செவ்வாய், 11 நவம்பர், 2014

165 நாள் மோடி ஆட்சியில் முதலாளிகள் கொழிப்பு - சமூக நீதி ஒழிப்பு! அமைச்சரவையில் உயர்ஜாதியினர்! கிரிமினல்கள் !கி.வீரமணி கண்டனம்!

மத்திய பிஜேபி ஆட்சி இந்த 165 நாட்களில் சாதித்தது என்ன? மாற்றத்தை எதிர்நோக்கியிருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம் - அமைச்சரவையில் உயர் ஜாதியினரும், கோடீசுவரர்களும், குற்றப் பின்னணி உள்ளவர்களுமே குவிந்து கிடக்கிறார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,>பிரதமர் மோடியின் அமைச்சரவை - 165 நாட்களுக்குப்பின் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பல ஆங்கில நாளேடுகளின் செய்தி விளக்கத் தகவல்களின்படி இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் இயக்கப்படும் ஓர் அரசு என்பதால், அவர்களது ஆணைப்படியும் பலர் உள்ளே நுழைக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் சொன்னது என்ன  இப்பொழுது நடப்பது என்ன?

>தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி வித்தையின் ஒரு பகுதியாக” ஆட்சியில் அதிகம் பேர்களை (மன்மோகன் சிங் தலைமையில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு போல் இல்லாமல்) அமைச்சர்களாக்கிடாமல் ஆளுமையை அதிகப்படுத்தி நடத்தும் அரசாக எங்கள் அரசு அமையும் என்று கூறி, வாக்கு வங்கியிடம் தீவிரப் பிரச்சாரத்தைச் செய்தது - இவ்வளவு குறுகிய காலத்திலேயே காற்றில் பறந்து விட்டது. இதைப் பல ஏடுகளும் கூடச் சுட்டிக் காட்டத் தவறவில்லை.கொலை வழக்குக் குற்றப் பின்னணி உள்ளோர் அமைச்சர்களா?முதலாவதாகப் பதவியேற்ற மத்திய அமைச்சரவையில் குற்றப் பின்னணி உள்ளவர்களையெல்லாம் சேர்த்துள்ளனர்; இப்போது நீட்டப்பட்டுள்ள இந்த 66 பேர்களைக் கொண்ட அமைச்சரவையில் சுமார் 13 பேர்களுக்கு மேல் கொலை வழக்கு உட்பட பல்வகைக் குற்றப் பின்னணி உள்ளவர்கள் அமைச்சர்களாக்கப்பட்டு பதவியேற்றுள்ளனர்!>‘இங்கு யாருக்கும் வெட்கமில்லை’ என்ற கவிதை வரிகளுக்கு ஏற்ப, பிரதமர் மோடியின் ராஜ்ய பாரம் துவங்கி விட்டது!<>முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் நகலாட்சி<வெளியுறவுத்துறை  முதற்கொண்டு பல அணுகுமுறையில், முந்தைய காங்கிரசின் தலைமையில் நடந்த அரசே பரவாயில்லை, என்றும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை, தமிழக மீனவர் பிரச்சினையில் மிக மோசமான கொடுமையே தொடருகிறது என்றும் அவர்தம் கூட்டணியில் இடம் பெற்று, எப்போது வெளியே வந்து, தமது தவறுக்குக் ‘கழுவாய்’ தேடலாம் என்று கருதுகின்ற அவர்தம் தோழமைக் கட்சிகளே புலம்பிக் கொண்டிருக்கின்றன. வெளியேறத் துடித்துக் கொண்டுள்ளன!<‘மோடியை எதிர்ப்பவர்களுக்கு இங்கே வேலையில்லை; பாகிஸ்தானுக்கு அவர்கள் அனுப்பப்படுவார்கள்’ என்று தேர்தல் நேரத்தில் பகிரங்கரமாய்ப் பேசி, அதனால் தேர்தல் சட்ட விதிகளின்படி கிரிமினல் செக்ஷன்கள் கீழ் வழக்கில் சிக்கிய பீகார் கிரிராஜ் போன்ற பூமிகார் என்ற உயர் ஜாதி பார்ப்பன வகுப்பாளர்கூட புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.66 அமைச்சர்களில் முஸ்லீமுக்கு  இரண்டே இடங்கள் 165 நாள்களில் உண்மை - நிறம் வெளுத்து வெளியே வரும் நிலை! பீகாரில் மற்ற சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையைக் கவனித்தே பல பேர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்!ஜாட் ஜாதி, ராஜபுத்திரர்கள் பார்ப்பனர்கள் பெரிதும் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். 66 பேர்களில் சிறுபான்மையினர் முஸ்லீம்கள் இரண்டு பேர்களே! தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களும் சிலரே. கட்சி மாறியதற்கான பரிசுகளாகவே அமைச்சர் பதவி தரப்பட்டுள்ள விசித்திரமும் உண்டு! தென்மாநிலம் புறக்கணிப்பு<இன்றைய மத்திய அமைச்சரவையில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டுள்ளது என்று ‘தினமலரே’ சுட்டிக் காட்டியுள்ளது.கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் தென் மாநிலங்களிலிருந்து இடம் பெற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 27, மோடி அமைச்சரவையில் இடம் பெற்றவர்களோ வெறும் 8 பேர்கள்தான். இதையும் தென் மாநில மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.>காலையில் கட்சியில் சேர்ந்தால் மாலையில் மந்திரியாம்! <>காலையில் கட்சியில் சேர்ந்து மதியம் மத்திய அமைச்சர் பதவி, பரிசாகத் தரப்பட்டுள்ளது. சொந்தக் கட்சிக்குத் துரோகம் செய்தால் இந்தப் பரிசு என்றால், அது அரசியல் பொது வாழ்வில் எத்தகைய ஒழுக்கம் காப்பாற்றப்படுகிறது என்பது நடு நிலையாளர்களுக்குத்தான் வெளிச்சம்.
பிரதமர் அவரது விருப்பப்படி அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்க உரிமை உடையவர்தான் என்றாலும்கூட, இப்படி சமூகநீதி - சம வாய்ப்பு காற்றில் பறக்க விடப்படலாமா?
ஒவ்வொரு அமைச்சரின் சொத்துப் பட்டியல் மதிப்பும் சில நாளேடுகளில் வெளி வந்துள்ளன. ">கோடீசுவர அமைச்சர்கள்<>எல்லாம் கோடீசுவரர்கள்தான்! ரூ.4 லட்சம் சொத்து என்று ஒரே ஒரு காவிச் சாமியாரிணி அம்மையாரின் சொத்தாகத்தான் காட்டப்பட்டுள்ளது.>மற்றவை எல்லாம் குறைந்தபட்சம் ரூ.1.5 கோடியில் தொடங்கி மேலே சென்றுள்ளது. எனவே வர்க்கப் படியும், வருணப்படியும் (பெரிதும் பார்ப்பனர் மற்றும் “உயர்ஜாதியினர் தான், பணக்காரர்கள்தான் இந்த 66 அரசியல் நாயன்மார்களில்” இடம் பெற்றுள்ளனர்) ஹிந்துக்களே 63 சதவிகிதம் இடம் பெற்றுள்ளனர் என்று ஒரு தொலைக்காட்சி தகவல் கூறியது>இந்த வித்தைகளாலும், வீராவேச வசன  உறுதிமொழிகளாலும் எவ்வளவு காலம்தான் மக்கள் ஏமாறுவார்களோ தெரியவில்லை.

மாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே!

மாற்றம் வரும் என்று இணையத்தினைப் பார்த்து, வாக்களித்த இளைஞர் கூட்டம் - இப்போது மெல்ல மெல்ல விழித்துப் பார்த்து, வேதனையில் வீழ்ந்துள்ளது.

மாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு கிடைத்தது மாற்றம் அல்ல; ஏமாற்றமே!

மகளிர் உரிமை - மகளிருக்கு வாய்ப்பு என்பதுகூட எத்தனை விழுக்காடு 66 பேர்களில் - அதுவும்கூட உயர் ஜாதி வருணத்தவர்தான்!

தனியார் முதலாளிகள் கொழிப்பு - சமூக நீதி ஒழிப்பு!

பொருளாதாரத்தில் கண்ட மாற்றம் தான் என்ன? ‘கார்ப்பரேட்’ முதலாளிகளின் ஆதிக்க வளர்ச்சிதான்; பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் சிறிதும் லஜ்ஜையின்றி, விற்கத் தயார் என்று கூறுகிறார் நிதி அமைச்சர். இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது பிஜேபி அரசு. 

1. தனியார் முதலாளிகளைக் கொழுக்க வைப்பது,
2. இடஒதுக்கீட்டினை ஒழித்துக் கட்ட இதன் மூலம் வாய்ப்பு. 
புரிந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார். nakkheeran,in

கருத்துகள் இல்லை: