செவ்வாய், 9 மார்ச், 2010

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது
பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் கடந்த 2 நாட்களாக குழப்பம் நிலவி வந்தது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 186 பேர் ஆதரவளித்துள்ள நிலையில் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் எலெக்ட்ரானிக் மற்றும் ஓட்டுச்சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மசோதாவிற்கு ஆதரவாக 186 பேரும், எதிர்த்து ஒருவரும் ஓட்டளித்தனர் ஓட்டளித்தனர். வாக்கெடுப்பில் 3ல் இரண்டு பங்கு எம்பிக்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். திமுக அதிமுக எம்பிக்கள் மகளிர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர் அளித்துள்ளனர்.
இந்த வாக்கெடுப்பில் கூட்டணியில் உள்ள திரிமுணால் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. இந்த ஓட்டெடுப்பில் பகுஜன் சமாஜ் கட்சி கலந்து கொள்ளவில்லை. இந்த மசோதா அரசியல் சட்டப்படி சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களாலும், சபையில் இருந்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டுபங்கிற்கு அதிகமாகவும் ஆதரவு பெற்றதால் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அவை நாளை வரை ஓத்திவைக்கப்பட்டது.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவு

கருத்துகள் இல்லை: