந்திருக்கிறேன்.

தற்போது உங்களை கிளுகிளு நடிகைகள் சன்னி லியோன், பூனம் பாண்டே, மல்லிகா ஷெராவத் ஆகியோரின் வரிசையில் வைத்துப் பேசுகிறார்களே?


அந்த நடிகைகள் எல்லாம் கவர்ச்சியோடு நடிப்பையும் வெளிப்படுத்திய ஏதாவது ஒரு படத்தையாவது கூறுங்களேன், பார்க்கலாம்! அவர்கள் அதைத்தான் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் நடித்த சினிமாக்களை பார்த்தால் அப்படி சொல்லமாட்டீர்கள்!

பொதுவாக நடிக்க வாய்ப்பு தருகிறவர்கள் பதிலுக்கு ‘படுக்கை வரை’ வருவார்கள் என்று சொல்லப்படுகிறதே.. அது சரிதானா?

நான் இங்கு நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். சில அனுபவங்கள் இன்றும் ஆறாமல் இருக்கின்றன. சினிமா வாய்ப்புக்காக வேறு மாதிரி ‘அட்ஜஸ்ட்’ செய்துகொள்ளச் சொன்னவர்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன். குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் அது அதிகம். ஆனால் இப்போது நான், அநாகரிக விண்ணப்பங்களை என் போக்கில் எப்படிக் கையாளுவது என்று கற்றுக்கொண்டிருக்கிறேன்.

இயக்குநர்கள் உங்களுக்கு கவர்ச்சிப் பாத்திரங்களை மட்டுமே தர முன்வருகிறார்கள் என்பது உண்மையா?
கவர்ச்சி என்று ஊதிப் பெரிதாக்குவது எல்லாம் ஊடகங்கள்தான். திரையுலகில் ஒரு நடிகர் அல்லது நடிகையின் திறமையைப் புரிந்து அதற்கேற்ற பாத்திரங்களைத்தான் தருகிறார்கள். வெறும் கவர்ச்சி மட்டும் காட்டச் சொன்ன பல வாய்ப்புகளை நான் நிராகரித்திருக்கிறேன்.

இதை நமது வீட்டினரும் பார்ப்பார்களே என்று எப்போதாவது காமிரா முன்பு ஆடைகளைக் களைய சங்கடப்பட்டிருக்கிறீர்களா?


தொழில்துறையில் உள்ள ஆச்சாரமான சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். ஆனால் உண்மையைச் சொல்வதென்றால், அவர்கள் எனது சினிமா உலக வாசம் குறித்து மதிப்பும், பெருமையும் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக எனது படங்களும் அவர்களை பெருமைப்படத்தான் வைக்கின்றன!

‘சுருக்’கென்று கூறி முடிக்கிறார், சுர்வீன் சாவ்லா.dailythanthi.com

கருத்துகள் இல்லை: