செவ்வாய், 9 நவம்பர், 2010

பாலாஜி சக்திவேலின் புதிய படம் வழக்கு எண் 18/9

Balaji Sakthivel`s new film title
கார்த்தி - தமன்னா நடித்து வெற்றிபெற்ற `பையா படத்தை தயாரித்த டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் புதிய படத்துக்கு, `வழக்கு எண் 18/9 என்று வித்தியாசமாக பெயர் சூட்டியிருக்கிறார்கள். பாலாஜி சக்திவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். `காதல் படத்தின் மூலம் சாமானிய மக்களின் யதார்த்த வாழ்க்கையை தத்ரூபமாக படமாக்கும் புதிய பாணியை புகுத்திய இவர், `கல்லூரி படத்துக்கு பிறகு இயக்கும் படம் இது. முழுக்க முழுக்க புதுமுகங்களை நடிக்க வைத்து இருக்கிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை, சேலம், தர்மபுரி பகுதிகளில் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் நடைபெற இருக்கிறது. லிங்குசாமியின் தம்பி என்.சுபாஷ் சந்திரபோஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை: